Fri Sep 11, 2026 | 11:14 PM IST

Doctor Verified

இடுப்பு வலியைப் சாதாரணமா நினைக்காதீங்க.. உங்களுக்கு இந்த 4 கடுமையான பிரச்சனை வரலாம்

இடுப்பு வலியைப் பலரும் புறக்கணிக்கின்றனர். ஆனால், இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். இந்த இடுப்பு வலி நடப்பதை கடினமாக்குகிறது. மேலும் சில நேரங்களில், விறைப்பை ஏற்படுத்தக்கூடும். இதில் இடுப்பு வலியைப் புறக்கணிப்பதால் வேறு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம் என்பது குறித்து காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் இடுப்பு வலியும் அடங்குகிறது. பொதுவாக, உடலில் உள்ள உறுப்புகள் ஏதாவது ஒன்றில், வலி ஏற்பட்டால் அதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மேலும், உடலின் எந்தப் பகுதியிலும் வலி ஏற்பட்டாலும் அது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும், சில சமயங்களில் வலி கடுமையானதாக இருப்பின், அது உடலை நடுங்க வைக்கிறது. சில நேரங்களில், இடுப்பில் வலி ஏற்படுகிறது. ஆனால், இதை பெரும்பாலும் மக்கள் புறக்கணிக்கிறார்கள்.

இடுப்பில் வலி ஏற்படுவதை ஒரு பொதுவான பிரச்சனை என்று நினைக்கிறார்கள். ஆனால், இடுப்பு வலியை புறக்கணிப்பதன் காரணமாக, உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில், இடுப்பு வலியைப் புறக்கணிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இடுப்பு வலி நடப்பதில் சிரமத்தையும், பல சந்தர்ப்பங்களில், விறைப்பையும் ஏற்படுத்தக்கூடும். எனினும், நீண்ட காலமாக அதைப் புறக்கணிப்பது அவஸ்குலர் நெக்ரோசிஸ் போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம்.

இந்த பதிவும் உதவலாம்: Hip Pain Relieve Tips: ரொம்ப நேரம் உட்கார்ந்து இடுப்பு வலியா? இதெல்லாம் டிரை பண்ணுங்க

இதில் இடுப்பு வலியை ஏன் புறக்கணிக்கக்கூடாது என்பதற்கான காரணங்கள் குறித்து, கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்வோதயா மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகர் ஸ்வப்னில் ஷிகா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இடுப்பு வலியைப் புறக்கணிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்?

உடலில் விறைப்பு ஏற்படுவது

நீண்ட காலமாக ஒருவர் இடுப்பு வலியை அனுபவித்து வந்தால், அது உங்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் விறைப்பையும் ஏற்படுத்தக்கூடும். மேலும், இடுப்பு வலிக்கு நிரந்தர சிகிச்சையை நாடவில்லையெனில், அது இடுப்பைச் சுற்றி வலியை அனுபவிக்க வழிவகுக்கலாம். அதன் படி, கழுத்து மற்றும் முதுகில் விறைப்பு உணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், உடலில் வடு திசு உருவாகத் தொடங்குகிறது. இவையே விறைப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டால், தசை இறுக்கம் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

நடப்பதில் சிரமம்

ஒருவர், தொடர்ந்து நீண்ட காலமாக இடுப்பு வலியைப் புறக்கணித்தால், அது நடப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இடுப்பு வலி அல்லது வேறு ஏதேனும் காயம் இருந்தால், வலி படிப்படியாக மோசமடையக்கூடும். மேலும், இடுப்பு வலியைப் புறக்கணிப்பது அன்றாடப் பணிகளைச் செய்வதையும் கடினமாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Causes Of Hip Pain: மாதவிடாய் காலத்தில் இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதுதான் காரணம்!

தசை பலவீனம்

ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிப்பதற்கு, தசைகளின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிக முக்கியமாகும். ஏனெனில், நீண்டகால இடுப்பு வலி காரணமாக தசை பலவீனம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதிகளவு இடுப்பு வலியானது தசைகளை பலவீனப்படுத்தி, உடல் பலவீனம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கக்கூடும். மேலும், பலவீனமான தசைகள் உடல் செயல்பாடுகளையும் குறைக்கிறது. இது ஆற்றல் பற்றாக்குறைக்கு வழிவகுக்கலாம்.

அவஸ்குலர் நெக்ரோசிஸ்

இடுப்பு வலியை நீண்ட காலமாகப் புறக்கணிப்பது அவஸ்குலர் நெக்ரோசிஸுக்கும் வழிவகுக்கும். அவஸ்குலர் நெக்ரோசிஸ் என்பது இடைவிடாத எலும்பு வலியால் வகைப்படுத்தப்படக்கூடிய ஒரு நிலையாகும். இந்த நிலை பொதுவாக இடுப்பு சேதமடையும் போது ஏற்படுகிறது. இந்த பிரச்சனையின் காரணமாக, எலும்புக்கு இரத்த ஓட்டம் சரியாக அடைய முடியாது. இது பெரும்பாலும் எலும்பு திசுக்களை சேதப்படுத்தி அழிக்கக்கூடும். இது அவஸ்குலர் நெக்ரோசிஸுக்கு வழிவகுக்கிறது. எனவே, இடுப்பு வலிக்கு விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இடுப்பு வலியைப் புறக்கணிப்பதன் காரணமாக, நமக்கு மேலே கூறப்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே எந்தவொரு வலியும் நீண்ட காலம் தொடர்ந்தால், அதைப் புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hip Pain: இடுப்பு வலியை துரத்தி அடிக்க இதை செய்யவும்!

Image Source: Freepik

Read Next

இந்த 5 அறிகுறிகள் இருக்கா? உங்களோட கிட்னி ஆபத்தில் உள்ளதாக அர்த்தம்.. டாக்டர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 15, 2025 18:55 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content