Fri Sep 11, 2026 | 11:08 PM IST

Doctor Verified

சட்டுன்னு உடம்பு குறைய இந்த ஒரு பானம் போதும்.! மருத்துவர் பரிந்துரை..

உடல் எடை குறைய வெந்தயம், சீரகம், தனியா, பட்டை சேர்த்து செய்யப்படும் டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைத்த இயற்கை டிரிங்க் ரெசிபி பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த டிரிங்க் எப்படி எடை குறைக்க உதவுகிறது என்பதையும் இங்கே பார்க்கலாம்.

இன்றைய காலத்தில் பலரும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். அதனை குறைக்க ஜிம்மும், டயட்டும், மருந்துகளும் என பல முயற்சிகள் செய்தும் பலர் முடிவை அடைய முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் ஒரு எளிய இயற்கை டிரிங்க் ரெசிபியை பரிந்துரைத்துள்ளார். இதை தொடர்ந்து குடிப்பதால் உடல் எடை இயற்கையாக குறையும் என அவர் கூறியுள்ளார்.

டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைத்த விதத்தில்..

முக்கியமான பொருட்கள்

வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்

தனியா – 2 டேபிள்ஸ்பூன்

பட்டை – 10 சிறிய துண்டுகள்

சுக்கு – 1 டீஸ்பூன் (விருப்பத்திற்கேற்ப)

மஞ்சள்தூள் – 1 டேபிள்ஸ்பூன்

papaya for weight loss

செய்முறை

முதலில் ஒரு கடாயை எடுத்து, மிதமான தீயில் வெந்தயத்தை வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் அதே முறையில் சீரகம், தனியா மற்றும் பட்டையை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பொருட்கள் அனைத்தும் ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இதில் சுக்கு பொடி மற்றும் மஞ்சள்தூள் சேர்த்தால் கூடுதல் நன்மை கிடைக்கும் என டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.

Video Link: https://youtu.be/8gcP7aSgE78

டிரிங்க் தயாரிப்பு:

* ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றவும்.

* அதில் மேலே தயாரித்த வெந்தயப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்.

* பாதி அளவு தண்ணீர் சுண்டும் வரை நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

* வடிகட்டிய பிறகு, அரை எலுமிச்சை சாறு பிழிந்து சேர்க்கவும்.

* விருப்பம் இருந்தால், சிறிதளவு உப்பும் சேர்க்கலாம்.

இந்த டிரிங்க் தினமும் காலையுணவுக்கு முன்னர் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை குறைய சிறப்பாக உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: டக்கு டக்குனு வெய்ட்டு குறையனுமா.? அதான் பாதாம் பிசின் இருக்கே.. இப்படி பட்டும் சாப்பிடுங்க..

இந்த டிரிங்க் எடை குறைப்பதில் எப்படி உதவுகிறது?

* வெந்தயம் உடலின் கொழுப்பை கரைக்கும் சிறந்த இயற்கை மூலிகையாகும்.

* சீரகம் செரிமானத்தை மேம்படுத்தி வயிற்றுப் புடைப்பை குறைக்கும்.

* தனியா உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி சீரான மெட்டபாலிசத்தை உருவாக்குகிறது.

* பட்டை (Cinnamon) இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி கொழுப்பை எரிக்க உதவுகிறது.

* மஞ்சள்தூள் உடலின் அழற்சியை குறைத்து, கொழுப்பு சேமிப்பை தடுக்கிறது.

இந்த இயற்கை பொருட்கள் சேர்ந்து உடலின் சீரான செரிமானத்தை உருவாக்கி கொழுப்பு கரைய உதவுகின்றன.

how-to-lose-weight-without-exercise-02

இறுதியாக..

உடல் எடை குறைக்க மருந்துகளுக்குப் பதிலாக இயற்கை மூலிகைகள் அடங்கிய டிரிங்குகள் மிகவும் பயனுள்ளவை. டாக்டர் கார்த்திகேயன் கூறிய இந்த வெந்தயம் டிரிங்க், ஆரோக்கியமான முறையில் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த வழி. இதை தினமும் காலையுணவிற்கு முன் குடிப்பது சிறந்தது.

Disclaimer: இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் மருத்துவ ஆலோசனை அல்ல. நீங்கள் ஏற்கனவே உடல்நல பிரச்சினைகளுக்காக மருந்து எடுத்துக் கொண்டால் அல்லது சிறப்பு மருத்துவ நிலை உள்ளவராக இருந்தால், இந்த டிரிங்கை உட்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

கண் ஆரோக்கியம் முதல் மூளை ஆரோக்கியம் வரை.. கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகள் இங்கே

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 13, 2025 19:17 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content