Fri Sep 11, 2026 | 09:32 PM IST

முகமெல்லாம் புள்ளி புள்ளியா இருக்கா? விரைவில் மறைய வேப்ப இலைகள் இப்படி யூஸ் பண்ணி பாருங்க

How to use neem leaves for face acne: ஆரோக்கியமான மற்றும் இயற்கையான பளபளப்பைப் பெற வேம்புவை சருமத்திற்கு பயன்படுத்துவது நன்மை பயக்கும். வேம்புவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை சுத்தப்படுத்தி, முகப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கிறது. இதில் முகப்பருக்களை நீக்க வேம்பு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.

How to use neem leaves for pimples and dark spots: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் சருமம் தொடர்பான பிரச்சனைகளும் அடங்கும். பொதுவாக, வயதாகும் போதே முகத்தில் பருக்கள், சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் அல்லது தொய்வுற்ற தோல் போன்ற பல பிரச்சனைகளை சந்திப்பது வழக்கம். ஆனால், இன்றைய நவீன காலத்தில் மோசமான காரணிகளால் நாம் இளம் வயதிலேயே பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது.

ஆனால், இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருப்பதாக தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் குப்பை உணவுகளை அதிகம் உட்கொள்வது, புற ஊதா கதிர்களை நேரடியாக வெளிப்படுத்துவது, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை போன்றவை சருமத்தை இது போன்ற வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: சரும ஆரோக்கியம் பற்றிய கவலையா.? இந்த 3 மந்தர பொருள் போதும்.. மாயாஜாலம் செய்யும்.!

முகப்பருக்கள் நீங்க என்ன செய்வது?

இது போன்ற சூழ்நிலையில், சருமத்தில் காணப்படும் பருக்களை நீக்குவதற்கு மக்கள் பலரும் சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த சருமப் பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றில் உள்ள இரசாயனப் பொருள்கள் காரணமாக, சருமம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாகக் குறைந்தாலும், பல பக்க விளைவுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே முடிந்தவரை இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கலாம். அவ்வாறு சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைக் குணப்படுத்துவதில் வேப்ப இலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வேப்பிலையின் மருத்துவ குணங்கள்

நீண்ட காலமாகவே ஆயுர்வேத வைத்தியங்களில் சிறந்து விளங்கும் வேப்பிலையானது எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். இது பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். இந்த பண்புகள் நிறைந்த வேப்பிலை சரும பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், கோடையில் ஏற்படும் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது.

  • வேம்பின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது. இவை அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
  • முகத்திற்கு வேப்பிலை ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்துவது அதன் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற இது ஒரு நல்ல ஆயுர்வேத தீர்வாகும்.
  • ஆயுர்வேதத்தில் வேம்பு சருமத்திற்கு ஒரு நல்ல மருந்தாகக் கருதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெற வேம்பு இலைகள், வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பப்பட்டை பொடி போன்றவை நம் முன்னோர்களின் குறிப்புகளில் பயன்படுத்தப்பட்டது. இதில் வேப்ப இலைகளால் ஃபேஸ் ஸ்க்ரப்பைத் தயார் செய்யும் முறையைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: அரிப்பு, தடிப்பு பிரச்சனையால் அவதியா? அதிலிருந்து உடனே விடுபட இந்த ரெமிடிஸ் அப்ளை பண்ணுங்க

வேப்பிலை ஃபேஸ் ஸ்க்ரப் தயாரிக்கும் முறை

ஒரு கிண்ணம் புதிய வேப்ப இலைகளை எடுத்து அதை தண்ணீரில் நன்றாக அரைக்க வேண்டும். பின்னர், அதில் தேன் மற்றும் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்யலாம். இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவி கைகளால் முகத்தை லேசாக மசாஜ் செய்து 20-25 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு முகத்தைக் கழுவி விடலாம்.

வேப்பிலை ஃபேஸ் ஸ்க்ரப் பயன்படுத்துவதன் நன்மைகள்

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க

கோடைக்காலத்தில் முகத்தில் வேப்பம்பூ ஸ்க்ரப் தடவுவது முகப்பருவை கணிசமாகக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு வேப்பிலைகளில் குளிர்ச்சி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதே கரணமாகும். இவை வீக்கத்தைக் குறைக்கவும், சரும பாக்டீரியாக்களை நீக்கவும், தொற்று மற்றும் ஒவ்வாமை போன்ற எதிர்விளைவுகளைத் தடுக்கவும் உதவுகிறது. கோடை, குளிர் என எந்த காலநிலையிலும் இதைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.

வறண்ட சருமத்தை நீக்க

வேம்பில் வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை சருமத்தை ஈரப்பதமாக வைப்பதன் மூலம் வறட்சியைக் குறைத்து, சருமத்தின் இயற்கையான மென்மையை மீட்டெடுக்க உதவுகின்றன. எனவே இதைத் தொடர்ந்து பயன்படுத்துவது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Neem For Face: “காஸ்ட்லி காஸ்மெட்டீக்ஸுக்கு டாட்டா”... ஒரு கைப்பிடி வேப்பிலையை முகத்திற்கு இப்படி பயன்படுத்திப் பாருங்க!

Image Source: Freepik

Read Next

‘டபுள் சின்’ உங்க அழகையே கெடுக்குதா? - 7 நாட்களில் தீர்வு கிடைக்க இந்த சிம்பிள் பயிற்சிகள், வீட்டுவைத்தியங்களை ட்ரை பண்ணுங்க...!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content