மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், குறைந்த தண்ணீர் உட்கொள்ளல் போன்ற காரணங்களால் குடல் நலம் பாதிக்கப்படுவது இப்போது சாதாரணம். ஆனால் ஒரு சின்ன மாற்றம் — நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்தால், குடல் ஆரோக்கியம், ஜீரண சக்தி, ஹார்மோன் சமநிலை என அனைத்தும் மேம்படும். அமெரிக்காவை சேர்ந்த குடல் நல நிபுணர் டாக்டர் பால் (Gastroenterologist), குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க சிறந்த 8 நார்ச்சத்து உணவுகளை பரிந்துரைத்துள்ளார். அவை என்ன தெரியுமா?
குடல் ஆரோக்கியத்திற்கான உணவுகள்
சியா விதைகள் (Chia Seeds)
இரண்டு டேபிள் ஸ்பூன் சியா விதைகளில் சுமார் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது கரையக்கூடிய நார்ச்சத்து (soluble fiber) ஆகும். இது குடலில் ஜெல் போல உருவாகி ஜீரணத்தை மெதுவாகச் செய்து, குடல் பாக்டீரியாவை ஊட்டுகிறது.
பருப்பு (Lentils)
ஒரு கப் வேகவைத்த பருப்பில் சுமார் 15 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது prebiotic fiber மற்றும் resistant starch ஆகியவற்றில் செழிப்பானது. ஜீரணத்தை மேம்படுத்தி, குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
ராஸ்பெர்ரி (Raspberries)
ஒரு கப் ராஸ்பெர்ரியில் 8 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது குறைந்த சர்க்கரை அளவுடன் கூடியது, ஆன்டி-ஆக்ஸிடென்ட் சக்தியில் வளமானது. நன்கு கழுவி சாப்பிடுவது அவசியம் – பூச்சி மருந்து பசை இருப்பதை தவிர்க்க.
அவகாடோ (Avocados)
ஒரு நடுத்தர அளவு அவகாடோவில் சுமார் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது கரையக்கூடிய + கரையாத நார்ச்சத்து இரண்டையும் கொண்டுள்ளது. இதனால் ஜீரணத்தையும், குடல் இயக்கத்தையும் சீராக்கும்.
ப்ராக்கோலி (Broccoli)
ஒரு கப் வேகவைத்த ப்ராக்கோலியில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதில் உள்ள Sulforaphane எனும் பொருள் குடல் பாக்டீரியாவை மேம்படுத்தி, குடல் வீக்கத்தையும், உப்புசத்தையும் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வயிறு உப்புசத்தை போக்கும் 10 அற்புத உணவுகள்.. டாக்டர் சௌரப் சேதி பரிந்துரை!
ஓட்ஸ் (Oats)
ஒரு கப் வேகவைத்த ஓட்ஸில் சுமார் 4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதில் உள்ள Beta-glucan எனும் prebiotic நார்ச்சத்து, குடல் நலத்தையும், கொலஸ்ட்ரால் அளவையும் சீராக்கும்.
ஃபிளாக்ஸீட்ஸ் (Flaxseeds)
ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்த ஃபிளாக்ஸீட்ஸில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ஜீரண சீராக்கம், ஹார்மோன் சமநிலை மற்றும் குடல் நலத்தை மேம்படுத்தும்.
கொண்டைக்கடலை & பீன்ஸ் (Chickpeas & Beans)
ஒரு கப் வேகவைத்த கொண்டைக்கடலை அல்லது பீன்ஸில் 13–15 கிராம் நார்ச்சத்து உள்ளது. இவை resistant starch கொண்டவை, இது குடலில் butyrate எனும் நல்ல கொழுப்பை உருவாக்கி குடல் சுவரை குணப்படுத்தும்.
இறுதியாக..
நம் உடலின் இரண்டாவது மூளை என அழைக்கப்படும் குடல் ஆரோக்கியமாக இருந்தால், மனநிலை முதல் சக்தி வரை அனைத்தும் மேம்படும். இந்த 8 நார்ச்சத்து உணவுகளை தினசரி உணவில் சேர்த்தால், ஜீரண பிரச்சனைகள், மலச்சிக்கல், வீக்கம் போன்றவை குறையும்.
“குடல் சுகம் என்றால் உடல் சுகம்!” எனவே, இன்று முதல் உங்கள் தட்டில் ஒரு நார்ச்சத்து உணவு அவசியம் இருக்கட்டும்!
Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவ ஆலோசனையாக அல்ல, தகவல் பகிர்வுக்காக மட்டுமே. தனிப்பட்ட உடல்நல பிரச்சனைகள் இருந்தால், தகுதியான மருத்துவரை அணுகவும்.
தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
-
Current Version
Nov 08, 2025 11:03 IST
Published By : Ishvarya Gurumurthy