விளையாடும் போது ஏன் வாயில் சூயிங்கம் மெல்கிறார்கள்? விஷயம் இதுதான்!

  • SHARE
  • FOLLOW
விளையாடும் போது ஏன் வாயில் சூயிங்கம் மெல்கிறார்கள்? விஷயம் இதுதான்!

விளையாட்டிற்கு உடல் தகுதி என்பது மிக முக்கியம். அதைவிட முக்கியமான ஒன்று இருக்கிறது. பொதுவாக கிரிக்கெட் விளையாடும் போது பலர் கவனத்திருப்பீர்கள், வாயில் பபுள் கம் போட்டு மெல்லுவார்கள்.

பேட்டிங் செய்யும் போதும் சரி, பவுளிங், ஃபீல்டிங் என அனைத்து செயல்பாடுகளிலும் விளையாட்டு வீரர்கள் வாயில் பபுள் கம் போட்டு மெல்லுவார்கள். அதேபோல் ஃபுட் பால் (கால் பந்து) போட்டியிலும் அப்படிதான். கால் பந்தாட்ட வீரர்கள் வாயில் ஏதாவது போட்டு மென்று கொண்டே இருப்பார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் பபுள் கம் (சூயிங் கம்) மெல்லுவது ஏன்?

கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொண்டோம் என்றால், பேட்டிங் பிடிக்கும் போது மனநிலை ஒருபடியாக இருக்காது. நாம் நினைத்து களத்தில் இறங்குவது ஒன்றாக இருக்கும், அங்கு நடப்பது ஒன்றாக இருக்கும். எடுத்துக்காட்டாக, நாம் நின்று நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்று நினைப்போம், நம்மையும் மீறி திடீரென அடித்து விளையாட முயன்று அவுட் ஆகி விடுவோம். இதற்கு காரணம் மனம் அலைபாயுவது மட்டும்தான். மனம் ஒருநிலையாக இல்லையென்றால் இப்படி நடக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவின் முன்னால் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன், கிரிக்கெட் விளையாட களத்தில் இருக்கும் போதும் கிரிக்கெட்டை பற்றி சிந்திக்க மாட்டாராம். பந்து வெளியாகும் போதும் அதை பேட்டால் தடுக்கும் போதும் மட்டும்தான் அதைபற்றி சிந்திப்பாராம். காரணம், வெறும் பந்தை அடிப்பது குறித்து மட்டுமே சிந்தித்தால் பிரஸர் ஆகும் என்பதால் தான்.

பபுள்கம் மெல்லுவதால் கிடைக்கும் நன்மைகள்

அதேபோல் சில பேட்ஸ்மேன்கள் வாயில் பபுள் கம் போட்டு மென்று கொண்டு தங்களது பிரஸரை குறைக்க முயலுவார்கள். மேலும் பந்தை பவுளர் வீசும் போது "Watch the Ball" என தங்களுக்குள் தாங்களே கூறிக் கொண்டு பபுள் கம் மெல்லுவதை அப்போது மட்டும் நிறுத்துவார்கள். வாய் அசைவை பார்த்தால் இந்த இரண்டையும் கண்டறியலாம்.

இதேமாதிரி தான் ஃபீல்டிங் போதும். ஃபீல்டிங் செய்யும் போது உங்களிடம் எப்போதும் பந்து வராது. எனவே நீங்கள் சும்மாவே இருக்கும்போது உங்கள் மனநிலை அலைபாயும். அதற்கு பதிலாக பபுள் கம் மென்று கொண்டு மனதை ஒருநிலையாக கிரிக்கெட்டில் மட்டும் செலுத்தலாம். சும்மாவே இருக்கிறோம் என்ற மனநிலை மாறும்.

வாயில் பபுள் கம் மெல்லுவது நல்லதா?

மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தண்ணீர் என்பது எப்போதும் கிடைப்பதில்லை. இதனால் வாய் வறண்டு போக வாய்ப்புள்ளது. இதை சரிசெய்ய பபுள்கம் மெல்லலாம். இது வாய் வறட்சியை சரிசெய்யவும் உமிழ் நீர் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். மேலும் உடலின் நீர் பற்றாக்குறையை ஓரளவு சரிசெய்ய பெரும் உதவியாக இருக்கும்.

பபுள் கம் சாப்பிடுவது நீர் பற்றாக்குறையை சரிசெய்ய உதவுமா?

வழக்கமாக நீர் இடைவெளிகள் இல்லாமல் வாய் மிகவும் வறண்டு போகிறது, ஏனெனில் வீரர்கள் ஓடுவதால் நீரிழப்பு ஏற்படுகிறது. சயின்ஸ் ஏபிசி படி, நீங்கள் ஒரு துண்டு கம் மெல்லும்போது, ​​​​உங்கள் வாயில் உமிழ்நீரை உருவாக்குகிறது, ஏனெனில் அதில் உணவை உடைக்க உதவும் நொதிகள் உள்ளன.

உமிழ்நீரில் 99% நீர் உள்ளது, எனவே இது வாய் வறட்சியைத் தடுக்க உதவுகிறது மற்றும் அதன் விளைவாக ஈரமாக வைக்கிறது. இது விளையாட்டின் போது வீரர்கள் தங்கள் தண்ணீர் தேவையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

சூயிங் கம் மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் ஆய்வில், சூயிங் கம் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மனநிலையின் அம்சங்களை மேம்படுத்தலாம். சூயிங் கம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்பதற்கான ஆதாரங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

சூயிங் கம் துண்டுகளை மெல்லுவது, மன அழுத்த நிகழ்வுகளின் போது நரம்புகளை அமைதிப்படுத்தவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது. கால்பந்து மேலாளர்கள், குறிப்பாக சர் அலெக்ஸ் ஃபெர்குசன் மற்றும் கார்லோ அன்செலோட்டி, விளையாட்டுகளின் போது தங்கள் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு சூயிங் கம் துண்டை மெல்லுவதைக் கண்டிருக்கலாம்.

சூயிங் கம் மெல்லுவது சில கால்பந்து வீரர்கள் அல்லது கால்பந்து மேலாளர்களிடம் கூட இருக்கும் பழக்கமாக இருக்கலாம். ஆனால் தொழில்முறை மட்டத்தில், ஒவ்வொரு நிமிட நன்மையும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சூயிங் கம்மின் ஒரு பகுதியை மெல்லும் போது, ​​அதை மெல்லுவதால், மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும், உமிழ்நீரை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது, இது விளையாட்டு ரீதியாகவும் சில நன்மைகளைக் கொண்டிருக்கிறது.

image source: social media

Read Next

10000 Steps Walking: தினசரி 10,000 நடைகள் என்பது சாத்தியமா? இதற்கு என்ன செய்ய வேண்டும்?

Disclaimer

குறிச்சொற்கள்