Fri Sep 11, 2026 | 10:18 PM IST

Doctor Verified

கருவளையங்களால் அவதியா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்க.. மருத்துவர் ஹன்சாஜி விளக்கம்

கண் கருவளையங்கள் இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதில் கருவளையங்களை நீக்க உதவும் சில ஆரோக்கியமான முறைகள் குறித்து மருத்துவர் யூடியூப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதைக் காண்போம்.

கண் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. ஆனால், இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் அமைகிறது. இதில் கருவளையங்களைப் போக்க உதவும் வழிகள் குறித்து மருத்துவர் ஹன்சாஜி அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியதாவது, கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் ஒரு நோயல்ல. அவை உங்கள் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த உங்கள் உடலிலிருந்து வரும் சமிக்ஞைகள் மட்டுமே.

உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள தோல் உங்கள் உடலில் மிகவும் மெல்லியதாக இருக்கும். எனவே ஒவ்வொரு ஏற்றத்தாழ்வும் முதலில் அங்கு தோன்றும். மேலும் கருவளையங்கள் ஒரே இரவில் ஏற்படுவதில்லை. அவை பல விஷயங்களால் ஏற்படக்கூடும். இரவு நேர தூக்கமின்மை, மன அழுத்தம், நீரிழப்பு, பலவீனமான இரத்த ஓட்டம், இரும்புச்சத்து குறைபாடு, பி12 குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் மரபியல் போன்றவை கருவளையங்களுக்குக் காரணமாக இருக்கலாம். இதில் நல்ல செய்தி என்னவெனில், தூங்குவதற்கு முன், கருவளையங்களை மறையச் செய்யும் இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்தலாம். மேலும், கண்களைச் சுற்றியுள்ள மென்மையான சருமத்தை ஊட்டமளித்து சரிசெய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: போமாட்டேன்னு பிடிவாதம் பண்ணும் கருவளையங்கள்.. அடிச்சி விரட்டும் ரெமிடிஸ் இங்கே.. 

கருவளையங்களை நீக்க உதவும் இயற்கை வைத்தியங்கள்

பாதாம் எண்ணெய் மசாஜ்

பாதாம் எண்ணெயைக் கண்களுக்குக் கீழே உள்ள சருமத்திற்கு பயன்படுத்துவது ஒரு திரவ தங்கம் போன்றதாகும். இதில் வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு போன்றவை நிறைந்துள்ளன. இது கண்களுக்குக் கீழே உள்ள சருமத்தை ஆழமாக ஊட்டமளித்து பலப்படுத்துகிறது.

இதற்கு இரண்டு மூன்று சொட்டு பாதாம் எண்ணெயை சூடாக்கி, விரல்களுக்கு இடையில் வைத்து படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக, கண்களுக்குக் கீழே மெதுவாக மசாஜ் செய்யலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது வீக்கத்தைக் குறைக்கவும், மெதுவாக நிறமிகளை மங்கச் செய்யவும் உதவுகிறது. காலப்போக்கில், இந்த எளிய பழக்கம் கருவளையங்களை ஒளிரச் செய்து, மிக விரைவாகத் தோன்றும் நுண் கோடுகளைத் தடுக்கிறது.

வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு

இவை இரண்டுமே குளிர்ச்சியூட்டும் சக்தி நிறைந்ததாகும். பெரும்பாலும், நாம் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் வைப்பதை பார்த்திருப்போம். ஆனால் அது ஏன் நன்றாக வேலை செய்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வெள்ளரிக்காய் ஆனது நீர், வைட்டமின் சி மற்றும் சிலிக்காவால் நிறைந்தது. இது சோர்வடைந்த சருமத்தை ஈரப்பதமாக்கி புத்துணர்ச்சியூட்டுகிறது.

அதே சமயம், உருளைக்கிழங்கில் இயற்கையான ப்ளீச்சிங் பொருட்கள் மற்றும் நிறமியை பிரகாசமாக்கும் என்சைம்கள் உள்ளன. படுக்கைக்கு 10 நிமிடங்களுக்கு முன் குளிர்ந்த துண்டுகளை வைக்கும்போது, அது ஒரு உடனடி ஸ்பா சிகிச்சையைப் போல செயல்படுகிறது. இது வீக்கத்தைக் குறைக்கவும், எரிச்சலை அமைதிப்படுத்தவும், கண்களுக்குக் கீழே இயற்கையான பளபளப்பையும் தருகிறது.

