Fri Sep 11, 2026 | 10:43 PM IST

Doctor Verified

வைட்டமின் டி குறைபாடு இருந்தால் என்ன நடக்கும்.? நிபுணர் எச்சரிக்கை.!

சூரிய ஒளி குறைவால் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு எலும்புகள், தசைகள், நோய் எதிர்ப்பு சக்தி, முடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அதன் அறிகுறிகள், அபாயங்கள், தீர்வுகள் இங்கே.

இன்றைய 9 முதல் 5 வேலை நேர வாழ்க்கை முறை, அடைக்கப்பட்ட அலுவலக அறைகள், வெளிச்சமின்றி நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது போன்ற காரணங்களால் பலர் சூரிய ஒளியை மிகக் குறைவாகவே பெறுகிறார்கள். இதன் விளைவாக முதுகுவலி, இடுப்புவலி, உடல் பருமன், தசைவலி போன்ற பிரச்சனைகள் அதிகமாகி வருவதுடன், வைட்டமின் டி குறைபாடு மிக வேகமாக உயர்ந்து வருவது மருத்துவர்கள் கவலைப்படுகிற முக்கிய அம்சமாகும். இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ஹீலிங் டச் கிளினிக்கின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அபிஷேக் வைஷ், வைட்டமின் டி குறைபாட்டின் ஆபத்துகளைப் பற்றி முக்கிய விளக்கங்களை வழங்குகிறார்.

எலும்புகள் மீது வைட்டமின் டி குறைபாடு ஏற்படுத்தும் பாதிப்பு

வைட்டமின் டி என்பது கால்சியம் மற்றும் பாஸ்பேட்டை உடலால் உறிஞ்சிக் கொள்ள உதவும் முக்கிய கூறு. இது குறைந்தால்:

  • எலும்புகள் பலவீனப்படும்
  • சிறு செயல்களுக்கே வலி அதிகரிக்கும்
  • கடுமையான நிலைகளில் ரிக்கெட்ஸ் (குழந்தைகள்)
  • ஆஸ்டியோபோரோசிஸ் (வயது முதிர்ந்தோர்)

போன்றவை அதிகரிக்கும். நிபுணர்கள் கூறுவது, “வைட்டமின் டி இல்லையேல் எலும்பு வலிமை குறைந்து உடல் அமைப்பு தளர்ந்துவிடும்.”

தசை செயல்பாடுகளில் குறைபாட்டின் தாக்கம்

வைட்டமின் டி குறைவால்:

  • தசைகள் தளர்வு
  • நெடுநேரம் வலி
  • உடற்பயிற்சிக்குப் பிறகு மீளும் வேகம் குறைதல்
  • சோர்வு, சலிப்பு

போன்றவை ஏற்படும். தசைகள் சரியாக இயங்க, வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: கண்களில் அரிப்பு, எரிச்சலால் அவதியா? இயற்கையான முறையில் உடனே நீங்க என்ன செய்வது.?

நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்

வைட்டமின் டி இல்லையேல்:

  • அடிக்கடி சளி, காய்ச்சல்
  • உடல் நோய்களை எதிர்க்கும் சக்தி தளர்தல்
  • ஆட்டோஇம்யூன் நோய்களின் அபாயம் அதிகரித்தல்

உடம்பு "பாதுகாப்பு கவசம்" இழந்துபோனதைப் போல ஆகிறது.

முடி உதிர்தல் அதிகரிக்கும்

வைட்டமின் டி குறைபாடு,

  • முடி செறிவு குறைதல்
  • முடி கூளைகள் பலவீனமாதல்
  • அரேட்டா போன்ற முடி உதிர்தல் நோய்கள் தோன்றும்.
  • இளம் வயதிலேயே மிகுந்த hair fall

முடி வேர் வளர்ச்சிக்கே வைட்டமின் டி முக்கிய ஆதாரம்.

காயம் குணமடைவதில் தாமதம்

பொதுவாக நீரிழிவு காரணமாகவே காயங்கள் தாமதமாக குணமாகும் என்று நினைப்போம். ஆனால், நிபுணர்கள் கூறுவது:

  • செல் பெருக்கம்
  • அழற்சி கட்டுப்பாடு
  • கால்சியம் சிக்னல் செயல்பாடு

இவையெல்லாம் வைட்டமின் டி இல்லையேல் மந்தமாய் செயல்படுகின்றன. எனவே, காயம் குணமடைவது தாமதமாகிவிடுகிறது.

இறுதியாக…

வைட்டமின் டி குறைபாடு உடலில் எலும்புகள் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை பல பகுதிகளை கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. சூரியஒளியில் 15–20 நிமிடம் நிற்பது, வைட்டமின் டி நிறைந்த உணவுகள், தேவையானால் மருத்துவரின் சப்ளிமெண்ட், இவை அனைத்தும் உடல்நலத்தைப் பாதுகாக்க அவசியமானவை.

Disclaimer: இந்த கட்டுரை தகவல் பகிர்வு நோக்கத்திற்கானது மட்டும். மருத்துவ ஆலோசனையாக கருதக்கூடாது. எந்த அறிகுறியும் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. வைட்டமின் டி குறைபாட்டால் எந்த உறுப்பு பாதிக்கப்படுகிறது?

தமனிகள், எலும்புகள், தசைகள், நோய் எதிர்ப்பு அமைப்பு ஆகியவை பாதிக்கப்படும்.

2. வைட்டமின் டி குறைபாடு என்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும்?

தசை வலி, எலும்பு வலி, பலவீனம், ரிக்கெட்ஸ், முடி உதிர்வு, நோய் எதிர்ப்பு குறைபாடு.

3. வைட்டமின் டி விரைவாக அதிகரிப்பது எப்படி?

சூரிய ஒளி + உணவு + கடுமையான குறைபாட்டில் மருத்துவர் பரிந்துரைக்கும் supplement.

Read Next

5 ஆண்டுகளுக்கும் மேலாக கொலஸ்ட்ரால் மாத்திரைகள் எடுத்தால் என்ன ஆகும்? – மருத்துவர் யோக வித்யா எச்சரிக்கை!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 29, 2025 18:53 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content