Fri Sep 11, 2026 | 11:07 PM IST

வேலையிடத்தில் ஏற்படும் பதட்டம், மன அழுத்தத்தை கையாள என்ன செய்யலாம்?

How to deal with workplace stress and anxiety: அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு இடங்களில் மன அழுத்தம், பதட்டத்தைச் சந்தித்து வருகிறோம். இதில் பணியிடம் மட்டும் விதிவிலக்கா என்ன? உண்மையில் நடைமுறை காலகட்டங்களில் பணியிடத்தில் நாம் அதிகப்படியான நேரத்தைச் செலவிடுகிறோம். அதிலும், குறிப்பாக ஐடி வல்லுநர்கள் மற்றும் வங்கியாளர்கள் முதல் பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என பலரும் அவர்களது வேலைகளில் நேரம் பாராமல் வேலை செய்கின்றனர். அதே சமயம், போதிய உடல் செயல்பாடு இல்லாமை நீண்ட கால மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதில் பணியிட மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து காணலாம்.

பணியிட மன அழுத்தத்தைக் கையாள்வது எப்படி

பணியிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் கையாள சில நடைமுறைகளைக் கையாளலாம்.

தேநீர் இடைவேளை

இன்று பலரும் மன அழுத்தம் இருக்கும் போது டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்வர். ஏனெனில், இந்த மன அழுத்த காலங்களில் டீ அருந்துவதை பழக்கமாக்கிக் கொள்வது மன அழுத்தத்தை நீக்குவதுடன், மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. எனவே பணி நேரங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளை எடுத்து தேநீரில் கவனம் செலுத்தலாம். தேநீரின் சூடு, நறுமணம் மற்றும் அதன் சுவையில் கவனம் செலுத்த முயற்சிப்பதன் மூலம் நினைவாற்றலை மேம்படுத்தலாம். இந்த எளிய செயலின் உதவியுடன் மனதை தெளிவாகவும், கவனமாகவும் வைத்திருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: காபி பிரியரா நீங்க? இது தெரியாம காபில கை வைக்காதீங்க!

அறிவிப்பைத் துண்டிப்பது

நாம் இன்று செல்போன் இல்லாத நபர்களையே பார்க்க முடிவதில்லை. ஆனால், அடிக்கடி மொபைல் போன்களைப் பயன்படுத்துவது கண் ஆரோக்கியம் போன்ற உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், மன ஆரோக்கியமும் பாதிப்படைகிறது. இந்நிலையில் மொபைல் போன்களில் அடிக்கடி வெளிவரும் அறிவிப்புகளின் நிலையான ஒலி மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனைத் தவிர்க்க டிஜிட்டல் டிடாக்ஸின் தருணங்களை வழக்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். இடைவேளையின் போது மின்னஞ்சல்கள் மற்றும் அறிவிப்புகளிலிருந்து துண்டிக்க வேண்டும். இது மனதிற்கு அமைதி உணர்வைத் தருகிறது.

எல்லைகளை அமைப்பது

விடுமுறை நாட்களில் அலுவலகப் பணியின் போது அல்லது வேறு சில செயலின் போது, வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே எல்லைகளை நிறுவ வேண்டும். தெளிவான எல்லைகளை நிறுவுவதன் மூலம், தனிப்பட்ட இடத்தில் வேலை தொடர்பான மன அழுத்தத்தை ஊடுருவாமல் தடுக்கலாம். சக ஊழியர்களிடம் எல்லைகளைத் தெரிவிப்பது, தனிப்பட்ட நேரத்தை உறுதி செய்வதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Sugar and Mental Health: சர்க்கரை அதிகம் சாப்பிட்டா மன அழுத்தம் ஏற்படுமா?

சிறிய வெற்றிகளை அனுபவிப்பது

இன்று பலரும் செய்யக்கூடிய வேலைக்கு ஏற்ற மதிப்பு, பாராட்டு போன்றவற்றைப் பெறுவதில்லை. இதன் காரணமாகவும் மன அழுத்தம் ஏற்படலாம். எனவே அவ்வப்போது இலக்கை அடைந்ததற்காக, சிறிய வெற்றிகளை அனுபவிக்கலாம். இது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கச் செய்வதுடன், வெற்றிகரமாகக் கையாள்வதற்கான மகிழ்ச்சியைத் தரும். மேலும், இது உற்பத்தி மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதற்கான சாதனை உணர்வைத் தருகிறது.

இல்லை என்ற சக்தியைத் தழுவுவது

ஒவ்வொரு பணிக்கும் ஆம் என்று கூறுவதற்கு நாம் கடினமாக உணர்கிறோம். குறிப்பாக, நமக்கு பதட்டம், பயம் அல்லது நம்பிக்கையற்றதாக உணர வைக்கிறது. இந்நிலையில் தேவைப்படும் போது இல்லை என்று சொல்லும் கலையை கற்றுக் கொள்வதும் மிக முக்கிய திறமையாகும். இதில் எல்லைகளை அமைப்பது சுய பாதுகாப்புக்கான அறிவிப்பைக் குறிக்கிறது. பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. எனினும், அதை நீடிக்கப்பட்டதாக உணர்ந்தால் கூடுதல் பொறுப்புகளைப் பணிவுடன் நிராகரிக்க வேண்டும்.

இத்தகைய ஆரோக்கியமான நடைமுறைகளின் உதவியுடன், பணியிட மன அழுத்தத்தை எளிதாகக் கையாளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Workplace Stress: பணி இடத்தில் மன அழுத்தம் ஏற்பட இது தான் காரணம்?

Image Source: Freepik

Read Next

காபி பிரியரா நீங்க? இது தெரியாம காபில கை வைக்காதீங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content