பச்சை பால்

இது மிகவும் எளிமையான தீர்வாகத் தோன்றலாம். ஆனால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது மெதுவாக கருமையான புள்ளிகளை உரிந்து ஒளிரச் செய்கிறது. அதே நேரத்தில் அதன் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் போன்றவை சரும சேதங்களை ஈரப்பதமாக்கி சரிசெய்கிறது. இதற்கு குளிர்ந்த பாலில் ஒரு பருத்திப் பந்தை நனைத்து கண்களுக்குக் கீழே தடவுவது வெப்பம் மற்றும் வீக்கத்தைக் குறைத்து, சருமத்தை மிருதுவாக்குகிறது. இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், கண்களுக்குக் கீழே உள்ள பகுதிக்கு பிரகாசத்தை மீட்டெடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 8 மணி நேரம் தூங்கினாலும் கருவளையம் போகவில்லையா? காரணம் தூக்கம் மட்டும் இல்லை – மருத்துவர் சுகன்யா நாயுடு விளக்கம்!

இதில் நீங்கள் தினமும் எதைச் செய்ய வேண்டும் என்ற குழப்பம் எழும். நேரத்தைப் பொறுத்து இந்த வைத்தியங்களை மாற்றி பயன்படுத்தலாம். இதில் பாதாம் எண்ணெய் மசாஜ் தனித்து நிற்கிறது. இது மிகவும் பயனுள்ள அன்றாட சடங்கு ஆகும். இதற்கு எந்த தயாரிப்பும் தேவையில்லை. தூங்கும் போது ஒரே இரவில் வேலை செய்கிறது மற்றும் உங்கள் சருமத்தை நேரடியாக வளர்க்கிறது. விரைவான முடிவுகளுக்கு வாரத்திற்கு சில முறை வெள்ளரி அல்லது பால் கம்ப்ரஸர்களுடன் இதை இணைக்கலாம். ஆனால் நீங்கள் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், பாதாம் எண்ணெயை விருப்பமாக இருக்கலாம்.

கருவளையங்களை நீக்குவதற்கு 7 முதல் 8 மணி நேரம் தவறாமல் தூங்குவது, நாள் முழுவதும் நீரேற்றமாக இருப்பது, இரும்பு மற்றும் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை பசலைக்கீரை, பீட்ரூட் மற்றும் பருப்பு போன்ற சில வாழ்க்கை முறை மாற்றங்களைக் கையாளலாம். மேலும், இது கண் சோர்வைத் தடுக்க படுக்கைக்குச் செல்வதற்கு முன் திரை நேரத்தைக் குறைக்க வேண்டும்.

இறுதியாக, யோகா, தியானம் அல்லது ஒரு எளிய சுவாசப் பயிற்சி மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும். இன்றிரவு, உங்கள் கண்களுக்குக் கீழே அவற்றிற்குத் தகுதியான பராமரிப்பைக் கொடுக்க வேண்டும். பாதாம் எண்ணெயை மசாஜ் செய்வதுடன், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுடன் இதை ஆதரிக்க வேண்டும். கருவளையங்கள் ஒரே இரவில் மறைந்துவிடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால், நன்றாக ஓய்வெடுக்கும்போது மெதுவாக, கவனமாக சாப்பிட்டு கவனித்துக் கொள்ள வேண்டும். அதுவரை அவற்றை ஒரு குறைபாடாகக் கருதுவதற்குப் பதிலாக, சிறந்த ஆரோக்கியத்தை நோக்கி நம்மை வழிநடத்தும் சமிக்ஞைகளாக அதை ஏற்றுக்கொள்வோம். உண்மையான அழகு என்பது கண்களைச் சுற்றியுள்ள உங்கள் சருமத்தின் பிரகாசத்தால் மட்டுமல்ல, உள் ஆரோக்கியம் மற்றும் வெளிப்புற பிரகாசத்தின் இணக்கத்தாலும் வரையறுக்கப்படுகிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: எல்லா கருவளையங்களும் ஒரே மாதிரி இருக்காது! கருவளையங்களின் வகைகளும் அதைத் தடுக்கும் முறைகளும்..

Image Source: Freepik

Read Next

தொடை மற்றும் அக்குள் கருமை நீங்க சூப்பர் டிப்ஸ்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 17, 2025 22:21 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content