Fri Sep 11, 2026 | 10:21 PM IST

Doctor Verified

இந்த ஐந்து செய்முறைகளுடன் டீயைத் தயார் செய்து குடிங்க.. தேநீரின் அபரிமிதமான சக்தியைப் பெறலாம்

நம் அன்றாட வழக்கத்தில் நாம் தயாரிக்கக்கூடிய தேநீரை ஆரோக்கியமானதாக மாற்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு தேநீரை அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாக மாற்றுவதற்கு என்னென்ன பொருள்களைச் சேர்க்கலாம் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்று காலை எழுந்ததும் பலரும் முதலில் எடுத்துக் கொள்ளும் பானம் காபி, டீ போன்றவையே ஆகும். ஆனால், இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என நினைக்கிறீர்களா? உண்மையில், காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ அருந்துவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். எனினும், இதைக் கைவிடாமல் இருப்பது கஷ்டமானதாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, தேநீரை அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த ஒரு பானமாக மாற்றலாம். இதில் மதிய நேரத்தில் அருந்தக்கூடிய கருப்பு தேநீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இரைப்பை குடல் மருத்துவரான சௌரப் சேத்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணரின் கருத்து

இது குறித்து இரைப்பை குடல் நிபுணரான சௌரப் சேத்தி அவர்கள் தனது பதிவில் கூறியதாவது,”நான் ஒரு இரைப்பை குடல் மருத்துவர். எனது மதிய நேர கருப்பு தேநீரை 5 எளிய படிகளில் அழற்சி எதிர்ப்பு, குடல் ஆரோக்கியமான பானமாக மாற்றுவது எப்படி என்பது இங்கே என்று குறிப்பிட்டுள்ளார்.

படி 1

நிபுணரின் கூற்றுப்படி, “உங்கள் கருப்பு தேநீர் இலைகளுடன் கொதிக்கும் நீரில் தொடங்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். கருப்பு தேநீரில் பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை நிறைந்துள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.. இந்த டீ குடிங்க..

தேயிலை மரங்கள் சாகுபடி மற்றும் பயன்பாட்டில் நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். பல நாடுகளில் உள்ள மக்கள் தேநீர் அருந்தி, வெவ்வேறு பகுதிகள் மற்றும் தனிப்பட்ட ரசனைகளுக்கு ஏற்ப பச்சை தேயிலை, ஊலாங் தேநீர் அல்லது கருப்பு தேநீர் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். தேநீரில் உள்ள பாலிஃபீனால்கள் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் தடுப்பு மற்றும் லிப்பிட் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதில் நல்ல விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

படி 2

இரண்டாவது படியாக, இந்த தேநீர் இலைகளைக் காய்ச்சும் போது, ஒரு சிறிய துண்டு புதிய இஞ்சியைச் சேர்க்க வேண்டும். தேநீரில் புதிய இஞ்சி சேர்ப்பது குடல் இயக்கத்தை அதிகரிக்கவும் மற்றும் செரிமானத்திற்கும் உதவுகிறது என மருத்துவர் கூறுகிறார்.

உண்மையில், தேநீரில் இஞ்சி சேர்ப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தலாம். மேலும் இது வீக்கத்தைக் குறைக்கவும், குமட்டலைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது. எனவே தான் தேநீரில் இஞ்சி சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

படி 3

மூன்றாவது படியாக, சில ஏலக்காய் காய்களை நசுக்கி அதில் போட மருத்துவர் பரிந்துரைக்கிறார். இவ்வாறு தேநீரில் ஏலக்காய் சேர்ப்பது வீக்கத்தைக் குறைக்கவும், சர்க்கரை இல்லாமல் இயற்கையாகவே இனிமையான நறுமணத்தைச் சேர்க்கவும் உதவுவதாக மருத்துவர் கூறுகிறார்.

இஞ்சியைப் போலவே, தேநீரில் ஏலக்காய் சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஏலக்காய் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகவும், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பால் மற்றும் வெல்லம் சேர்த்த தேநீர் குடிக்கிறீர்களா.? உடனே நிறுத்துங்கள்.. நிபுணர்கள் எச்சரிக்கை.!

படி 4

நான்காவது படியாக, “தேநீரில் ஒரு சிறிய துண்டு கிராம்பு சேர்க்க வேண்டும்” என மருத்துவர் கூறுகிறார். மேலும் அவர் இதில், “யூஜெனால் உள்ளது. இது கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கும் ஒரு கலவை என குறிப்பிடுகிறார்.

யூஜெனால் நிறைந்த சைசிஜியம் அரோமாட்டிகத்தின் (கிராம்பு) பகுதி, கல்லீரல் சிரோசிஸில் உயிர்வேதியியல் மற்றும் ஹிஸ்டோபோதாலஜிக்கல் மாற்றங்களை மாற்றியமைக்கிறது. மேலும் இது கல்லீரல் செல் பெருக்கத்தைத் தடுக்கிறது.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

படி 5

இறுதி படியாக, “தேநீர் காய்ச்சி முடிந்ததும், அதை வடிகட்டி சிறிது குளிர்விக்க விட வேண்டும். பின்னர் நீங்கள் விருப்பமான இனிப்புக்காக ஒரு துளி தேன் சேர்க்கலாம்” என மருத்துவர் பகிர்ந்துள்ளார்.

பொதுவாக, தேநீரில் தேன் சேர்ப்பது அதன் சுவையை மேம்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொண்டை புண் மற்றும் இருமலைக் குணப்படுத்தவும், குமட்டல் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை நீக்கவும் மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இது தவிர, தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

எனவே தேநீரை விரும்பும் நபர்கள், அதை ஆரோக்கியமாக மாற்ற இந்த வழிகளில் தேநீரைத் தயார் செய்யலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: UTI பிரச்சனையிலிருந்து உடனடி நிவாரணம் பெற இந்த ஒரு ஹெர்பல் டீ குடிங்க.. மருத்துவர் தரும் டிப்ஸ் 

Image Source: Freepik

Read Next

BP கட்டுக்குள் இருக்க... தினமும் முருங்கைக் கீரை சாப்பிடுங்க – மருத்துவர் சிவராமன் பரிந்துரை!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 27, 2025 16:16 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content