Fri Sep 11, 2026 | 09:51 PM IST

Doctor Verified

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கிறீர்களா.? அது சாதாரணமல்ல.! காலை காபி பழக்கத்தை கைவிடுங்கள்..

Irritable bowel syndrome (IBS) என்பது சாப்பிட்டவுடன் அடிக்கடி மோஷன் போவது போன்ற பிரச்சனையாகும். மருத்துவர் ஷர்மிகா இதன் காரணங்கள், தீர்வுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய பழக்கங்களை விளக்குகிறார்.

அனைவரின் ஜீரண சக்தியும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு சாப்பிட்ட உடனே மோஷன் போகும் பழக்கம் இருக்கும். காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு என எப்போதும் சாப்பிட்டாலுமே உடனே மோஷன் செல்லும் பிரச்சனையால் அவர்கள் நாள்தோறும் அவதிப்படுவார்கள். இந்த நிலைமை தான் மருத்துவ ரீதியில் “Irritable Bowel Syndrome (IBS)” என அழைக்கப்படுகிறது என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.

Video Link: https://youtu.be/FXM9RNLkoHc

சாதாரண விஷயம் அல்ல – மருத்துவர் எச்சரிக்கை

பலரும் இதனை சாதாரண ஜீரணக் கோளாறு என்று நினைத்து புறக்கணித்து விடுகின்றனர். ஆனால், இது மிகவும் கவனிக்க வேண்டிய பிரச்சனை என்று அவர் எச்சரிக்கிறார். நாம் சாப்பிடும் உணவு — கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து — ஆகியவை வயிற்றுக்குள் சென்று குறைந்தது 2.5 மணி நேரம் இருந்துதான் உடலால் சரியாக உறிஞ்சப்படும். அப்படி இல்லாமல் உடனே வெளியேறி விடுமானால், உணவில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் கலந்து உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சென்றடையாது. உதாரணமாக, தலைமுடி, சருமம் ஆரோக்கியமாக இருக்க உணவை எடுத்துக்கொண்டாலும், அதனுடைய முழுப் பலனும் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.

Main

காபி-டீ பழக்கமும் IBSக்கும் உள்ள தொடர்பு

இந்த Irritable bowel syndrome ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் என மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். பல ஆண்டுகளாக இந்த பழக்கத்தில் இருப்பவர்களுக்கு IBS அதிகம் காணப்படுகிறது. அதனால், வெறும் வயிற்றில் காபி/டீ குடிப்பதை தவிர்த்து, சூடான நீர், பழச்சாறு, எளிய ஹெர்பல் டிரிங்க்ஸ் மற்றும் லேசான காலை உணவுகள் எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த அறிகுறிகள் இருந்தால்.. நீங்கள் தவறான முறையில் மலம் கழிக்கிறீர்கள் என்று அர்த்தம்..

மற்ற காரணங்களும் இருக்கலாம்

IBSக்கு காபி பழக்கம் தவிர, அதிக மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கங்கள், குறைந்த தூக்கம், குடல் சுகாதார குறைபாடுகள் போன்ற பல காரணங்களும் காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

மருத்துவர் ஆலோசனை அவசியம்

இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்தால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில் IBSயை புறக்கணித்தால், பின்னர் ஜீரணக் கோளாறுகள், ஊட்டச்சத்து குறைபாடு, வாழ்க்கை தரம் குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகம்.

how-to-deal-with-stress-induced-inflammatory-bowel-diseases-01

இறுதியாக..

Irritable bowel syndrome என்பது சாப்பிட்ட உடனே அடிக்கடி மோஷன் போவது போன்ற பிரச்சனையாக தோன்றினாலும், அதன் தாக்கம் மிகுந்ததாக இருக்க முடியும். வெறும் வயிற்றில் காபி/டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி, சீரான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது முக்கியம். பிரச்சனை நீடித்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது தான் சிறந்த தீர்வு.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவல் மற்றும் மருத்துவ வல்லுநரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெற பரிந்துரைக்கப்படுகிறது.

Read Next

காலை எழுந்தவுடன் செய்யும் இந்த 10 பழக்கங்கள் உங்கள் குடலை மற்றும் சக்தியை பாதிக்கும்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 24, 2025 10:15 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content