இன்றைய பிஸியான காலகட்டத்தில் பலரும் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்கின்றனர். அதிலும் பலர் தங்களது தூக்கத்தினைக்கூட தியாகம் செய்து வேலை பார்த்து வருகிறார்கள். இது தவிர, நாள்தோறும் மொபைல் பார்ப்பதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, இரவு தூங்கச் செல்லும் முன்பாக மொபைல் பார்க்காமல் தூங்குவதில்லை. இவ்வாறு நாள்தோறும் பயன்படுத்தக்கூடிய திரை பயன்பாட்டினால் அவர்களின் உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இரவு நேரத்தில் திரை பயன்பாட்டினால், அவர்களின் தூக்க ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நல்ல தூக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும். ஆனால், தூக்கமின்மை ஒருவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கக்கூடும். இதில் இரவு நேர திரை பயன்பாடு ஒருவரது ஹார்மோன் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இதில் காண்போம்.
ஹார்மோன் ஆரோக்கியம்
ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி,”நாம் ஒருபோதும் தூங்காத உலகில் வாழ்கிறோம், நம்மில் பலருக்கு, நம் தொலைபேசிகளும் அப்படித்தான். பலர் மன அழுத்தம், நீண்ட வேலை நேரம் அல்லது இரவு நேர காஃபின் ஆகியவற்றைக் குறை கூறுகிறார்கள், ஆனால் மில்லியன் கணக்கானவர்களைப் பாதிக்கக்கூடிய ஒரு மறைக்கப்பட்ட குற்றவாளி செயற்கை ஒளி” என்று கூறுகிறார்.
இந்த பதிவும் உதவலாம்: Melatonin Rich Foods: நல்ல தூக்கம் வேண்டுமா? இந்த ஐந்து உணவுகளைத் தவற விட்ராதீங்க.
இன்றைய பழக்க வழக்கங்களின் காரணமாக, நம் உடலைத் தூங்கச் சொல்லும் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது. அதாவது இரவில் தாமதமாக டிவி பார்ப்பது அல்லது படுக்கையில் இருக்கும்போது சமூக ஊடகங்களை உலவுவது போன்றவை தூக்க ஹார்மோன்களைப் பாதிக்கக்கூடும்.
இரவு நேர ஒளியால் தூக்கம் பாதிப்பு
நாம் தூங்க உதவும் ஹார்மோன் ஆன மெலடோனின், ஒளியால் பாதிக்கப்படுகிறது என்பதை நிபுணர் வெளிப்படுத்தியுள்ளார். இருட்டில் இருக்கும் போது மூளையில் உள்ள பினியல் சுரப்பி எனப்படும் ஒரு சிறிய சுரப்பியால் இது தயாரிக்கப்படுகிறது என அவர் தனது பதிவில் விளக்கினார்.
இவை உடலின் உள் கடிகாரத்தைப் போல செயல்படுகிறது. இது நாம் எப்போது விழித்திருக்கிறோம், எப்போது தூங்குகிறோம் என்பதைக் கட்டுப்படுத்தக்கூடியதாகும். இது தூக்க-விழிப்பு சுழற்சி அல்லது சர்க்காடியன் ரிதம் என்றும் அழைக்கப்படுகிறது.
இரவில் நாம் பயன்படுத்தும் திரையிலிருந்து வெளியேறும் ஒளி மெலடோனினைத் தடுக்கிறது என மருத்துவர் முகர்ஜி வெளிப்படுத்தியுள்ளார். இரவில் சில நிமிடங்கள் ஒளி வெளிப்பாட்டின் காரணமாகவும் மெலடோனின் வெளியீடு தாமதமாகலாம். மேலும் இதன் அளவைக் குறைக்கலாம். இதன் காரணமாக, தூங்குவதில் சிக்கல், புத்துணர்ச்சியற்ற தூக்கம், நள்ளிரவு விழிப்பு மற்றும் பகல்நேர சோர்வு போன்றவை ஏற்படுகிறது.
நல்ல தூக்கம் பெற செய்ய வேண்டியவை
திரைகளைத் தவிர்ப்பது
இரவு நேர திரை பயன்பாட்டினால் ஏற்படும் தூக்கப் பிரச்சினைகள் வெறும் பழக்கத்தின் விஷயங்களால் மட்டுமல்ல. உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையவை என குறிப்பிட்டார். எனவே படுக்கைக்கு 1-2 மணி நேரத்திற்கு முன்பு திரைகளைத் தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்துகிறார். இவ்வாறு தவிர்ப்பது. தூக்க ஹார்மோனான மெலடோனின் அளவை இயற்கையாகவே உயர அனுமதிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: படுத்த உடனே நல்லா தூங்கணுமா? ஆழ்ந்த தூக்கத்திற்கு இந்த 5 வழிகளைப் பின்பற்றுங்க
தூக்க சூழலை உருவாக்குவது
அதே போல, தூங்குவதற்கு ஏற்ப சூழலாக படுக்கையறையை மாற்ற வேண்டும். அதன் படி, இரவு நேரத்தின் போது சூடான, குறைந்த தீவிரம் கொண்ட மஞ்சள் விளக்குகளைப் பயன்படுத்தலாம். இது உடலுக்கு ஓய்வு நேரம் என்பதை சமிக்ஞை செய்கிறது என நிபுணர் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
ஆரோக்கியமான உணவு
தூக்க ஆரோக்கியத்தில் உணவுத் தேர்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் டாக்டர் அஞ்சலி முகர்ஜி கூறியுள்ளார். எனவே அன்றாட உணவில் பாதாம், செர்ரி மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சேர்ப்பதற்கு அவர் பரிந்துரைத்தார், ஏனெனில் இவை "மெலடோனின்-நட்பு" என்று கருதப்படுகின்றன மற்றும் நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.
கூடுதலாக, நாட்குறிப்பு எழுதுதல், சுவாசப் பயிற்சி அல்லது மூலிகை தேநீர் அருந்துதல் போன்ற அமைதியான இரவு நேர நடைமுறைகளைச் சேர்க்கலாம். இது ஓய்வை அதிகரிக்கவும் ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுவதாக அறிவுறுத்தினார்.
இந்த பதிவும் உதவலாம்: மெலட்டோனின் மாத்திரை தேவையில்லை.. ஆழ்ந்த தூக்கத்திற்கான சிறந்த இரவு உணவுகள் இங்கே..
Image Source: Freepik