Fri Sep 11, 2026 | 10:44 PM IST

Doctor Verified

கண் முக்கியம் பாஸ்.. பட்டாசு வெடிக்கும் போது கண்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?

தீபாவளியில் பட்டாசு வெடிக்கும் போது கண்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் பட்டாசு வெடிக்கும் போது கண்களைப் பாதுகாப்பதற்கான முறைகளையும், பட்டாசு கண்களில் படும் போது என்ன செய்யக்கூடாது என்பது குறித்தும் மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

தீபாவளி என்றாலே புது ஆடைகள், இனிப்பு, பட்டாசு போன்றவையே நமக்கு முதலில் நினைவுக்கு வரும். வயது வரம்பில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி பட்டாசுகளை வெடிப்பர். ஆனால், இது பாரம்பரியமாக கருதப்பட்டாலும் பட்டாசு வெடிப்பின் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். பொதுவாக பட்டாசு வெடிப்பது உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பதாகவே அமைகின்றன. பட்டாசு தயாரிக்கப்படும் போது அதில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்களே இதற்கு காரணமாகும்.

இதில் முக்கியமாக பட்டாசுகளால் பாதிக்கப்படுவது நம் கைகள், விரல்களுக்கு அடுத்தபடியாக, கண்கள் மிகவும் பொதுவான பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதில் சில பொதுவான காயங்கள் ஸ்பார்க்லர்ஸ் மற்றும் வெடிகுண்டுகளுடன், சக்ரா பட்டாசுகளால் ஏற்படுகின்றன. இவை கண்களில் காயத்தை ஏற்படுத்தக்கூடும். இதில் பட்டாசு வெடிப்பின் போது கண்களைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து பரோடாவில் உள்ள அடிகுரா சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கண் மருத்துவர் மற்றும் கண் அறுவை சிகிச்சை நிபுணராகப் பயிற்சி பெற்று வரும் மருத்துவர் சுர்பி கபாடியா அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காணோம்.

இந்த பதிவும் உதவலாம்: தீபாவளிக்கு முகம் நல்லா ஜொலிக்கணுமா? இந்த டிப்ஸ் பின்பற்றுங்க..

பட்டாசு வெடிக்கும் போது கண் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாப்பது?

மருத்துவர் வீடியோவில் குறிப்பிட்டதாவது,”பெரும்பாலான பண்டிகைகள் அல்லது உங்கள் வீடு அல்லது குடும்பத்தில் ஏதேனும் மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்கு பட்டாசுகள் ஒரு முக்கிய வழியாகும். இருப்பினும், இந்த பட்டாசுகள் வெடிக்கும்போது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள்” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, “இந்த பட்டாசுகளால் ஏற்படும் காயத்தின் அளவு சிறிய காயங்கள் முதல் பேரழிவு தரும் காயங்கள் வரை மாறுபடும். இதனால் மக்கள் தங்கள் பார்வையையோ அல்லது கண்ணையோ முற்றிலுமாக இழக்க நேரிடும். உலகளாவிய ஆராய்ச்சிகளின்படி, இந்த பட்டாசு காயங்கள் 20 வயதுக்குட்பட்டவர்களையே பெரிதும் பாதிக்கின்றன என்பது கவனிக்கப்படுகிறது” என்றும் விளக்கினார்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

கண்களில் பட்டாசு துகள்கள் விழுந்தால் என்ன செய்யக்கூடாது என்பதை மருத்துவர் பகிர்ந்துள்ளார். அதன் படி,

  • கண்களைத் தேய்க்கக்கூடாது
  • கண்களைக் கழுவக் கூடாது
  • கண்களில் அழுத்த முயற்சி செய்யக்கூடாது
  • பட்டாசு காயத்திற்குப் பிறகு, கண்ணில் சிக்கிய எதையும் அகற்ற முயற்சிக்கக் கூடாது
  • மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கண் சொட்டுகள் அல்லது கண் களிம்புகளைப் பயன்படுத்தி சுய மருந்து செய்யக்கூடாது
  • பட்டாசு காயம் ஏற்பட்டால் எப்போதும் கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தீபாவளியில் புகை மாசுபாட்டிலிருந்து நுரையீரலை பாதுகாக்க காலையில் நீங்க குடிக்க வேண்டிய பானம்..

இது தவிர, பட்டாசு வெடிப்பின் போது கண்களைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் எஸ்.சௌந்தரி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றியும் காணலாம்.

பட்டாசு வெடிக்கும் போது மேற்கொள்ள வேண்டியை எச்சரிக்கை குறிப்புகள்

  • எப்போதும் திறந்த வெளியில் பட்டாசுக்களை வெடிக்க வேண்டும். கண்ணாடி அணிந்து கொள்வது பாதுகாப்பானது. மேலும் சுத்தமான நீரில் கைகளைக் கழுவ வேண்டும்.
  • பட்டாசு வெடிக்கும் சமயத்தில் செயற்கை ஆடைகளை அணியக் கூடாது.
  • பட்டாசுகள் உள்ள பெட்டியை குழந்தைகளுக்கு எட்டாத வகையில் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

  • ஒரு வாளி தண்ணீர் மற்றும் மணலைத் தற்செயலாக தீப்பிடிப்பதற்கு எளிதில் கிடைக்கக் கூடியதாக வைக்க வேண்டும்.
  • எப்போதும் நல்ல செருப்புகளை அணிய வேண்டும். இது எரிந்த பட்டாசுகள் காலில் படாமல் பாதுகாக்கும்.
  • பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக, கான்டாக்ட் லென்ஸ்களை அகற்ற வேண்டும். அதற்குப் பதிலாக கண்ணாடி பயன்படுத்தலாம். இது கண்களைச் சிறந்த முறையில் பாதுகாக்க உதவுகிறது.

இவ்வாறு பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் நல்ல, ஆரோக்கியமான முறையில் தீபாவளியைக் கொண்டாடலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Diwali Causes: பட்டாசு வெடிக்கும் போது கண்களை பாதுகாக்க இதை செய்யுங்க

Image Source: Freepik

Read Next

முதல் முறையாக உடலுறவில் ஈடுபடுகிறீர்களா? மருத்துவர் ராஜேஸ்வரி ரெட்டி கூறும் பாதுகாப்பு வழிமுறைகள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 17, 2025 14:15 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content