Fri Sep 11, 2026 | 10:44 PM IST

Doctor Verified

வாயுத் தொல்லை, மலச்சிக்கல் – IBS குடல் பிரச்னையின் அறிகுறிகளா? மருத்துவர் விளக்கம்

அடிக்கடி வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் ஏற்படுகிறதா? Irritable Bowel Syndrome (IBS) குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கும் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்.

வயிற்றில் ஏற்படும் செரிமானக் கோளாறுகள் காரணமாக உருவாகும் வாயுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகள் குறித்து சித்த மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன் முக்கிய விளக்கங்களை வழங்கியுள்ளார். இன்றைய வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கங்களும் இந்த பிரச்னைகளுக்கு பிரதான காரணமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குடல் சரியாக சுருங்கி விரிந்து செயல்படாத நிலையில், உடலில் உருவாகும் கழிவுகளை முழுமையாக வெளியேற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் மலச்சிக்கல் உருவாகிறது. சிலருக்கு, இந்த கழிவுகள் முறையாக வெளியேறாமல் வாயுத் தொல்லையுடன் வெளியேறுவதால் கடும் அசௌகரியம் ஏற்படுகிறது என்றும் மருத்துவர் கார்த்திகேயன் விளக்குகிறார்.

இந்த நிலை மருத்துவத்தில் “Irritable Bowel Syndrome (IBS)” என அழைக்கப்படுகிறது. உணவு முறையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் போன்றவை இந்த குடல் பிரச்னையை உருவாக்குகின்றன. இருப்பினும், இந்த பிரச்னை தீவிரமாக இருந்தால் சுயமாக சிகிச்சை மேற்கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

Source: https://youtu.be/_ZJCukSYhk8

IBS-க்கான எச்சரிக்கை அறிகுறிகள்:

  • வயிற்றை முழுமையாக காலி செய்த உணர்வு இல்லாதிருத்தல்
  • காரணமில்லாத அதிக எடை இழப்பு
  • இரவு நேரங்களில் அடிக்கடி வயிற்றுப் போக்கு
  • மலத்தில் இரத்தக் கசிவு
  • தொடர்ச்சியான வயிற்று வலி

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.

IBS ஏற்படக் காரணங்கள்:

  • குடல் தசைகள் சரியாக இயங்காத நிலை
  • நரம்பு மண்டல பாதிப்புகள்
  • குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா
  • மன அழுத்தம் மற்றும் கவலை
  • சில உணவுகளுக்கான ஒவ்வாமை

கோதுமை, பால் மற்றும் பால் பொருட்கள், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், முட்டைகோஸ் போன்ற உணவுகள் சாப்பிடும்போது வயிற்று பிரச்னை அதிகரிக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், அந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 2 பானங்கள் உங்கள் பெருங்குடலை நேரடியாக தாக்கும்! நிபுணர் எச்சரிக்கை

செரிமானத்தை சீராக்க உதவும் வழிகள்:

  • நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுதல்
  • போதுமான அளவு தண்ணீர் குடித்தல்
  • தினசரி உடற்பயிற்சி
  • ஒழுங்கான தூக்கம்
  • மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

இறுதியாக..

வயிற்று வாயுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவை சாதாரண பிரச்னைகள் போல் தோன்றினாலும், அவை IBS போன்ற குடல் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் பல்வேறு செரிமான பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். இருப்பினும், தீவிரமான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளங்களில் கிடைத்த தகவல்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உடல்நல நிபுணரை அணுகுவது அவசியம்.

Read Next

காலையில் குளிப்பதன் அறிவியல்.. சித்த மருத்துவர் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 18, 2025 11:31 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content