Fri Sep 11, 2026 | 11:14 PM IST

Doctor Verified

இயற்கையின் பொக்கிஷம் முருங்கை கீரை! டாக்டர் கூறும் ஆரோக்கியமான துவையல் ரெசிபி – கண்பார்வை அதிகரிக்கும் அற்புத உணவு!

முருங்கை கீரையின் அற்புத ஆரோக்கிய நன்மைகள், கண்பார்வைக்கு உதவும் முக்கிய சத்துக்கள் மற்றும் டாக்டர் சிவராமன் பகிர்ந்துள்ள சுவையான முருங்கை துவையல் செய்முறை பற்றிய முழு தகவல் இங்கே.

உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க சத்தான உணவு அவசியம். அதேபோல் கண்களை பாதுகாக்கவும், பார்வை திறனை மேம்படுத்தவும், இயற்கையில் கிடைக்கும் உணவுகள் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில் முருங்கை கீரை ஒரு “இயற்கை சத்துக் களஞ்சியம்” எனலாம்.

மனித உடல்நலனுக்கு தேவையான பல சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடியது முருங்கை கீரை என டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். ட்ரெண்ட்கேர் தமிழ் யூடியூப் சேனலில் அவர் பகிர்ந்துள்ள ஒரு சிறப்பான ரெசிபி குறித்து இங்கே காண்போம்.

Video Link: https://youtu.be/cYG2nGsZDxo

டாக்டர் சிவராமன் கூறும் முருங்கை கீரை துவையல் செய்முறை

முருங்கை கீரையை தினசரி உணவில் சேர்க்க சிறந்த வழி துவையல் வடிவில் சாப்பிடுவதுதான் என அவர் கூறுகிறார். இது சுவையுடன் ஆரோக்கியத்தையும் தரும்.

தேவையான பொருட்கள்:

* முருங்கை கீரை – 2 கப்

* காய்ந்த மிளகாய் – 4

* சின்ன வெங்காயம் – 10

* கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

* பூண்டு – 4 பல்

* புளி – சின்ன நெல்லிக்காய் அளவு

* தேங்காய் துண்டுகள் – சிறிதளவு

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பாசிபருப்பு – சிறிதளவு

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

* அதில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

* பின்னர் சீரகம், பாசிபருப்பு, தேங்காய் சேர்க்கவும்.

* இறுதியாக முருங்கை கீரையை சேர்த்து நன்றாக வதக்கி, சிறிது குளிர்ந்ததும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

* சுவையான முருங்கை கீரை துவையல் தயார்! இதை சாதத்துடன் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கண்ணாடி போன்ற ஸ்கின் வேணுமா? கிரீம்லாம் வேணாம்.. கொலாஜன் நிறைந்த ட்ரிங்க் குடிங்க போதும்

முருங்கை கீரையின் ஆரோக்கிய நன்மைகள்

* கண்பார்வையை மேம்படுத்தும்.

* இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

* எலும்புகளுக்கு வலிமை தரும்.

* நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

* சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

* நீண்டநாள் சோர்வை குறைக்கும்.

இறுதியாக..

முருங்கை கீரையை சமைக்கும் போது அதன் சத்துக்கள் இழக்காமல் வதக்குவது முக்கியம். இது சுவையுடன் ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சிறந்த பாரம்பரிய உணவு. வாரத்திற்கு குறைந்தது மூன்று முறை முருங்கை கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவல்களும், டாக்டர் சிவராமன் அவர்களின் ஆலோசனைகளும் அடிப்படையாக எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள பரிந்துரைகளைப் பின்பற்றுவதற்கு முன், உங்கள் உடல்நலநிலை மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு ஏற்ப மருத்துவரை அணுகவும்.

Read Next

ஆப்பிள் சாப்பிட போறீங்களா? ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிடுங்க.. நிபுணர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 03, 2025 18:44 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content