How to make weight loss powder at home: நம்மில் பலர் தவறான உணவு பழக்கம் மற்றும் செயலற்ற வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரிப்பு பிரச்சினையை சந்தித்து வருகிறோம். கோடைக்காலம் உடல் எடையை குறைக்க மிகவும் சிறந்தது. அதே சமயம், குளிர்காலம் உடல் எடையை வேகமாக அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் குளிர்காலத்தில் தங்கள் உணவு மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குளிர்காலத்தில் பெரும்பாலும் நாம் அதிகமாக உணவு சாப்பிடுவோம், குறைந்த அளவு தண்ணீர் குடிப்போம். இதற்கு காரணம், மூளையில் இருந்து வரும் தாகத்திற்கான சமிக்ஞையை பசி என்று தவறாகப் புரிந்துகொண்டு அதிகப்படியான உணவை உட்கொள்கிறோம். குளிர்காலத்தில் எடை அதிகரிக்க இதுவே காரணம். எடை அதிகரிப்பதுடன், உடலில் தண்ணீர் பற்றாக்குறையால், வயிறு சம்பந்தமான பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
இந்த பதிவும் உதவலாம் : Beetroot Juice: இவங்க எல்லாம் மறந்து கூட பீட்ரூட் ஜூஸ் குடிக்கக்கூடாதாம்; ஏன் தெரியுமா?
குளிர்காலத்தில் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், நாங்கள் உங்களுக்கு ஒரு சூப்பரான ஆயுர்வேத பொடி பற்றி கூறுகிறோம். இது உங்கள் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். அந்த பொடியை எப்படி தயாரிப்பது மற்றும் உட்கொள்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்கும் பொடி தயாரிப்பது எப்படி?

இந்திய வீடுகளின் சமையலறையில் மசாலா பொருட்களுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. அவை உணவின் சுவையை மட்டும் அல்ல, ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றில் சில உடல் எடையை குறைக்கவும் உதவும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான்.
- எடை குறைக்கும் பொடியை தயாரிக்க, 2 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் பெருஞ்சீரகம், 2 டீஸ்பூன் உலர் கொத்தமல்லி விதை மற்றும் 2 இன்ச் இலவங்கப்பட்டை ஆகியவற்றை தனியே எடுத்து வைக்கவும்.
- இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் இந்த மசாலா பொருட்களை சேர்த்து லேசாக வறுக்கவும்.
- மசாலா வாசனை வர ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்து அதை குளிர்விக்கவும்.
- மசாலா ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடி தயார் செய்யவும்.
- இதோ எடை இழப்பு தூள் தயாராக உள்ளது, அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Pulses: பருப்பை இப்படி சமைத்து சாப்பிட்டால் வாயு, அசிடிட்டி பிரச்சனையே வராதாம்!
இந்த பொடியை எப்படி சாப்பிடணும்?
குளிர்காலத்தில் காலையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட எடை இழப்பு பொடியை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து உட்கொள்ளவும். இதற்கு, 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி பொடியை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த பொடியை காலையில் சாப்பிட மறந்து விட்டால், இரவு உணவிற்கு 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிடலாம்.
ஆயுர்வேத பொடியின் நன்மைகள்

- வெந்தயம், சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை எடையைக் குறைக்க உதவும்.
- இதை உட்கொள்வதன் மூலம், எடை இழப்பு பயணம் எளிதாக இருக்கும்.
- இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : ABC Juice: வெறும் வயிற்றில் ஏபிசி ஜூஸ் குடிக்கலாமா? அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்!
- இந்த தூள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
- இதில் உள்ள இலவங்கப்பட்டை ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, அதன் நுகர்வு இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
Pic Courtesy: Freepik