Fri Sep 11, 2026 | 10:45 PM IST

மான்சூன் சீசனில் உங்க குடல் ஆரோக்கியத்திற்கு நீங்க சாப்பிட வேண்டிய புரோபயாடிக் உணவுகள்

Probiotic foods for monsoon diet: சிறந்த குடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய யாடிக் உணவுகளின் பட்டியலைக் காண்போம்.

Probiotic foods for monsoon diet for gut health: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். ஆம். உண்மையில், குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைப்பதன் மூலம் சரும ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம் உள்ளிட்டவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இந்நிலையில், குடல் தாவரங்களின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்கவும், மீட்டெடுக்கவும் புரோபயாடிக் உணவுகள் உதவுகின்றன. இதில் காணப்படும் உயிருள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது.

ஆனால், மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம், நீர் மாசுபாடு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இன்னும் பிற காரணங்களால் செரிமான தொந்தரவுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்த சமயத்தில் புரோபயாடிக் உணவுகளை உட்கொள்வது வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும், ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும், ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களை நிரப்புவதன் மூலமும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது. இதில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உணவில் சேர்க்கக்கூடிய புரோபயாடிக் உணவுகள் சிலவற்றைக் காணலாம்.

பருவமழையில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சிறந்த புரோபயாடிக் உணவுகள்

மோர்

இது குளிர்ச்சியூட்டும் பானமாக மட்டுமல்லாமல், செரிமானத்திற்கு உதவும் புரோபயாடிக்குகளால் நிறைந்ததாகும். மழைக்காலங்களில் உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் உட்கொள்வது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும், அமிலத்தன்மையைக் குறைக்கவும், நீரேற்ற அளவை பராமரிக்கவும் உதவுகிறது. இவை ஈரப்பதமான சூழ்நிலைகளில் அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Probiotics for Guts: கல்லை சாப்பிட்டால் குடல் செரிமானம் செய்து ஆரோக்கியமா இருக்க இதை சாப்பிடுங்க!

தயிர்

இது பொதுவாக உட்கொள்ளப்படும் புரோபயாடிக் உணவுகளில் ஒன்றாகும். இதில் உள்ள லாக்டோபாகிலஸ் பாக்டீரியா செரிமானத்தை ஊக்குவிக்கவும், வயிற்றுப் புறணியை ஆற்றவும் உதவுகிறது. மழைக்காலங்களில் தினசரி உணவில் தயிரை சேர்ப்பது வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

புளித்த அரிசி

சமைத்த அரிசியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் புளித்த அரிசியைத் தயார் செய்யலாம். காலையில், இது சிறிது புளிக்கவைக்கப்பட்டு, நல்ல பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த குளிர்ச்சியான, புரோபயாடிக் நிறைந்த உணவை உட்கொள்வது குடலை ஆற்ற உதவுகிறது. இது ஈரப்பதமான மழைக்கால நாட்களில் சாப்பிடுவதற்கு ஏற்றதாகும்.

இட்லி மற்றும் தோசை மாவு

இட்லி மற்றும் தோசை மாவில் உள்ள நொதித்தல் செயல்முறையானது வயிற்றில் மென்மையாக இருக்கும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை உருவாக்குகிறது. இந்த மென்மையான, வேகவைத்த அல்லது லேசாக சமைத்த உணவுகளை மழைக்காலங்களில் உட்கொள்வது செரிமானத்தை எளிதாக்குகிறது. இவை புரோபயாடிக்குகளின் இயற்கையான மூலத்தை வழங்குகிறது.

கெஃபிர்

இது தயிரைப் போன்ற ஒரு புளித்த பால் பானமாகும். ஆனால், இது மெல்லிய நிலைத்தன்மை மற்றும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் அதிக வகைகளையும் கொண்டுள்ளது. இது குடல் தாவர பன்முகத்தன்மையை ஆதரிக்கும் மற்றும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த புரோபயாடிக் ஆகும். குறிப்பாக மழைக்காலங்களில், இதை உட்கொள்வது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும், இரைப்பை அசௌகரியத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியம் செரிமானத்துடன் மட்டுமல்ல.. மனநிலை மற்றும் எதிர்ப்பு சக்தியுடனும் தொடர்புள்ளது..

ஊறுகாய்

வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் வினிகர் இல்லாமல் இயற்கையாகவே புளிக்கவைக்கப்படுகிறது. இவ்வாறு இயற்கையாகவே புளிக்க வைப்பது ஆரோக்கியமான பாக்டீரியாக்களுக்கு வழிவகுக்கிறது. வீட்டிலேயே தயாரிக்கப்படும் எலுமிச்சை அல்லது மாம்பழம் போன்ற ஊறுகாய்கள் செரிமானத்திற்கு உதவுகிறது.

கிம்ச்சி

கிம்ச்சி என்பது புளிக்கவைக்கப்பட்ட கொரிய முட்டைக்கோஸ் உணவு வகையாகும். இது ஒரு புரோபயாடிக் சக்தி மையமாகும். இதில் உள்ள லாக்டோபாகிலியில் செரிமானத்தை சீராக்க உதவுகிறது. மேலும், இது மழைக்காலங்களில் செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும் ஒரு துணை உணவாக செயல்படுகிறது.

சிறந்த குடல் ஆரோக்கியத்திற்காக இந்த புரோபயாடிக் உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உங்க குழந்தையின் குடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவர் சொன்ன இந்த 5 உணவுகளைக் கொடுங்க

Image Source: Freepik

Read Next

தண்ணீரை எப்போதெல்லாம் மற்றும் எவ்வளவு குடிப்பது உடலுக்கு நல்லது தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content