Sat Sep 12, 2026 | 12:03 AM IST

Doctor Verified

உடல் வலிக்கு எளிய தீர்வா பேக்கிங் சோடா.? மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம்..

மூட்டு வலி, முதுகு வலி உள்ளிட்ட உடல் அலர்ஜிகளுக்கு பேக்கிங் சோடா (Sodium Bicarbonate) எவ்வாறு உதவுகிறது என்பதை மருத்துவர் கார்த்திகேயன் அறிவியல் அடிப்படையில் விளக்குகிறார்.

நம் உடலில் ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் அலர்ஜி (Inflammation) போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எளிய வீட்டு வைத்தியமாக பேக்கிங் சோடா பயன்படலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கி இருக்கிறார்.

Video Link: https://youtu.be/I6ydKumflzM

பேக்கிங் சோடா – அறிவியல் பூர்வ விளக்கம்

* பேக்கிங் சோடா அல்லது சோடியம் பைகார்பனேட் (NaHCO3) என்பது காரத்தன்மை கொண்ட (Alkaline) பொருள். இதன் pH அளவு 7-க்கு மேல் இருக்கும்.

* உடலில் அலர்ஜி ஏற்படும் போது pH குறைந்து அமிலத்தன்மை (Acidity) அதிகரிக்கிறது.

* பேக்கிங் சோடாவை உட்கொள்ளும் போது அது அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்தி, காரத்தன்மையை மீட்டெடுக்க உதவுகிறது.

* இதன் செயல்முறை ஆண்டாசிட் மருந்துகள் (antacids) செயல்படும் விதத்தோடு ஒத்ததாகும்.

how-excess-salt-consumption-impacts-your-body-01

அலர்ஜி – பல நோய்களின் அடிப்படை காரணம்

உடலில் ஏற்படும் பல வலிகளுக்கும், இதய நோய்கள், பக்கவாதம் (Stroke) போன்ற பல கடுமையான பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் அலர்ஜியை என்று மருத்துவர் கூறுகிறார். பேக்கிங் சோடா, இந்த அழற்சியைக் குறைத்து வலிகளை கட்டுப்படுத்த உதவலாம் என்பதே அவரது கருத்து.

எவ்வாறு எடுத்துக்கொள்வது?

* 1/4 தேக்கரண்டி (1-1.5 கிராம்) பேக்கிங் சோடா

* 250 மிலி அறை வெப்பநிலை தண்ணீர்

* காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்

* இதை தினமும் குடிக்கக் கூடாது.

* 20 நாட்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 10 முறை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

* அதன் பிறகு 1-2 மாதங்கள் இடைவெளி விட்டு தான் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

* வயிற்று வலி, வாந்தி, இரத்த அழுத்தம் அதிகரித்தால் உடனே நிறுத்த வேண்டும் என அவர் எச்சரிக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்: Baking Soda Boost: பேக்கிங் சோடா வைத்து பல் துலக்கினால் பற்கள் உண்மையில் வெள்ளையாகுமா?

இது மாய மருந்தல்ல!

பேக்கிங் சோடா மட்டும் அனைத்து வலிகளையும் குணப்படுத்தும் என்று நம்ப வேண்டாம் என டாக்டர் கார்த்திகேயன் வலியுறுத்துகிறார். இது ஒரு துணை சிகிச்சை மட்டுமே.

அலர்ஜியை குறைக்கும் பிற இயற்கை தீர்வுகள்

* மஞ்சள் – இதில் உள்ள குர்குமின் அலர்ஜியை குறைக்கும்.

* ஒமேகா-3, மக்னீசியம் – மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவும்.

* திராட்சை, நீல நிற பழங்கள் – ஆன்டோசயனின் (Anthocyanin) நிறைந்தவை, அழற்சிக்கு எதிராக செயல்படும்.

* வால்நட் (Walnuts) – மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.

மேலும், அதிக உப்பு, சுத்திகரிக்கப்பட்ட மாவு, வறுத்த மற்றும் பேக்கரி உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

all piosejasopd

வாழ்க்கை முறையின் பங்கு

மருத்துவர் கார்த்திகேயன் வலியுறுத்துவது:

* தினசரி 20 நிமிட நடைபயிற்சி

* குறைந்தது 7–8 மணி நேர தூக்கம்

* ஆழ்ந்த சுவாசப் பயிற்சி

இவை அனைத்தும் அழற்சியை குறைத்து உடல்நலத்தை பாதுகாக்க உதவும்.

இறுதியாக..

பேக்கிங் சோடா என்பது சமையலறை பொருள் என்றாலும், சரியான முறையில் பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் வலிகளுக்கு துணை சிகிச்சையாக அமையலாம். ஆனால், அதை மட்டுமே நம்பாமல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் மருத்துவர் ஆலோசனையுடன் வாழ்க்கை முறையை சரிசெய்வதே சிறந்த தீர்வாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவ வல்லுநரின் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்ட ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனையை பெறவும்

Read Next

நல்ல தூக்கம் வேண்டுமா? தூங்கும் முன் இந்த இரண்டு பொருள்கள் கலந்த தண்ணீரைக் குடிங்க..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 24, 2025 12:09 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content