Sat Sep 12, 2026 | 12:41 AM IST

Doctor Verified

இந்த 4 தொற்றுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.! தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்..

புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் 4 முக்கிய தொற்றுகள் குறித்து நியூரோமெட் கிளினிக்கின் நரம்பியல் நிபுணர் டாக்டர் பிரியங்கா செஹ்ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவை என்ன, எப்படி தடுக்கலாம் என்பதை இங்கே அறிக.

புற்றுநோய் என்பது உலகளவில் பெரும்பாலான மரணங்களுக்கு காரணமாக இருக்கும் தீவிர நோயாகும். இதன் ஆபத்தை குறைக்க, சீரான மருத்துவ பரிசோதனை அவசியம். ஆனால், பலர் கவனிக்காத ஒரு முக்கிய அம்சம் உள்ளது. சில தொற்றுநோய்கள் புற்றுநோயின் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கக் கூடியவை. நியூரோமெட் கிளினிக்கின் நரம்பியல் நிபுணர் டாக்டர் பிரியங்கா செஹ்ராவத், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நான்கு முக்கிய தொற்றுகளை விளக்குகிறார்.

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நான்கு முக்கிய தொற்றுகள்

1. கருப்பை (Uterine) தொற்று

பெண்களிடம் பொதுவாக காணப்படும் கருப்பை தொற்று, சிகிச்சை பெறாமல் விட்டால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) மற்றும் கருப்பை புற்றுநோய் (Uterine Cancer) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். அதனால், கருப்பை தொடர்பான எந்தவொரு வீக்கம் அல்லது வெண்கடுப்பு பிரச்சனை இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம் என டாக்டர் செஹ்ராவத் கூறுகிறார்.

2. மனித பாப்பிலோமா வைரஸ் (HPV)

HPV என்பது பாலியல் தொடர்பு மூலம் பரவும் வைரஸ். இது உடலில் நுழைந்து செல்களின் DNA அமைப்பை மாற்றுகிறது, இதனால் அசாதாரண செல் வளர்ச்சி ஏற்பட்டு புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். குறிப்பாக பெண்களில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு இதுவே முக்கிய காரணம். நிபுணர்கள் கூறுவதுபோல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு HPV மிகவும் ஆபத்தானது. இதனை தடுக்க HPV தடுப்பூசி போடுவது மிக முக்கியம் மற்றும் பாதுகாப்பான உடலுறவை கடைபிடிக்கவும்.

3. ஹெபடைடிஸ் பி வைரஸ் (HBV)

HBV என்பது கல்லீரல் செல்களைத் தாக்கும் வைரஸ் ஆகும். இது நாள்பட்ட வீக்கம் (Chronic Inflammation) ஏற்படுத்தி, நீண்ட காலத்தில் கல்லீரல் புற்றுநோய் (Liver Cancer) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த வைரஸ், HCV (Hepatitis C Virus) உடன் இணைந்தால் ஆபத்து இன்னும் அதிகம். மேலும், சிரோசிஸ் (Cirrhosis) இருப்பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும். இதனை தடுக்க ஹெபடைடிஸ் பி தடுப்பூசி கட்டாயம் மற்றும் ஊசி, ரேசர் போன்றவற்றை பகிர்ந்து பயன்படுத்த வேண்டாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஊசி போடும்போது மயக்கம் வருதா.? என்ன காரணம்.? எப்படி தடுக்கலாம்.? மருத்துவர் விளக்கம்..

4. எச்.ஐ.வி (HIV)

HIV நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்தாது. ஆனால் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது, இதனால் புற்றுநோய் செல்களுக்கு எதிராக உடல் போராட முடியாது. HIV உள்ளவர்களில் லிம்போமா (Lymphoma) மற்றும் சர்வைக்கல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதனை தடுக்க பாதுகாப்பான உடலுறவைப் பின்பற்றவும். இரத்த பரிசோதனைகள் மூலம் தங்களை சோதிக்கவும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக உட்கொள்ளவும்.

புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பது எப்படி?

* தடுப்பூசி போடுதல்: ஹெபடைடிஸ் பி மற்றும் HPV வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். இது தொற்றுநோயை மட்டுமல்ல, புற்றுநோயையும் தடுக்கும்.

* பாதுகாப்பான உடலுறவை கடைபிடிக்கவும்: எப்போதும் கண்டோம் பயன்படுத்தவும், பாலியல் தொடர்பு கொண்டவர்களை கவனமாகத் தேர்ந்தெடுக்கவும்.

* தனிப்பட்ட சுகாதாரம்: கைகளைக் கழுவுதல், பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்தல், பொதுக் கழிப்பறைகளை சுத்தமாக பயன்படுத்துதல் போன்ற பழக்கங்கள் அவசியம்.

இறுதியாக..

புற்றுநோய் ஒரு நோய் அல்ல, அது ஒரு எச்சரிக்கை. நாம் கவனிக்காமல் விடும் சிறிய தொற்றுகள், காலப்போக்கில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். தடுப்பூசி, பாதுகாப்பான பழக்கங்கள், மற்றும் சீரான மருத்துவ பரிசோதனை மூலமே புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான மருத்துவ விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டுள்ளது. இது மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்றாக அமையாது. எந்த அறிகுறியும் இருந்தால், தகுந்த நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.

Read Next

கேன்சரை விரட்டியடிக்கும் திராட்சை.! மருத்துவர் கூறும் உண்மை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 18, 2025 10:00 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content