Fri Sep 11, 2026 | 10:19 PM IST

Doctor Verified

நடுராத்திரில தேடி தேடி பிரியாணி சாப்பிடுறீங்களா.? மருத்துவர் பகிர்ந்த தகவல் இங்கே..

நடு இரவு பிரியாணி சாப்பிடும் பழக்கம் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ், நீரிழிவு, கல்லீரல் கொழுப்பு உள்ளிட்ட ஆபத்துகளை ஏற்படுத்தும் என டாக்டர் எச்சரிக்கை. 

“பிரியாணி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது” என்பது உண்மை. ஆனால் சிலருக்கு அந்த ஆசை அதிகமாக நடு இரவிலேயே வந்து விடுகிறது. இரவு 1-2 மணிக்கே கடைகள் திறந்திருக்கும் நிலையில், பலர் சுடச்சுட பிரியாணி வாங்கி சாப்பிடும் பழக்கத்தில் மூழ்கி வருகிறார்கள். இது சுவையாக இருக்கும் போதிலும், அதன் உடல்நல விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் புறக்கணித்து விடுகிறார்கள்.

Cardiologist டாக்டர் அரவிந்த் துருவசால் எச்சரிப்பதாவது, “மிட் நைட் பிரியாணி” என்ற பழக்கம் நீண்ட காலத்தில் பல கடுமையான நோய்களை வரவழைக்கும்” என்பதாகும். மேலும் Midnight Biryani குறித்து அவர் பகிர்ந்த தகவலை அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.

Midnight Cravings- ஏன் வருகிறது?

* சிலருக்கு உடல் ஹார்மோன் மாற்றங்களால் நடு இரவில் பசி ஏற்படும்.

* இரவு முழுவதும் வேலை செய்வோர், அதிக நேரம் விழித்திருப்போர் உணவு ஆசையால் வெளியில் சென்று சாப்பிடுவார்கள்.

* ஆரோக்கிய நிபுணர்கள், அத்தகையவர்களுக்கு ஆப்பிள், பிளாக் காபி, க்ரீன் டீ போன்ற லைட் ஸ்நாக்ஸ் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் பலர் அதற்குப் பதிலாக அதிக கார்போஹைட்ரேட் கொண்ட பிரியாணியையே தேர்வு செய்கிறார்கள்.

artical  - 2025-08-25T103554.036

பிரியாணியின் சுவை.. ஆரோக்கியத்திற்கு சுமை.!

பிரியாணி கடைகளின் வாசனை, பாத்திரம் தட்டும் சத்தம் – இவை நைட் ஷிப்ட் வேலை முடித்து வரும் இளைஞர்களை ஈர்க்காமல் இருக்காது. பலர் இதை தினசரி உணவுப் பழக்கமாகவே மாற்றி வருகின்றனர்.

இந்த பாதிவும் உதவலாம்: Kongunadu Vellai Biryani: நீங்க பிரியாணி பிரியரா? அப்போ இந்த முறை கொங்குநாடு வெள்ளை பிரியாணி செய்யுங்க! 

‘Food Coma’ – தூக்கத்துக்கான காரணம்

சிலர், “நடு இரவில் பிரியாணி சாப்பிட்டால் நன்றாக தூங்கலாம்” என்கிறார்கள். இது உண்மையே என்கிறார் டாக்டர் அரவிந்த். அதிக கார்போஹைட்ரேட் சாப்பிடும்போது, இன்சுலின் மட்டுமல்லாமல் செரடோனின், மெலடோனின் ஹார்மோன்களும் சுரக்கின்றன. இதனால் உடனடியாக தூக்கம் வரும். ஆனால் இது நல்ல தூக்கம் அல்ல, உடலை பலவீனப்படுத்தும் Food Coma என்று அவர் எச்சரிக்கிறார்.

View this post on Instagram

A post shared by Dr. Aravind Duruvasal MBBS, MD, DM (@draravindduruvasal)

தொடர்ந்து நடு இரவில் பிரியாணி சாப்பிட்டால் என்ன ஆகும்?

* வாய்வுத் தொல்லை

* அசிடிட்டி

* GRED

* வயிற்று புண் (அல்சர்)

* இரைப்பை கோளாறுகள்

* இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்

* கொழுப்பு கல்லீரல் நோய்

* உயர் இரத்த அழுத்தம்

* இதய நோய் அபாயம்

தீர்வு என்ன?

எப்போதாவது ஒரு நாள் ஆசைக்காக சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதை பழக்கமாக்குவது ஆபத்து. இரவில் சாப்பிட்டால் மறுநாள் உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். முக்கியமாக, நடு இரவில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இறுதியாக..

“பிரியாணி சாப்பிடுவது தவறல்ல.. ஆனால் நேரம் தவறி சாப்பிடுபவர்களுக்கு இது பேராபத்து.!” என்று டாக்டர் அரவிந்த் எச்சரிக்கிறார்.

Read Next

Kokilaben Ambani Hospitalised: முகேஷ் அம்பானியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content