Fri Sep 11, 2026 | 09:31 PM IST

Doctor Verified

மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் பெற.. இதை மட்டும் சாப்பிடவும்..

மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? குடலின் இயக்கத்தை மேம்படுத்தி உடனடி நிவாரணம் தரும் 10 சிறந்த உணவுகளை காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி பரிந்துரைத்துள்ளார். தினசரி உணவில் சேர்த்தால் மலச்சிக்கல் பிரச்சனை மறையும்.

இன்றைய வேகமான வாழ்க்கை முறை, குறைந்த நார்ச்சத்து உணவு, மன அழுத்தம், மற்றும் போதிய தண்ணீர் குடிக்காத பழக்கம் ஆகியவை பலரையும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாக்கி வருகிறது. குடல் இயக்கம் சீராக இல்லாததால், உடல் சோர்வு, வயிற்றுவலி, வாயு பிரச்சனை போன்றவை உருவாகின்றன.

இந்தப் பிரச்சனைக்கு மருந்து மட்டுமல்ல, இயற்கையான உணவுகளும் சிறந்த தீர்வாக இருக்கலாம் என்று காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டாக்டர் சேதி மலச்சிக்கலிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் 10 இயற்கை உணவுகளைப் பகிர்ந்துள்ளார்.

மலச்சிக்கலுக்கான உணவுகள்

1. கிவி (Kiwi)

கிவியில் நார்ச்சத்து மிக அதிகம். இது குடல் இயக்கத்தை ஊக்குவித்து, செரிமானத்தை எளிதாக்குகிறது. தினமும் ஒரு கிவி பழம் சாப்பிடுவது குடலை சுத்தப்படுத்த உதவும்.

2. பப்பாளி (Papaya)

பப்பாளியில் பப்பைன் (Papain) எனப்படும் என்சைம் உள்ளது. இது உணவைக் கூடிய விரைவில் செரிமானிக்க உதவுகிறது. வயிற்று புடைப்பை குறைத்து, மலச்சிக்கலைத் தணிக்க சிறந்த பழம்.

3. பிரூன்ஸ் (Prunes)

உலர்ந்த பிளம் பழம் எனப்படும் பிரூன்ஸ், இயற்கையான லாக்ஸட்டிவ் (natural laxative). இதில் சோர்பிடால் எனப்படும் சேர்மம் குடல் இயக்கத்தை மேம்படுத்தி உடனடி நிவாரணம் அளிக்கிறது.

4. ஆளி விதைகள் (Flaxseeds)

சிறிய அளவிலேயே மிகுந்த நார்ச்சத்து தரும் ஆளி விதைகள் குடலை சுத்தப்படுத்தி செரிமானத்தை சீராக்கும். இதை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: தரமற்ற பலகாரங்கள் விற்றால் 6 மாதம் சிறை – உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!

5. சியா விதைகள் (Chia Seeds)

சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி ஜெல்லாக மாறும் தன்மை கொண்டவை. இது குடல் புறணியை ஈரப்பதமாக வைத்துக்கொண்டு மலச்சிக்கலை தணிக்கிறது.

6. ஓட்ஸ் (Oats)

ஓட்ஸ் அதிக நார்ச்சத்துடன் கூடிய காலை உணவாகும். இது குடலில் நல்ல பாக்டீரியாவை ஊக்குவித்து, மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துகிறது.

7. பருப்பு வகைகள் (Lentils)

பருப்பு, கொண்டை கடலை, பாசிப் பருப்பு போன்றவை நார்ச்சத்தும் புரதமும் நிறைந்தவை. குடல் இயக்கத்தை மேம்படுத்தி செரிமானத்தை எளிதாக்கும்.

8. பசலைக் கீரை (Spinach)

பசலைக் கீரையில் நார்ச்சத்துடன் இரும்புச் சத்து மற்றும் மக்னீசியம் உள்ளது. இது குடலைச் சீராகச் செயல்படச் செய்யும். தினசரி உணவில் சேர்ப்பது மிகவும் பயனுள்ளது.

9. பேரிக்காய் (Pears)

பேரிக்காயில் சோர்பிடால் மற்றும் நார்ச்சத்து இரண்டும் அதிகம் உள்ளன. இது இயற்கையாகவே குடல் இயக்கத்தை தூண்டி, மலச்சிக்கலை உடனடியாகக் குறைக்கிறது.

10. சக்கரைவள்ளிக்கிழங்கு (Sweet Potatoes)

சக்கரைவள்ளிக்கிழங்கு நார்ச்சத்தும் விட்டமின் A-யும் நிறைந்தது. இது குடல் சுவர்களை ஈரப்பதமாக வைத்துக்கொண்டு மலச்சிக்கல் பிரச்சனையைத் தணிக்க உதவுகிறது.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

நிபுணர் பரிந்துரை

டாக்டர் சௌரப் சேதி கூறுகையில், “மலச்சிக்கல் ஒரு சாதாரண பிரச்சனை என்றாலும், அதை புறக்கணிக்கக் கூடாது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், போதிய தண்ணீர், உடற்பயிற்சி ஆகியவை சேர்ந்து குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும்” என தெரிவித்துள்ளார்.

உடனடி நிவாரணத்திற்கான சிறிய ஆலோசனைகள்

* காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்

* தினமும் குறைந்தது 2–3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்

* அதிக எண்ணெய், ஜங்க் உணவுகளைத் தவிர்க்கவும்

* தினசரி சிறிதளவு உடற்பயிற்சி அவசியம்

இறுதியாக..

மலச்சிக்கல் என்பது நீண்டகாலம் நீடித்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே இயற்கையான உணவுகள் வழியாக குடல் இயக்கத்தை சீர்படுத்துவது சிறந்த தீர்வாகும். டாக்டர் சௌரப் சேதி கூறிய இந்த 10 உணவுகள் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தி, உடனடி நிவாரணத்தை அளிக்கக் கூடியவை.

Disclaimer: இந்த தகவல்கள் பொதுவான ஆரோக்கிய நோக்கத்திற்காக மட்டுமே. கடுமையான மலச்சிக்கல் அல்லது குடல் பிரச்சனை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

உடலில் வீக்கத்தை உண்டாக்கும் இந்த தினசரி உணவுகளை நீங்க கட்டாயம் தவிர்க்கணும்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 16, 2025 19:51 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content