$
Chewing Gum Benefits : பபிள் கம், சூயிங் கம் என்றாலே குழந்தைகள் மட்டுமல்ல இளம் வயதினர் முதல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடியதாக உள்ளது. இது கூல் மின்ட் போன்ற பல்வேறு சுவை விருப்பங்களில் வருவதால் வாய் புத்துணர்ச்சிக்காக பெரியவர்கள் சூயிங் கம் மெல்லும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
பெரும்பாலும் குழந்தைகளுக்கு இதனை பெற்றோர்கள் வாங்கிக்கொடுப்பதில்லை. ஏனெனில், அந்த பசையை தெரியாமல் குழந்தைகள் விழுங்கி விடுவார்கள் என்பதால் தான். மேலும் குழந்தைகள் அதனை சாப்பிடக்கூடாது என்பதற்காக பல கட்டுக்கதைகளை கூறுவர்.

ஆனால் உண்மையில் சரியான சூயிங் கத்தை சரியான நேரத்தில் மெல்வதால் உடலுக்கு பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன என விரிவாக அறிந்து கொள்வோம்…
சூயிங் கம் மெல்லுவது நல்ல பழக்கமா?
பலருக்கு சூயிங்கம் மெல்லும் பழக்கம் உள்ளது. சூயிங்கம் சாப்பிடுவதற்கு வேடிக்கையாக பல சுவைகள் உள்ளன. சிலர் சூயிங்கம் வாய் துர்நாற்றத்தை போக்குவதற்காகவும், முகத்தின் வடிவத்தையும் மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்துகிறார்கள். சூயிங்கம் உண்மையில் உடலுக்கு நன்மை தருமா? என்பது பற்றி கீழே விளக்கமாக கொடுத்துள்ளோம்.
இந்த நேரத்தில் மெல்லுவதால் உடல் எடையை குறைக்கும்:
இனிப்பாக இருந்தாலும், சூயிங் கம் அதிக கலோரிகளை கொண்டதல்ல. அதன் விளைவுகள் பற்றி பல சிறிய ஆய்வுகள் உள்ளன. அவற்றில், 2019 இல் PubMed இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, நடைபயிற்சியின் போது சூயிங் கம் மெல்வது அதிக கலோரிகளை எரிக்கிறது மற்றும் உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது.
பசி குறையும்:
உடல் எடையை குறைக்க சாப்பாட்டின் அளவை குறைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. மேலும் திட்டமிட்ட உணவுமுறை பசியை கட்டுப்படுத்த உதவும். உணவின் போது சூயிங் கம் பசியைக் குறைக்கிறது என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பற்களுக்கு சூயிங் கம் நல்லதா?
சர்க்கரை இல்லாத சூயிங்கம் உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இது வாய் துர்நாற்றத்தை நீக்கி பற்களை பலப்படுத்துகிறது. ஆனால் இதற்கு சைலிட்டால் கொண்ட சூயிங் கம் மட்டும் வாங்க வேண்டும்.

மன அழுத்தம்:
அதிகப்படியான மன அழுத்தம் உங்கள் மூளையை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. சூயிங் கம் மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் செயல்பாடு மற்றும் கவனத்தை அதிகரிக்கிறது என்று சில ஆராய்ச்சி காட்டுகிறது.
கூர்மையான நினைவாற்றல்:
இளமையில் நினைவாற்றல் குறைந்தால் அது மூளையின் பலவீனமாகும். இது எதிர்காலத்தில் டிமென்ஷியா மற்றும் பார்கின்சன் அபாயத்தை அதிகரிக்கலாம். சூயிங் கம் நினைவாற்றலை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சூயிங் கம் பக்க விளைவுகள்:
சூயிங் கம்மில் உள்ள செயற்கை சர்க்கரைகள் உங்கள் பற்களை வலுவிழக்கச் செய்து, வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தையும் கூட பாதிக்கலாம். சில ஆராய்ச்சிகளில், சூயிங் கம் தலைவலிக்கு ஒரு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தாடை வலியை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சில பக்கவிளைவுகள் மட்டுமே என கூறப்படுகிறது.
Image Source: Freepik