Fri Sep 11, 2026 | 10:17 PM IST

Doctor Verified

இப்படி செய்தால் 30 நாளில் உடல் எடையை குறைக்கலாம்.! மருத்துவர் விளக்கம்..

மருந்து இல்லாமல் 30 நாட்களில் எடையை குறைக்கலாம்! மருத்துவர் சிவராமன் கூறும் உணவு முறைகள், பழக்கவழக்க மாற்றங்கள், உடற்பயிற்சி குறிப்புகள் மற்றும் நாள் முழுவதும் பின்பற்ற வேண்டிய உணவுத் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பலரும் உடல் எடையை குறைக்க மருந்துகள் அல்லது மாத்திரைகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ஆனால், அவை தற்காலிக நிவாரணம் அளிக்கும் போதும், உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், பிரபல மருத்துவர் சிவராமன் அவர்கள், “உடல் எடையை குறைக்க மருந்து அல்ல, உணவு பழக்கவழக்கமும் உடற்பயிற்சியும் தான் முக்கியம்” என அறிவுறுத்தியுள்ளார்.

Video Link: https://youtu.be/P9ACIDWqw0I

உணவு பழக்கவழக்கத்தில் மாற்றம் அவசியம்

“உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் பால் சார்ந்த பொருட்களை (Milk products) தவிர்க்க வேண்டும். அதேபோல், இனிப்பு வகைகளையும் முற்றிலுமாக விலக்க வேண்டும்,” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். கூடுதலாக, கிழங்கு வகைகள், பச்சரிசி, மைதா போன்றவற்றையும் உடனே நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

காலை பழக்க வழக்கம்

காலை எழுந்ததும் சுடுநீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. அதன்பின் காலை 8 மணிக்கு பழங்கள் (மாதுளை, தர்பூசணி, பப்பாளி, கொய்யா போன்றவை) உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

மதிய மற்றும் மாலை உணவு திட்டம்

காலை 11 மணியளவில் கிரீன் டீ அல்லது மோர் குடிக்கலாம். இது உடலை குளிரச்செய்து, ஜீரணத்தை சீராக்கும். மதிய உணவாக வரகு அரிசி, சோளம், தினை, குதிரைவாலி போன்ற தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதில் அதிக அளவு காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் சர்க்கரை அல்லது பால் சேர்க்காத தேநீர் குடிப்பது சிறந்தது.

இரவு உணவு

இரவில் வெண்டைக்காய், அவரைக்காய், பீன்ஸ் போன்ற காய்கறி வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இது எளிதில் ஜீரணமாகி, உடல் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். மேலும், வாரத்திற்கு ஒரு நாள் முழு நாள் பழங்களும் நீரும் மட்டும் எடுத்துக்கொள்வது உடலுக்கு ஓய்வு அளிக்கிறது.

உடற்பயிற்சி

“உணவுத் திட்டத்துடன் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதை தொடர்ச்சியாக 30 நாட்கள் செய்தால், உடல் எடையில் தெளிவான மாற்றம் காணலாம்,” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: முதுகு, முழங்கால் வலியால் அவதியா? இதிலிருந்து விடுபட உதவும் எளிய, பயனுள்ள பயிற்சி இதோ!

முக்கிய குறிப்புகள்

* தினமும் குறைந்தது 2–3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* இரவு உணவை 7 மணிக்குள் முடிக்கவும்.

* சிற்றுண்டி, ஜங்க் உணவுகள் தவிர்க்கவும்.

* சரியான தூக்கம் அவசியம் (7–8 மணி நேரம்).

* மனஅழுத்தத்தை குறைத்து அமைதியான வாழ்க்கை முறை பின்பற்றவும்.

இறுதியாக..

உடல் எடையை குறைப்பது ஒரு நாள் நிகழ்வு அல்ல. மருந்துகளின் மீது நம்பிக்கை வைக்காமல், உணவு முறையும் உடற்பயிற்சியும் இணைந்தால் மட்டுமே இயற்கையாகவும் பாதுகாப்பாகவும் எடையை குறைக்க முடியும். மருத்துவர் சிவராமன் கூறிய இந்த எளிய வழிகளை 30 நாட்கள் பின்பற்றினால், உடல் இலகுவாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.

Disclaimer: இக்கட்டுரை மருத்துவ ஆலோசனையாக அல்ல. இதில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் மருத்துவர் சிவராமனின் பொது பேச்சுகள் மற்றும் சுகாதார நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. எந்தவொரு உணவு மாற்றத்தையும் மேற்கொள்ளும் முன், உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

Read Next

எடை குறையவில்லை என்றால் தவறு உங்கள் டயட்டில் தான்! இந்த 5 உணவுகளை உடனே நிறுத்துங்கள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 30, 2025 09:18 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content