Sat Sep 12, 2026 | 12:05 AM IST

Expert

கர்ப்ப கால உணவை மேலும் ஊட்டமளிக்க உதவும் ஆரோக்கியமான மாற்றுகள்.. நிபுணர் தரும் டிப்ஸ்

கர்ப்பிணி பெண்கள் தங்களது உணவுமுறையில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும். அவ்வாறு, கர்ப்ப கால உணவை மேலும் ஊட்டமளிக்கும் வகையில் ஆரோக்கியமான மாற்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும். இதில், கர்ப்ப காலத்தில் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவு மாற்றுகளைக் காணலாம்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் உணர்திறன் வாய்ந்த நேரமாக கர்ப்ப காலம் அமைகிறது. கர்ப்ப காலத்தில் பெண்களில் உடலில் பல வகையான ஹார்மோன் மற்றும் உடல் மாற்றங்கள் ஏற்படுகிறது. கருப்பையில் ஹார்மோன் மாற்றங்களை நிர்வகிப்பதற்கும், குழந்தையின் சரியான வளர்ச்சிக்கும் சரியான உணவு எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, கர்ப்ப காலத்தில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவை மேலும் ஊட்டமளிக்கும் வகையில் சில உணவு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

இதில் கர்ப்ப கால உணவை கூடுதல் ஊட்டமளிக்கும் வகையில் பின்பற்ற வேண்டிய உணவு மாற்றங்கள் குறித்து உணவு சிகிச்சை உணவியல் நிபுணரான ஸ்வேதா ஜே பஞ்சால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: பிரசவத்திற்குப் பிறகு கொழுப்பு எரிப்பை அதிகரிக்கவும், எடை நிர்வாகத்தை ஆதரிக்கவும் சாப்பிட வேண்டிய உணவுகள்

கர்ப்பகால உணவை மேலும் ஊட்டமளிக்கும் வகையில் ஸ்மார்ட் உணவு மாற்றங்கள்

கோதுமை → சோளம் அல்லது நச்னி ரொட்டிகள்

நிபுணர் முதலாவதாக, கோதுமைக்குப் பதிலாக சோளம் அல்லது நஸ்னி ரொட்டிகளை மாற்ற பகிர்ந்துள்ளார். பொதுவாக, கர்ப்பிணி பெண்களுக்கு சோளம் மற்றும் நச்னி ரொட்டிகள் இரண்டுமே மிகவும் நன்மை பயக்கும். ஆனால் அவை வெவ்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. சோளத்தில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன, அதேசமயம் நச்னி ரொட்டிகள் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்ததாகக் கூறப்படுகிறது. இவை இரண்டையும் சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்வது சிறந்தது.

வழக்கமான பழங்கள் → சிறந்த வைட்டமின் சி & ஃபோலேட்டுக்கு கிவி

வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பழங்களுக்குப் பதிலாக, சிறந்த வைட்டமின் சி & ஃபோலேட்டுகள் நிறைந்த கிவி பழத்தை நிபுணர் பரிந்துரைக்கிறார். உண்மையில், கிவி பழமானது வைட்டமின் சி, ஃபோலேட், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவற்றைக் கொண்டதாகும். இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், கருவின் வளர்ச்சி, செரிமான ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். எனவே இது கர்ப்பிணிப் பெண்களுக்கு பல நன்மைகளை அளிக்கக் கூடியதாகும்.

மெதி தானா → மென்மையான ஹார்மோன் ஆதரவுக்கு பூசணி விதைகள், சப்ஜா அல்லது ஆளி விதைகள்

கர்ப்ப காலத்தில் வெந்தயத்திற்குப் பதிலாக, ஹார்மோன் ஆதரவுக்கு பூசணி விதைகள், சப்ஜா விதைகள் அல்லது ஆளி விதைகளை எடுத்துக் கொள்ள நிபுணர் பரிந்துரைக்கிறார். இதில் பூசணி விதைகளில் ஜிங்க் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் சப்ஜா விதைகளில் இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது தவிர, ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை அனைத்துமே கர்ப்ப கால ஆரோக்கியத்திற்கு முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாறு குடிப்பது பாதுகாப்பானதா? நிபுணர் விளக்கம் இதோ!

சாக்லேட் → சுத்தமான ஆற்றல் மற்றும் ஆறுதலுக்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட லட்டுகள்

நிபுணர், கர்ப்பிணி பெண்களுக்கு சாக்லேட்டுக்க்ப் பதிலாக சுத்தமான ஆற்றல் மற்றும் ஆறுதலுக்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட லட்டுகளைப் பரிந்துரைக்கிறார். பொதுவாக, சாக்லேட்டில் உள்ள காஃபின், சர்க்கரையின் அளவிற்காக கர்ப்பிணி பெண்கள் சாக்லேட் பரிந்துரைக்கப்படுவதில்லை. கர்ப்பிணி பெண்களுக்கு சுத்தமான ஆற்றல் மற்றும் ஆறுதலைப் பெற வீட்டிலேயே தயாரிக்கப்படும் லட்டுகளை சாப்பிடலாம்.

View this post on Instagram

A post shared by Dietitian Shweta J Panchal | The Diet Therapy (@dt.shwetashahpanchal)

சிவப்பு மிளகாய் தூள் → அமிலத்தன்மை இல்லாத சுவைக்காக காஷ்மீரி மிர்ச்

ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா அவர்கள் சிவப்பு மிளகாய் பவுடருக்குப் பதிலாக, அமிலத்தன்மை இல்லாத சுவைக்காக காஷ்மீரி மிர்ச்சை கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கிறார். இதன் மூலம் அமிலத்தன்மை பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இதனைத் தொடர்ந்து நிபுணர், “சிறிய மாற்றங்கள், பெரிய வித்தியாசம் - அவை செரிமானத்தை சீராகவும், ஆற்றல் நிலையானதாகவும், ஊட்டச்சத்துக்களை சமநிலையிலும் வைத்திருக்கின்றன” என்று பகிர்ந்துள்ளார். மேலும், நடைமுறை மற்றும் பாதுகாப்பான கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவு குறிப்புகளைப் பின்பற்றவும் என தனது பதிவில் கூறி முடித்தார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் தலைவலியால் அவதியா? இந்த உணவுமுறைகளைப் பின்பற்றுங்க.. நிபுணர் சொன்னது

Image Source: Freepik

Read Next

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்தால் நார்மல் டெலிவரி ஆகுமா? மருத்துவர் விளக்கம்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 27, 2025 18:56 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content