Fri Sep 11, 2026 | 11:06 PM IST

Peppermint for sore throat: தொண்டை வலி காணாமல் போக இந்த காஃபின் இல்லாத டீ குடிங்க

Does peppermint tea soothe sore throat: புதினா பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். குறிப்பாக, இதில் உள்ள மெந்தோல் உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதாகும். குளிர்ந்த காலநிலையில், பலரும் தொண்டை வலி, இருமல், சளி போன்றவற்றைச் சந்திக்கின்றனர். இதிலிருந்து விடுபட புதினா டீ பெரிதும் உதவுகிறது. இதில் புதினா டீ அருந்துவது தொண்டை வலியிலிருந்து எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.

Can peppermint tea help sore throat: பருவகால மாற்றங்கள் மற்றும் வானிலை மாற்றத்தின் காரணமாக, பலரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, தொண்டை புண், இருமல் மற்றும் சளி போன்றவை வானிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளாகும். இருமல், சளி, தொண்டைப் புண்களால் பாதிக்கப்படுபவர்கள் அசௌகரியத்தை அனுபவிக்கின்றனர். இதனால், அவர்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படலாம். இந்நிலையில், இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு முன், வீட்டிலேயே சில ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்.

அதன் படி, தொண்டை எரிச்சலைத் தணிக்க சிறந்த வீட்டு வைத்தியமாக அமைவது சூடான தேநீர் ஆகும். சூடான தேநீர் அருந்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நோயைக் குணப்படுத்துவதற்கும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், ஸ்ட்ரெப் நோய்த்தொற்றுக்கான இயற்கையான ஆன்டிபயாடிக் பண்புகள் கொண்ட காஃபின் இல்லாத தேநீரை அருந்தலாம். அவ்வாறு, தொண்டைப் புண்களைத் தணிக்க உதவும் காஃபின் இல்லாத சிறந்த தேநீர் வகைகளில் ஒன்றாக நறுமணமுள்ள பெப்பர்மின்ட் டீ உதவுகிறது. இது இயற்கையாகவே சுவையில் இனிமையாகவும், புத்துணர்ச்சியைத் தருவதாகவும் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Bedtime Drinks: நிம்மதியாக தூங்கனுமா?… நைட் இதுல ஏதாவது ஒண்ண குடிச்சிட்டு படுங்க!

ஏன் புதினா டீ

புதினா இலைகளில் மென்தோன், லிமோனீன் மற்றும் மெந்தோல் போன்ற பல்வேறு அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளது. எனவே, இந்த எண்ணெய்கள் நிறைந்த புதினா இலைகளைக் கொண்டு தயார் செய்யப்படும் தேநீர் தசைகளை தளர்த்தவும், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. மேலும், இது தொண்டைப்புண் மற்றும் மூக்கடைப்பு போன்றவற்றுடன் வரக்கூடிய தலைவலி ஒற்றைத் தலைவலியைக் குறைக்கவும் உதவுகிறது. இது தவிர, புதினாவில் உள்ள மெந்தோல் ஆனது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, குளிர்ச்சியான உணர்வைத் தந்து வலியைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.

நாசி நெரிசலைக் குணமாக்கும் புதினா டீ

புதினாவில் வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை அனைத்துமே ஜலதோஷம், நோய்த்தொற்றுக்கள், ஒவ்வாமை காரணமாக ஏற்படும் சைனஸ் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, மிளகுக்கீரையின் மிகச்சிறந்த சேர்மங்களில் ஒன்றாக மெந்தோல் உள்ளது. புதினா டீ மெந்தோல், நாசி குழியில் காற்றோட்டத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. எனவே, சூடான பெப்பர்மின்ட் டீயின் உதவியுடன் சுவாசத்தை எளிதாக்குவதுடன், நாசி நெரிசலிலிருந்து விடுபடலாம்.

தொண்டை வலிக்கு புதினா டீ எவ்வாறு உதவுகிறது?

புதினாவில் மற்றொரு சிறப்பம்சமாக ரோஸ்மரினிக் அமிலம் நிறைந்து காணப்படுகிறது. இது ரோஸ்மேரி மற்றும் புதினா குடும்பத்தில் உள்ள பிற தாவரங்களில் காணப்படும் ஒரு தாவர கலவை ஆகும். இந்த ரோஸ்மரினிக் அமிலம் ஆனது மூக்கு ஒழுகுதல் மற்றும் தொண்டை புண் போன்ற ஒவ்வாமை அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

அதே போல, புதினாவில் உள்ள மெந்தோல் ஆனது தொண்டை வலியைக் குறைக்கக் கூடிய இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது. மேலும், இதில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை திசுக்களில் ஏற்படும் அழற்சி மற்றும் எரிச்சலைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர, இவை மிகவும் தேவையான குளிர்ச்சி உணர்வையும் வழங்குகிறது. மேலும், இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளது. எனவே இது ஸ்ட்ரெப் போன்ற பாக்டீரியா நோய்த்தொற்றுக்களால் ஏற்படும் தொண்டைப் புண் பிரச்சனைகளைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Peppermint for period cramps: மாதவிடாய் வலியை நொடியில் குணமாக்கும் பெப்பர்மின்ட்! எப்படி யூஸ் பண்ணலாம்

பெப்பர்மின்ட் டீ தயாரிக்கும் முறை

புதினா டீ சுவையானது மட்டுமல்லாமல், உணவில் சேர்க்க எளிதானதாகவும் அமைகிறது. இதை தேநீர் பைகளில் தளர்வான இலை தேநீராக வாங்கி அனுபவிக்கலாம் அல்லது இயற்கையாகவே கிடைக்கும் புதினா இலைகளைக் கொண்டு சொந்தமாக தயார் செய்யலாம்.

செய்முறை

  • முதலில் ஒரு கப் அளவிலான தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பை அணைத்து, அந்த சூட்டிலேயே ஒரு கைப்பிடி கிழிந்த புதினா இலைகளை தண்ணீரில் சேர்க்க வேண்டும்.
  • பின், இதை குறைந்தது 3-4 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும்.
  • அதன் பின், தேநீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
  • இது இயற்கையாகவே இனிப்பைக் கொண்டிருப்பினும், விரும்பினால் ஒரு துளி தேன் சேர்த்து அருந்தலாம்.

புதினா டீ இயற்கையாகவே காஃபின் இல்லாத தேநீராக இருப்பதால், இது எந்த நேரத்திலும் அருந்தக்கூடிய தேநீராக அமைகிறது. எனினும், புதினா டீயை உணவுக்குப் பின் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. படுக்கைக்கு முன்னதாக இந்த டீ அருந்துவது நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. இருப்பினும், வேறு சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் புதினா டீயை அருந்தும் முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Mint Tea Benefits: பருவமழை காலத்தில் புதினா டீ குடிப்பது இவ்வளவு நல்லதா? நன்மைகள் இங்கே!!

Image Source: Freepik

Read Next

Stomach Bloating: மேல் வயிறு உப்பிக் கொண்டு வலிக்கிதா.? இத மட்டும் பண்ணுங்க.. சரி ஆகிடும்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content