Healthy Summer: வெயில் காலத்தில் ஆரோக்கியமாக இருக்க இவற்றை செய்யுங்க!!

  • SHARE
  • FOLLOW
Healthy Summer: வெயில் காலத்தில் ஆரோக்கியமாக இருக்க இவற்றை செய்யுங்க!!


கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில விஷயஙங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். இவை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம் : Summer Skin Care: கோடையில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்?

அதிகமாக தண்ணீர் குடியுங்கள்

மாறிவரும் காலநிலையில் உடலை நீரேற்றமாக வைக்க வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்க. இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். வானிலை மாறும்போது, ​​நமது செரிமான அமைப்பும் அதன் வேலையை செய்ய நேரம் எடுக்கும். எனவே, நாம் தண்ணீர் குறைவாக குடிக்கும்போது நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற வேண்டும். உங்கள் தட்டில் புரதம், வைட்டமின், தாதுக்கள் மற்றும் கால்சியம் சரியான அளவு இருப்பதை உறுதி செய்யவும். இதனுடன், நட்ஸ் மற்றும் பழங்களையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Eye Care Tips: வெப்பம் (ம) புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் கண்களை எப்படி பாதுகாப்பது?

தியானம்

வானிலை மாறும்போது நமது மனநலமும் பாதிக்கப்படுகிறது. பல சமயங்களில் மாறிவரும் வானிலையின் போது மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு ஆளாகிறோம். இந்நிலையில், நீங்கள் தியானம், யோகா, சுவாச பயிற்சி ஆகியவற்றை செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனால், மனநலம் மேம்படும்.

உடற்பயிற்சி

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். இது உடலின் சமநிலையை பராமரிக்கிறது. உடலில் இரத்த ஓட்டம் சரியாக இருப்பதோடு, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது. உடற்பயிற்சி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Spicy Food: காரமான உணவு உங்களுக்கு பிடிக்குமா? அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்க!

சரியான தூக்கம்

வானிலை மாற்றம் நமது தூக்கத்தையும் வெதுவாக பாதிக்கும். மோசமான தூக்கம் காரணமாக, நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே, நீங்கள் குறைந்தது 8 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள். இது நமது ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Eye Care: கவனம் தேவை: அதிகரித்து வரும் பார்வை குறைபாடு.. காரணமும் தீர்வும்!

Disclaimer