Sat Sep 12, 2026 | 12:55 AM IST

Doctor Verified

கை நடுக்கம் இருக்கா.? இது தான் காரணம்.. இதை சாப்பிட்டால் போதும்.!

கை நடுக்கம் ஏற்படுவதற்கான உண்மையான காரணங்கள் என்ன? சித்த மருத்துவர் சிவராமன் கூறும் இயற்கை முறைகளில் கை நடுக்கத்தை குறைக்கும் உணவுகள், குறிப்பாக முருங்கைக்கீரை மற்றும் பூனைக்காலி விதைகளின் நன்மைகள் பற்றிய முழு விளக்கம்.

கை நடுக்கம் பலருக்கும் திடீரென ஏற்பட்டு கவலைக்குரிய நிலையைக் கொண்டுவரலாம். பொதுவாக ஒருமுறையோ இருமுறையோ நடுக்கம் ஏற்பட்டால் அது உடல் சோர்வு அல்லது நரம்பு பலவீனத்தால் ஏற்படும் சாதாரண விளைவு. ஆனால் இந்த நடுக்கம் அடிக்கடி நிகழத் தொடங்கினால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது என சித்த மருத்துவர் சிவராமன் எச்சரிக்கிறார்.

Source: https://youtu.be/xiorCNL1oT4

கை நடுக்கத்திற்கான முக்கிய காரணங்கள்

1. நரம்பு செயல்பாட்டில் சமநிலை குறைவு

மூளையில் உள்ள வேதிச் சுரப்புகள் சரியாக இயங்காத நேரங்களில் கை நடுக்கம் ஏற்படலாம்.

2. சர்க்கரை அளவு குறைவு (Hypoglycemia)

உடலில் ஆற்றல் குறைந்து சர்க்கரை அளவு திடீரென குறைந்தால் கை நடுக்கம், வாய் குளறல், பதட்டம் போன்றவை ஏற்படும். சர்க்கரையான உணவு உடனடியாக எடுத்தால் பிரச்சனை குறையும்.

3. சர்க்கரை நோயாளிகளில் உணவு தவிர்க்கும் பழக்கம்

மருந்து எடுத்த பிறகு உணவு தவிர்ப்பதால் சர்க்கரை அளவு ஆபத்தாக குறைந்து கை நடுக்கம் ஏற்படும்.

4. ஹைப்பர் தைராய்டு (Hyperthyroidism)

அதிக தைராய்டு சுரப்பு கை நடுக்கத்தின் பொதுவான காரணங்களில் ஒன்று.

5. நீண்டகால மதுபழக்கம்

அல்கஹால் பழக்கத்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நடுக்கம் அதிகரிக்கலாம்.

6. உடலில் சத்துகள் குறைவு

உயிர்ச்சத்து, கனிமச்சத்து போன்றவை சரியாக கிடைக்காத போதும் நரம்பு செயல் பாதிக்கப்பட்டு கை நடுக்கம் ஏற்படும்.

7. நீண்டநாள் நோய் மற்றும் மருந்துகளின் தாக்கம்

வைரஸ் நோய்களுக்கு நீண்டகால மருந்து எடுத்தல், உணவு குறைவு போன்றவை நடுக்கத்தை தூண்டும்.

8. மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு மருந்துகள்

பதட்டம் அதிகரித்தாலும், depression மருந்துகளின் பக்கவிளைவாகவும் கை நடுக்கம் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: அடிக்கடி கை, கால்களில் நடுக்கம் வருதா? லேசுல விடாதீங்க.. அதுக்கு இந்த பிரச்சனை கூட காரணமா இருக்கலாம்

கை நடுக்கத்தை இயற்கையாக குறைக்க என்ன சாப்பிடலாம்?

1. முருங்கைக்கீரை – சித்த மருத்துவர் பரிந்துரைக்கும் முதலிடம்

முருங்கைக்கீரையில் நரம்பு பலத்தை மேம்படுத்தும் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளதால் கை நடுக்கம் குறைய உதவும்.

2. பூனைக்காலி விதைகள் – பார்கின்சன் நடுக்கத்திற்கு சிறந்த நிவாரணம்

பார்கின்சன் நோயாளிகளுக்கு ஏற்படும் நடுக்கத்தை குறைக்க பூனைக்காலி விதைகள் (Velvet bean seeds) பயனுள்ளதாக சித்த மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

  • நடுக்கம் அடிக்கடி வந்தால்
  • சிறிய செயல்களைச் செய்ய முடியாத அளவுக்கு நடுக்கம் இருந்தால்
  • தைராய்டு, சர்க்கரை போன்ற நோய்கள் இருந்தால்
  • நடுக்கத்துடன் வாய் குளறல், மயக்கம், பலவீனம் இருந்தால்

இவை எல்லாம் ஒரு நோயின் ஆரம்ப அறிகுறி என்பதால் மருத்துவ ஆலோசனை அவசியம்.

இறுதியாக..

கை நடுக்கம் ஒரு சிறிய பிரச்சனையாக தோன்றினாலும், அது சில சமயங்களில் உடலில் உள்ள முக்கிய கோளாறுகளை சுட்டிக்காட்டும் சிக்னல் ஆக இருக்கலாம். சரியான உணவு, சத்துகள், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மருத்துவ ஆலோசனை மூலம் இதை கட்டுப்படுத்த முடியும். முருங்கைக்கீரை மற்றும் பூனைக்காலி விதைகள் போன்ற இயற்கை உணவுகள் நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த துணை.

பொறுப்புத் துறப்பு: இந்த செய்தி பொதுத் தகவல் மற்றும் சித்த நிபுணர் பகிர்ந்த கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. ஏதேனும் உணவு அல்லது மருத்துவ மாற்றங்களை மேற்கொள்ள முன் உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

டான்சில் பிரச்சனையை வீட்டிலேயே கட்டுப்படுத்த 5 அட்டகாச டிப்ஸ்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 11, 2025 00:20 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content