Thu Oct 29, 2026 | 12:54 PM IST

Side Effects Of Orange: ஆரஞ்சு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு இவ்வளவு ஆபத்தா?

Side Effects Of Orange: ஆரஞ்சு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு இவ்வளவு ஆபத்தா?Side Effects Of Orange: ஆரஞ்சு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு இவ்வளவு ஆபத்தா?

What happens if you eat too much oranges: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் சருமத்தை பராமரிக்க நினைப்பவர்கள் தங்கள் உணவில் ஆரஞ்சு பழம் சேர்ப்பது வழக்கம். பெரும்பாலும், ஆரஞ்சு பழத்தை குளிர் காலத்தை விட வெயில் காலத்தில் தான் அதிகமாக உட்கொள்வோம். வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

இருப்பினும், பல நேரங்களில் அதன் சுவை காரணமாக நம்மில் பலர் அளவுக்கு அதிகமாக ஆரஞ்சு சாப்பிடுவோம். தேவைக்கு அதிகமாக ஆரஞ்சு சாப்பிடும்போது, ​​அது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது, நீங்கள் ஒவ்வொரு நாளும் 4-5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆரஞ்சுகளை சாப்பிட்டால், அது உங்களுக்கு ஆபத்து. ஆரஞ்சுப் பழத்தை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Pomegranate Benefits: தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

செரிமானம் தொடர்பான பிரச்சனை

ஆரஞ்சு சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இதில், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆனால், ஆரஞ்சு பழத்தை அதிகமாக உட்கொள்ளும் போது, ​​அது உங்கள் செரிமானத்திற்கு பிரச்சனை ஏற்படும். இதில், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உங்களுக்கு வயிற்றுப் பிடிப்பு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, ஆரஞ்சு பழங்களை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

பற்களை சேதப்படுத்தும்

ஆரஞ்சு பழத்தை அதிகமாக உட்கொள்வது உங்கள் பல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உண்மையில், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் இயற்கை சர்க்கரை மற்றும் அமிலங்கள் உள்ளன. இவற்றை அதிகமாக உட்கொள்வதால் பல் சிதைவு மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, குறைந்த அளவு ஆரஞ்சு சாப்பிடுங்கள். இதனுடன், உங்கள் வாய் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Cheese and cholesterol: அட சீஸ் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையுமாம் - புதிய ஆய்வு!

ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனை

ஆரஞ்சுகளை அதிகமாக உட்கொள்வது அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தும். ஏனெனில், ஆரஞ்சு ஒரு சிட்ரிக் அமிலம் உள்ள பழம். நீங்கள் அதை அதிகமாக உட்கொள்ளும்போது, ​​​​அதன் அமில விளைவு காரணமாக நீங்கள் அமில ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படலாம்.

பொட்டாசியம் அளவு அதிகரிப்பு

ஆரஞ்சு பொட்டாசியத்தின் நல்ல ஆதாரமாக கருதப்படுகிறது. இந்த தாது உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், அது அதிகமாகும் போது, ​​அது சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, உங்களுக்கு ஏதேனும் சிறுநீரகப் பிரச்சனை இருந்தாலோ அல்லது பொட்டாசியம் அளவை பாதிக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டாலோ, ஆரஞ்சுப் பழத்தை மிகக் குறைவாகவே உட்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம் : அரிசி, கோதுமை பற்றி வெளியான அதிர்ச்சி தகவல் - எச்சரிக்கை மணியடித்த ஐசிஏஆர்!

இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்

ஆரஞ்சு பழத்தில் இயற்கை சர்க்கரை உள்ளது. இது ஒப்பீட்டளவில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருந்தாலும், அதிகமாக உட்கொண்டால், அது உங்கள் இரத்த சர்க்கரையை திடீரென அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், நீங்கள் அதை குறைந்த அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ இந்த நேரத்தில் சூயிங் கம் மென்றால் உடல் எடை குறையுமாம் - இன்னும் எக்கச்சக்க நன்மைகள் இருக்கு!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.