Sat Sep 12, 2026 | 03:12 AM IST

Stale Chapatis Benefits: நேத்து போட்ட சப்பாத்தி ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

Health benefits for leftover wheat roti: நாம் பெரும்பாலும் இரவில் மீந்து போன சப்பாத்தியை காலையில் தூக்கி எறிந்து விடுவோம். ஏனென்றால், பழைய உணவு பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை என நாம் எண்ணுகிறோம். ஆனால், சில உணவு பொருட்கள் பழையதாக மாறும் போது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் உண்மை தான்.

இரவில் தயார் செய்த மீந்து போன சப்பாத்தியை காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. டயட்டீஷியன் ககன் சித்து இது குறித்த சில தகவலை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். பழைய சப்பாத்தியை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Fruits For Immunity: உங்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 5 பழங்களை சாப்பிடுங்க!

பழைய சப்பாத்தி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமானத்தை அதிகரிக்கும்

புதிதாக சுட்ட ரொட்டிக்கு பதிலாக பழைய சப்பாத்தி சாப்பிட்டால், நமது செரிமானம் முன்பை விட நன்றாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், புதிதாக தயார் செய்யப்பட்ட ரொட்டி அதில் உள்ள ஈரப்பதத்தை குறைக்கிறது. இது செரிமானத்தை கடுமையாகும். ஆனால், பழைய சப்பாத்தியில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். இதை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

இந்த பதிவும் உதவலாம் : Green Tomato Benefits: BP-யை கட்டுப்படுத்து பச்சை தக்காளி… எப்படி சாப்பிடணும் தெரியுமா?

உடல் எடையை குறைக்க உதவும்

பழமையான ரொட்டியை 12 மணி நேரம் வைத்திருப்பதால் அதில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதம் அளவு உள்ளது. இந்நிலையில், அதை சாப்பிட்ட பிறகு, உங்களுக்கு விரைவாக பசி ஏற்படாது. இது ஜங்க் ஃபுட் அல்லது சிற்றுண்டி சாப்பிடுவதைத் தடுக்கிறது மற்றும் எடை விரைவாக அதிகரிக்காது. எனவே, பழைய சப்பாத்தி சாப்பிடுவது நல்லது.

இன்சுலின் ஸ்பைக்கைக் குறைக்கும்

பழைய ரொட்டி வயிற்றுப் பிரச்சினைகளுக்கு அல்லது எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்ல, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கும் நல்லது. குளிர்ந்த பாலில் ஊறவைத்து சாப்பிட்டால், சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். கூடுதலாக, உங்கள் இரத்த அழுத்தமும் சாதாரணமாக இருக்கும், இதன் காரணமாக உங்களுக்கு இன்சுலின் தேவைப்படாது.

இந்த பதிவும் உதவலாம் : Dragon Fruit Benefits : டிராகன் பழத்த அடிக்கடி சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

இனி பழுதடைந்த ரொட்டியை தூக்கி எறியாமல், சாப்பிடுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கும். நீங்கள் விரும்பினால், நிபுணர் ஆலோசனைக்குப் பிறகு அதை உட்கொள்ளலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Belly Button Oil: ஆண்கள் இந்த 4 வகை எண்ணெய்களை மட்டும் தொப்புளில் தடவி பாருங்கள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content