பெரும்பாலான குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதைத் தான் பெற்றோர்கள் ஒவ்வொருவருமே விரும்புகின்றனர். ஆனால் சில நேரங்களில், குழந்தைகள் நன்றாக சாப்பிடுவது போல் தோன்றினாலும், அவர்கள் மந்தமாகவும், சோர்வாகவும் அல்லது உணவில் ஆர்வமில்லாமலோ காணப்படுகின்றனர். இவை அனைத்துமே பெற்றோரை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும். ஆனால், இவற்றிற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உணவுமுறை காரணமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு சீரான உணவு போதுமானதல்லவா என்று பெற்றோர்கள் யோசிக்கின்றனர்.
உண்மை என்னவெனில், குழந்தைகள் தங்கள் உணவு ஆரோக்கியமாகத் தோன்றினாலும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், குழந்தைகள் பெரும்பாலும் சோர்வாக, மந்தமாக, எரிச்சலாக அல்லது உணவில் சிறிதும் ஆர்வம் காட்டும்போது, அது ஒரு நடத்தை பிரச்சினையாக மட்டும் இருக்காது என்றும், அது அவர்களின் உடல் ஏதோ ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதை சமிக்ஞை செய்யும் வழியாக இருக்கலாம் என்று அவர் விளக்கினார்.
இந்த பதிவும் உதவலாம்: Children Immunity: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க என்ன உணவு ஊட்டலாம்?
மேலும் அவர்,"உங்கள் குழந்தை சோர்வாக, சோர்வாக, உணவில் ஆர்வமில்லாமல் இருந்தால், அது வெறும் நடத்தையாக இல்லாமல், ஊட்டச்சத்து குறைபாடாகவும் இருக்கலாம்," என்று அவர் வீடியோவில் கூறினார். குழந்தைகளில் ஏற்படக்கூடிய சில குறிப்பிட்ட அறிகுறிகள் சில ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் எவ்வாறு இணைக்கப்படலாம் என்பதையும், பெற்றோர்கள் அவற்றை எளிய உணவு சேர்க்கைகள் மூலம் எவ்வாறு சரிசெய்யலாம் என்பதையும் லோவ்னீத் பத்ரா குறிப்பிட்டார். அதைப் பற்றி இங்குக் காணலாம்.
நிபுணரின் கருத்து
குழந்தை சோர்வாக உணர்ந்தால் அல்லது பசியின்மை குறைவாக இருந்தால்
தொடர்ச்சியான சோர்வு மற்றும் பசியின்மை இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறினார். உடலில் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல இரும்புச்சத்து உதவுகிறது. மேலும் அது குறைவாக இருக்கும்போது, குழந்தைகள் சரியான ஓய்வுக்குப் பிறகும் சோம்பலாகவோ அல்லது கவனச்சிதறலாகவோ உணர்கின்றனர். இந்நிலையில், சனா, ராகி மற்றும் அமராந்த் போன்றவற்றை உணவில் சேர்க்க நிபுணர் பரிந்துரைத்தார்.
நோயிலிருந்து மெதுவாக மீளும் போது
குழந்தை வெளிர் நிறமாகத் தெரிந்தால் அல்லது நோயிலிருந்து மீள அதிக நேரம் எடுத்தால், பிரச்சினை செலினியம் குறைபாடாக இருக்கலாம். செலினியம் ஆற்றல், ஆரோக்கியமான சருமம் மற்றும் மீட்சியை ஆதரிக்கிறது. வால்நட்ஸ், முழு முட்டை மற்றும் எள் போன்ற உணவுகள் சிறந்த இயற்கை ஆதாரங்கள் என லோவ்னீத் பத்ரா விளக்கினார்.
இந்த பதிவும் உதவலாம்: பெற்றோர்கள் கவனத்திற்கு; மழைக்காலம் வரப்போகுது இதையெல்லாம் மறக்காமல் பின்பற்றுங்கள்!
குழந்தைக்கு அடிக்கடி சளி பிடித்தால்
குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்பட்டால் அல்லது சிறிய பிரச்சனைகளிலிருந்து குணமடைய அதிக நேரம் எடுத்தால், அது துத்தநாக அளவு குறைபாட்டைக் குறிக்கிறது. ஏனெனில், துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், காயங்களை குணப்படுத்துவதற்கும், சுவை மற்றும் வாசனை உணர்வைப் பராமரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. துத்தநாகக் குறைபாட்டை சரி செய்வதற்கு வெள்ளை சனா, முந்திரி மற்றும் பூசணி விதைகளை உணவில் சேர்க்க நிபுணர் பரிந்துரைக்கிறார்.
குறிப்பு
அதனைத் தொடர்ந்து நிபுணர், சமச்சீரானதாகத் தோன்றும் உணவுகளில் கூட சில நேரங்களில் முக்கியமான நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லாமல் இருக்கலாம் என்பதை குறிப்பிடுகிறார். இந்த சிறிய ஊட்டச்சத்து இடைவெளிகள், "குழந்தைகள் நாளுக்கு நாள் எப்படி உணர்கிறார்கள் என்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று அவர் மேலும் கூறினார்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: உங்க குழந்தைக்கு இம்யூனிட்டி குறைவா இருக்கா? அதுக்கு இதெல்லாம் தான் காரணம்
Image Source: Freepik
தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
-
Current Version
Nov 13, 2025 16:43 IST
Published By : கௌதமி சுப்ரமணி