Fri Sep 11, 2026 | 11:08 PM IST

Doctor Verified

சிறந்த குடல் செயல்பாட்டுக்கு உதவும் 10 பழங்கள்.! மருத்துவர் பரிந்துரை..

மலச்சிக்கல், IBS போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா? டாக்டர் ஜோசப் சல்ஹாப் பரிந்துரைக்கும் இந்த 10 பழங்கள் உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தி செரிமானத்தை சீராக்கும்!

உலகளவில் சுமார் 25 முதல் 45 மில்லியன் மக்கள் “Irritable Bowel Syndrome (IBS)” எனப்படும் குடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவறான உணவு பழக்கங்கள், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை ஆகியவை குடல் இயக்கத்தையும் செரிமானத்தையும் பாதிக்கின்றன.

சமீபத்தில், பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹாப், தனது வீடியோவின் மூலம் குடல் இயக்கத்தை சீராக்க உதவும் 10 முக்கியமான பழங்களை பரிந்துரைத்துள்ளார். “ஒவ்வொரு பழத்திலும் தனித்துவமான பாலிஃபெனால்கள், ப்ரீபயாட்டிக் நார்ச்சத்து மற்றும் சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் குடல் இயக்கத்தை ஊக்குவித்து செரிமானத்தை மேம்படுத்தும்” என்று அவர் கூறுகிறார்.

குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் பழங்கள்

1. டிராகன் பழம் (Dragonfruit)

மத்திய அமெரிக்காவில் தோன்றிய இந்தப் பழம் இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து நிறைந்தது. இதனால் குடல் இயக்கம் சீராகும் மற்றும் மலச்சிக்கல் தவிர்க்கப்படும்.

2. ப்ரூன்ஸ் (Prunes)

உலர்ந்த பிளம்கள் எனப்படும் ப்ரூன்ஸ், மலச்சிக்கலை தீர்க்க சிறந்தது. ஒரு ஆய்வின் படி, தினமும் 80 கிராம் ப்ரூன்ஸ் 4 வாரங்கள் சாப்பிட்டவர்களுக்கு மல அடர்த்தி மற்றும் அடிக்கடி கழிவு வெளியேற்றம் மேம்பட்டது என கண்டறியப்பட்டது.

3. மாம்பழம் (Mango)

மாம்பழத்தில் உள்ள பயோஆக்டிவ் பைட்டோ கேமிக்கல்ஸ், பீனாலிக் அமிலங்கள், நார்ச்சத்து ஆகியவை செரிமானத்துக்கு முக்கியம். ஒரு ஆய்வில் தினமும் 100 கிராம் மாம்பழம் சாப்பிட்டவர்கள் குடல் நுண்ணுயிர்களின் வகைமையை அதிகரித்தனர் மற்றும் சர்க்கரை நோய், குடல் அழற்சி போன்ற பிரச்சனைகளில் குறைவைக் கண்டனர்.

4. பேரிக்காய் (Pears)

பேரிக்காய் பழத்தில் நார்ச்சத்து, ஃப்ருக்டோஸ், சோர்பிடால் போன்ற இயற்கை நச்சுத்தன்மை நீக்கும் அமிலங்கள் உள்ளன. இவை குடல் இயக்கத்தை ஊக்குவித்து மலச்சிக்கலைத் தடுக்கும்.

5. ஆப்பிள் (Apples)

ஆப்பிள் 80% தண்ணீரையும், மீதியை ஃபீனாலிக் கலவைகள் மற்றும் நார்ச்சத்தும் கொண்டுள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி குடல் நோய்களைத் தடுக்க உதவும் இயற்கை மருந்தாகும்.

6. புளி (Tamarind)

புளியில் உள்ள பீக்டின் நார்ச்சத்து மற்றும் டார்டாரிக் அமிலம் செரிமானத்துக்கு சிறந்தது. இது ப்ரோபயாட்டிக் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சுவரொட்டி.. இரும்புச்சத்தின் பொக்கிஷம்.! மருத்துவர் விளக்கம்.. 

7. ஆரஞ்சு (Oranges)

ஆரஞ்சு பழத்தில் உள்ள கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள் மலச்சிக்கலை தடுக்கும். இது கழிவை மென்மையாக மாற்றி, சத்துக்கள் உறிஞ்சப்படுவதையும் மேம்படுத்துகிறது.

8. பப்பாளி (Papaya)

பப்பாளியில் உள்ள பப்பைன் என்சைம் புரதங்களை எளிதாக செரிமானமாக்குகிறது. அதன் Vitamin C, பீட்டா-கரோட்டின் குடல் நலத்தை பாதுகாக்கிறது.

9. செர்ரி (Cherries)

அமெரிக்காவில் பெரிதும் பயிரிடப்படும் செர்ரி பழத்தில் பாலிஃபெனால்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகம். இவை குடல் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து குடல் அழற்சி, உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றைத் தடுக்கின்றன.

10. கிவி (Kiwi)

100 கிராம் கிவி பழம் உங்கள் தினசரி நார்ச்சத்து தேவையின் 10% வழங்கும். இதில் உள்ள அக்டினிடின் என்சைம் செரிமான நேரத்தை குறைத்து மென்மையான கழிவை உருவாக்குகிறது.

View this post on Instagram

A post shared by Dr. Joseph Salhab (@thestomachdoc)

இறுதியாக..

குடல் ஆரோக்கியம் உடலின் மொத்த நலனுக்கும் அடிப்படையாகும்.பழங்களில் உள்ள இயற்கை நார்ச்சத்துகள், என்சைம்கள், ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் ஆகியவை குடலை சுத்தமாக வைத்துக்கொண்டு செரிமானத்தையும் நோய் எதிர்ப்பையும் மேம்படுத்தும். அதனால் தினசரி பழங்கள் சாப்பிடுவது ஒரு “இயற்கை மருந்து” என கூறலாம்.

Disclaimer: இந்த கட்டுரை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு நீண்டநாள் செரிமான அல்லது குடல் பிரச்சனையினும், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

சுவரொட்டி.. இரும்புச்சத்தின் பொக்கிஷம்.! மருத்துவர் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 12, 2025 20:35 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content