Fri Sep 11, 2026 | 11:09 PM IST

Doctor Verified

மாதவிடாய் வருவதற்கு முன் சந்திரமுகியாக மாறும் பெண்கள்.. ஏன் தெரியுமா.? மருத்துவர் விளக்கம்..

மாதவிடாய் வருவதற்கு முன் பெண்கள் அனுபவிக்கும் PMS அறிகுறிகள் என்ன? சோர்வு, கோபம், பருக்கள், தூக்கக் குறைவு போன்ற அறிகுறிகளை மருத்துவர் விளக்குகிறார். 

பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு முன் உடல், மனதில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதை அனைவரும் கவனித்து இருப்போம். சில பெண்களுக்கு கோபம் அதிகரித்தல், சிலருக்கு சோர்வு, சிலருக்கு தூக்கக் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த நிலையையே மருத்துவர்கள் Premenstrual Syndrome (PMS) என குறிப்பிடுகிறார்கள்.

உலகளவில் 3 பெண்களில் ஒருவருக்கு இந்த PMS அறிகுறிகள் தென்படுகின்றன. இது பெண்களின் கற்பனை அல்ல, உண்மையான மருத்துவ நிலை என மகப்பேறு மருத்துவர்பிரியா கல்யாணி வலியுறுத்துகிறார்.

உடல் சார்ந்த அறிகுறிகள்

மாதவிடாய் முன் PMS ஏற்படும் போது பெண்கள் அனுபவிக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள்:

* சோர்வு மற்றும் பலவீனம்

* வயிற்று வீக்கம்

* முகப்பருக்கள் அதிகரிப்பு

* மார்பு வலி மற்றும் கனத்த உணர்வு

* மூட்டு மற்றும் தசை வலி

* நீர் தங்குவதால் எடை கூடுதல்

* தலைவலி

இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் வலி தாங்க முடியலையா? நிபுணர் கூறும் இயற்கை தீர்வுகள் இதோ..

மனநிலை சார்ந்த அறிகுறிகள்

இதன் போது மனநிலை மாற்றங்களும் பெண்களை பாதிக்கும்:

* மனநிலை மாறுதல் (Mood swings)

* சீற்றம், கவலை, பதட்டம்

* உணவு ஆசைகள் அதிகரித்தல்

* தூக்கக் குறைவு

* கவனம் செலுத்த முடியாமை, நினைவாற்றல் குறைதல்

காரணம் என்ன?

மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே PMS-ன் முக்கிய காரணம். ஈஸ்ட்ரஜன், புரோஜெஸ்ட்ரோன் அளவுகள் மாறுவதால் மூளையில் செரடோனின் குறைந்து மனநிலையை பாதிக்கிறது. சில பெண்களுக்கு அறிகுறிகள் மிகக் கடுமையாக இருக்கும். சிலருக்கு மிதமாக இருக்கும். இது மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வேறுபடுகிறது.

View this post on Instagram

A post shared by Dr Priya Kalyani (@drpriyakalyani.official)

மருத்துவர் கருத்து

"PMS என்பது பெண்களின் கற்பனை அல்ல. இது உண்மையான மருத்துவ பிரச்சனை. மாதவிடாய் வருவதற்கு முன் பெண்கள் அனுபவிக்கும் சிரமங்களை குடும்பத்தினர் புரிந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். அதை சிறிய சண்டை, சிறிய கோபம் என அலட்சியப்படுத்தக்கூடாது" என தெரிவித்தார் மகப்பேறு நிபுணர் டாக்டர் பிரியா கல்யாணி.

முக்கிய தகவல்

* உலகளவில் 3 பெண்களில் ஒருவருக்கு PMS ஏற்படுகிறது.

* இது உடல், மனம் இரண்டையும் பாதிக்கும்.

* ஹார்மோன் மாற்றமே முக்கிய காரணம்.

* குடும்ப ஆதரவு மிக அவசியம்.

இறுதியாக..

PMS என்பது பெண்களின் உண்மையான உடல், மனநிலை பிரச்சனை. இதை கற்பனை என விடாமல் செய்யாமல், புரிந்து கொண்டு ஆதரவு அளிப்பதே பெண்களுக்கு மிகப்பெரிய நிம்மதி தரும்.

Disclaimer: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் மருத்துவர் கருத்து அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. PMS அறிகுறிகள் கடுமையாக இருந்தால், தங்களது தனிப்பட்ட மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

PCOD-ஐ குணப்படுத்த நெய் உதவுமா.? மருத்துவர் விளக்கம் இங்கே..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 18, 2025 09:57 IST

    Published By : ஐஸ்வர்யா குருமூர்த்தி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content