Fri Sep 11, 2026 | 10:44 PM IST

Doctor Verified

BP கட்டுக்குள் இருக்க... தினமும் முருங்கைக் கீரை சாப்பிடுங்க – மருத்துவர் சிவராமன் பரிந்துரை!

முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின், ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என மருத்துவர் சிவராமன் விளக்கம். உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்து போன்றது.

இரத்த அழுத்தம் இன்று பலருக்கும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. சிலருக்கு உயர் இரத்த அழுத்தம் (High BP), சிலருக்கு குறைந்த இரத்த அழுத்தம் (Low BP) ஏற்படுகிறது. இரண்டுமே உடல்நலத்திற்கு ஆபத்தானவை. ஆனால், இந்த இரத்த அழுத்தத்தை இயற்கையாக சமநிலையில் வைத்திருக்க உதவும் ஒரு சுலபமான உணவு — முருங்கைக் கீரை என மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.

Video Link: https://youtu.be/IUXPVvla9pA

மருத்துவர் சிவராமன் கூறும் தகவல்

“முருங்கைக் கீரை ஒரு சத்தான உணவு மட்டுமல்ல, இயற்கையான மருந்து கூட என்று ஹெல்த் தமிழ்நாடு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, உயர் இரத்த அழுத்தம் (High BP) மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (Low BP) கொண்டவர்களுக்கு இது இயற்கை மருந்து போல செயல்படுகிறது. இதில் உள்ள முக்கியமான சத்துக்கள் உடல் சீராக செயல்பட உதவுகின்றன.

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்

* வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள்: உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கின்றன. இதனால் தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

* கால்சியம்: எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. வளர்ச்சியடைந்துவரும் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.

* இரும்புச் சத்து (Iron): இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டி, இரத்த சோகையை (Anemia) குறைக்கும்.

* நார்ச்சத்து (Fiber): செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது.

* வைட்டமின் A: கண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. முருங்கைக் கீரையை சீராக சாப்பிட்டால் கண் பிரச்சனைகள் குறையும்.

* சர்க்கரை கட்டுப்பாடு: முருங்கைக் கீரை சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனாகும்.

* எடை குறைப்பு: குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த உணவு.

இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் பல பிரச்னைகளை தீர்க்கும் மேஜிக் டிரிங்க்.! மருத்துவர் பரிந்துரை..

இறுதியாக..

முருங்கைக் கீரை நம் பாட்டி-தாத்தா காலத்தில் இருந்தே ஒரு மருந்து உணவு என கருதப்பட்டது. இன்றைய காலத்தில் அதனை நம் உணவுப் பட்டியலில் சேர்ப்பது மிகவும் அவசியம். உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த நினைப்பவர்களும் முருங்கைக் கீரையை வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ ஆலோசனைகள் அனைத்தும் பொது பரிந்துரைகளாகும். எந்தவொரு சிகிச்சையையும் தொடங்கும் முன் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உடல்நல நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read Next

தொடர்ந்து 14 நாள்களுக்குத் தினமும் கறிவேப்பிலை சாப்பிட்டு பாருங்க.. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்! மருத்துவர் ஹன்சாஜி தரும் டிப்ஸ்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 27, 2025 15:33 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content