Beetroot Juice: இவங்க எல்லாம் மறந்து கூட பீட்ரூட் ஜூஸ் குடிக்கக்கூடாதாம்; ஏன் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Beetroot Juice: இவங்க எல்லாம் மறந்து கூட பீட்ரூட் ஜூஸ் குடிக்கக்கூடாதாம்; ஏன் தெரியுமா?

என்னதான் இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கினாலும், இது அனைவருக்கும் நல்ல பலன்களை தராது. சிலருக்கு பீட்ரூட் ஜூஸ் குடிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சில உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட் ஜூஸைக் குடிக்கக் கூடாது. யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸ் குடிக்கக் கூடாது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Flaxseed Tea: உடல் எடை முதல் கொலஸ்ட்ரால் வரை அனைத்து பிரச்சினையையும் தீர்க்கும் ஆளிவிதை டீ!

யார் பீட்ரூட் ஜூஸ் குடிக்கக்கூடாது?

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்

டயட் என் க்யூரின் டயட்டீஷியனும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா காந்தி கூற்றுப்படி, “சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கக் கூடாது. இதில் அதிக அளவு ஆக்சலேட்டுகள் உள்ளன. பீட்ரூட் சாறு அதிகமாக உட்கொண்டால், அது சிறுநீரக கற்களை உண்டாக்கும். ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது ஆக்சலேட் அடிப்படையிலான கற்கள் உருவாகும் அபாயம் உள்ளவர்கள் பீட்ரூட்டை உட்கொள்வதை குறைக்க வேண்டும்”.

குறைந்த இரத்த அழுத்தம்

குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கக் கூடாது. இருப்பினும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இயற்கையாகவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது ஏற்கனவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க மருந்துகளை உட்கொள்பவர்கள் பீட்ரூட் ஜூஸைக் குடிக்கக் கூடாது. அப்படிப்பட்டவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தவுடன் தலைசுற்றல் அல்லது மயக்கம் வரலாம்.

இந்த பதிவும் உதவலாம் : முட்டைக்கோஸை ஒருபோதும் இப்படி சாப்பிடக்கூடாது.!

ஒவ்வாமை உள்ளவர்கள்

சிலருக்கு பீட்ரூட் அல்லது பீட்ரூட் சாற்றில் உள்ள பொருட்கள் ஒவ்வாமையாக இருக்கலாம். ஒருவருக்கு பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஒவ்வாமை இருந்தால், அவர்கள் அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பீட்ரூட் ஜூஸுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் அதிலிருந்து தயாரிக்கப்படும் பிற பொருட்களை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

செரிமான பிரச்சனை

பீட்ரூட் ஜூஸ் நார்ச்சத்து நிறைந்தது. சில நேரங்களில் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) உள்ளவர்களை இது தொந்தரவு செய்கிறது. நீங்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றால், ஆரம்ப நாட்களில் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறதா என்பதையும் கவனியுங்கள். எந்த பிரச்சனையும் இல்லை என்றால், நீங்கள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம். ஆனால், குறைந்த அளவில்.

இந்த பதிவும் உதவலாம் : Orange Juice In Winter: குளிர்காலத்தில் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாமா வேண்டாமா?

பெடூரியா தொற்று உள்ளவர்கள்

பெடூரியா என்பது ஒரு நபரின் சிறுநீர் சிவப்பு நிறமாக மாறும் ஒரு வகையான பிரச்சனையாகும். பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் சிறுநீர் சிவப்பாக மாறுவது சிலரிடம் காணப்பட்டது. இது உங்களுக்கு நேர்ந்தால், அது எந்தவொரு உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பீட்ரூட் ஜூஸ் உட்கொள்வதை நிறுத்தியவுடன், சிறுநீரின் நிறம் சாதாரணமாகிவிடும்.

Pic Courtesy: Freepik

Read Next

Benefits of Ginger: வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸ் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்