Fri Sep 11, 2026 | 11:12 PM IST

Doctor Verified

இந்த பிரச்சனை உள்ளவர்கள் தவறுதலாகவும் முலேத்தியை எடுத்துக்காதீங்க.. நிபுணரின் அறிவுரை

Who should avoid eating mulethi: முலேத்தியானது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளால் நிறைந்ததாகும். இது சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எனினும், இது அனைவருக்கும் நன்மை பயக்காது. இதில் முலேத்தியை யார் சாப்பிடக்கூடாது என்பது குறித்து நிபுணர் பகிந்துள்ளதைக் காண்போம்.

Health conditions where mulethi should be avoided: ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை ஏராளமான மூலிகைகள் நம் உடலுக்கு இயற்கை மருந்தாக செயல்படுகிறது. அவ்வாறு நன்மை பயக்கும் பல்வேறு மூலிகைகளில் முலேத்தி அல்லது அதிமதுரம் ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். இதை உட்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தில், இது பல நோய்களுக்கு ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது. எனவே தான் சளி, ஆஸ்துமா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி என எதுவாக இருந்தாலும், இந்த அனைத்து நோய்களின் அறிகுறிகளையும் குறைப்பதில் அதிமதுரம் ஒரு பயனுள்ள தீர்வாக அமைகிறது. இது தவிர, தொண்டை வலியை நீக்கவும், சருமத்திற்கும், சில சமயங்களில் எடை இழப்புக்கும் அதிமதுரம் உதவுகிறது.

அதிமதுரத்தில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற கலவை உடலின் பல பாகங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், அதிமதுரத்தை உட்கொள்வது அனைவருக்கும் நன்மை பயக்காது. சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கலாம். இதில் அதிமதுரத்தை யார் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பெங்களூருவில் உள்ள SDMIAH இல் உள்ள ஆயுர்வேத அடிப்படைக் கொள்கைகள் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் சம்ஹிதா உல்லோட் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: பாலில் அதிமதுரம் பொடி கலந்து சாப்பிடுவது எவ்வளது நன்மை தெரியுமா?

அதிமதுரத்தை யார் சாப்பிடக்கூடாது?

டாக்டர் சன்ஹிதா உல்லோட் அவர்கள் கூறுகையில், ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படக்கூடிய அதிமதுரம், அதன் பன்முக மருத்துவ குணங்கள் காரணமாக நன்கு அறியப்பட்ட ஒரு மூலிகையாகும். இது உடலில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது கிருமி நாசினிகள், ஆண்டிபயாடிக் மற்றும் பிற முக்கிய சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்றி இதைப் பயன்படுத்துவது நல்லதாக இருக்காது. ஏனெனில் அதிமதுரத்தை முறையற்ற முறையில் உட்கொள்வது உடலில் நீர் தேக்கத்திற்கு வழிவகுக்கக்கூடும். இவை வீக்கத்தை ஏற்படுத்தலாம். இது தவிர, மக்களுக்கு அதிமதுரம் பயன்படுத்துவதால் இன்னும் சில பிரச்சனைகள் எழலாம். எனவே இதன் நுகர்வைத் தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக நோயாளிகள்

சிறுநீரக நோயாளிகள் அதிமதுரம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த மூலிகையில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரக செயல்பாட்டிற்கு நல்லதாக இருக்காது. எனவே இவை சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இது சிறுநீரகத்தின் வடிகட்டுதல் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும். இதனால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இது தவிர, அதிமதுரத்தை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தும். சிறுநீரக நோயாளிகள் இதை எடுத்துக் கொள்ளும் போது, அது சில மருந்துகளுடன் வினைபுரிந்து பிரச்சனையை அதிகரிக்கக்கூடும்.

கல்லீரல் நோயாளிகள்

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும். இது போன்ற சூழ்நிலையில், கல்லீரல் நொதிகள் பாதிக்கப்படலாம். இது தவிர, கல்லீரல் தொடர்பான நோய்களைக் கொண்டிருப்பவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளுடன் வினைபுரிந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு கல்லீரல் பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: Mulethi Benefits: சளி, இருமல் காணாமல் போக அதிமதுரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க.

இதய நோயாளிகள்

இதய பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள் அதிமதுரம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர் கூறுகிறார். அதிமதுரத்தில் கிளைசிரைசின் உள்ளது. இது சிலருக்கு நீர் தக்கவைப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, உயர் இரத்த அழுத்தம் பிரச்சினைகள் இருந்தால், அதிமதுரத்தை எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும். இதற்கு காரணம், அதிமதுரத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதே ஆகும். இதை நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் தசை பலவீனம் அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்றவை ஏற்படுகிறது. எனவே, இதய நோயாளிகள் அதிமதுரம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

கவனிக்க வேண்டியவை

மருத்துவர் சம்ஹிதா அவர்கள், மருத்துவரை அணுகாமல் அதிமதுரத்தை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துகிறார். குறைந்த பொட்டாசியம் அளவு உள்ளவர்கள் நீண்ட காலமாக தவறான அளவில் அதிமதுரத்தை உட்கொண்டால் பல கடுமையான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதிமதுரம் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், மேற்பார்வை இல்லாமல் இதை உட்கொள்வது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Mulethi soaked water: முலேத்தி ஊறவைத்த நீரை தினமும் குடிப்பது உடலுக்கு நல்லதா?

Image Source: Freepik

Read Next

முதுமையை எதிர்த்துப் போராட உதவும் எள்.. இந்த 3 ரெசிபிகள் உங்களுக்கு உதவும்! டாக்டர் சொன்னது

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content