Doctor Verified

Supplement Smarts: சப்ளிமெண்ட்ஸ் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை ஒன்றாக எடுத்துக்கொள்ளலாமா?

  • SHARE
  • FOLLOW
Supplement Smarts: சப்ளிமெண்ட்ஸ் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை ஒன்றாக எடுத்துக்கொள்ளலாமா?


Can You Take Supplements and Vitamin Pills Together: உடலை ஆரோக்கியமாகவும், நோய்களில் இருந்து பாதுகாக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உன்ன வேண்டியது அவசியம். இன்றைய காலகட்டத்தில், பரபரப்பான வாழ்க்கை முறையாலும், உணவுப் பழக்க ஒழுங்கின்மையாலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.

எனவே, மக்கள் சப்ளிமெண்ட்ஸ், வைட்டமின் மாத்திரைகள் போன்றவற்றை உட்கொள்கிறார்கள். உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க, பல்வேறு வகையான சப்ளிமெண்ட்ஸ் மற்றும் வைட்டமின்கள் சந்தையில் கிடைக்கின்றன. பல நேரங்களில் மக்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி அவற்றை வாங்கி தாங்களாகவே உட்கொள்ளத் தொடங்குகிறார்கள்.

ஆனால், உங்களுக்குத் தெரியுமா, வைட்டமின்கள் மற்றும் பிற சப்ளிமெண்ட்களை ஒன்றாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது. வைட்டமின் மற்றும் சப்ளிமெண்ட் மாத்திரைகளை ஒன்றாக எடுத்துக்கொள்வது நல்லதா? அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Collagen supplements: என்றும் இளமையாக இருக்க கொலாஜன் சப்ளிமெண்ட் சாப்பிடுபவரா நீங்க? இந்த விஷயங்க தெரிந்து கொள்ளுங்கள்!

சப்ளிமெண்ட்ஸ் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை ஒன்றாக சாப்பிடலாமா?

சப்ளிமெண்ட்ஸ் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை ஒன்றாக எடுத்துக்கொள்ளலாமா? என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும் ஒரு பொதுவான கேள்வி. இது குறித்து பாபு ஈஸ்வர் ஷரன் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் சமீர் கூறுகையில், “உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய சப்ளிமெண்ட்ஸ் மற்றும் வைட்டமின்கள் அவசியம். இது பல நோய்கள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.

ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்றி இரும்புச்சத்து, தாதுக்கள், வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சப்ளிமெண்ட்களை ஒன்றாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். வைட்டமின்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் பல்வேறு வகையான சேர்மங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றை ஒன்றாக உட்கொள்வது உடலில் எதிர்வினைகளை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம் : Using Expired Spices: காலாவதியான மசாலாப் பொருட்களை சமையலுக்கு பயன்படுத்துபவரா நீங்க? அப்போ இதை படியுங்க!

சப்ளிமெண்ட்ஸ் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது, ​​இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்-

சப்ளிமெண்ட்ஸ் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை ஒன்றாக எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். உங்கள் உடல் நிலை மற்றும் தேவைக்கேற்ப எந்த வகை மாத்திரைகளை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவார்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி அவற்றை உட்கொள்வதால் உடலின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

சப்ளிமெண்ட்ஸ் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது, ​​அவற்றின் கலவைகள் மற்றும் இரசாயனங்கள் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். சில சப்ளிமெண்ட்கள் உணவின் போது எடுக்கப்படுகின்றன, சிலவை உணவுக்குப் பிறகு எடுக்கப்படும்.

சில மாத்திரைகள் ஒன்றுடன் ஒன்று சேராமல், அவற்றை ஒன்றாக உட்கொள்வது உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம் : Red Banana Benefits: விந்தணு அதிகரிப்பு முதல் பார்வை திறன் மேம்பாடு வரை.. செவ்வாழை பழத்தின் நன்மைகள் இங்கே..

கொழுப்பு மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் வேறுபட்டவை. அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்து கொண்ட பின்னரே அவற்றை உட்கொள்ள வேண்டும். வைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால், அது உணவுடன் உறிஞ்சப்படுகிறது. பல வகையான வைட்டமின்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் தண்ணீரில் கரைந்துவிடும். எனவே, அவை வெறும் வயிற்றில் உட்கொள்ளப்பட வேண்டும்.

மெக்னீசியம் மற்றும் கால்சியம் இரண்டும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும். ஆனால், அவற்றை ஒன்றாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Pic Courtesy: Freepik

Read Next

Meena Sankranti: மீனா சங்கராந்தி அன்று இந்த உணவுகளை சாப்பிடுங்கள்…

Disclaimer