Fri Sep 11, 2026 | 11:13 PM IST

Doctor Verified

கால்சியம் குறைபாட்டால் தசை விறைப்பு ஏற்படுமா? மருத்துவர் தரும் விளக்கம்

கால்சியம் குறைபாட்டால் நமக்கு தசை வலி ஏற்படுமா?. ஆனால் இது ஏன் நடக்கிறது, அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? இது குறித்த தகவல்களை மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நம் உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம் உள்ளது. அதில் ஒன்றாக கால்சியம் அமைகிறது. இது நம் உடலில் உள்ள ஒரு முக்கியமான கனிமமாகும். இவை பற்கள், எலும்புகளுக்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், கால்சியம் ஊட்டச்சத்துக்கள் தசைச் சுருக்கம் மற்றும் நரம்பு சமிக்ஞை பரிமாற்றம் போன்ற பல தசை செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், போதுமான கால்சியம் இல்லாததன் காரணமாக, இரத்தம் உறைதலின் சிக்கலான செயல்முறை சீர்குலைக்கப்படலாம். எனவே, கால்சியம் குறைபாட்டைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமாகும்.

இந்த குறைபாட்டைச் சரி செய்வதற்கு பால், பால் பொருட்கள் மற்றும் இன்னும் பிற கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். எனினும், எல்லா முயற்சிகளையும் மீறி, சிலர் இன்னும் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுவதை கவனித்திருக்கலாம். இது கால் வலி, பலவீனம் மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால், சிலருக்கு தசை விறைப்பும் ஏற்படுகிறது. கேள்வி என்னவெனில், தசை விறைப்புக்கும் கால்சியம் குறைபாட்டிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இது குறித்து டாக்டர் கே. அபிஷேக் வைஷ் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதை பற்றி இங்குக் காண்போம்.

கால்சியம் குறைபாடு உண்மையில் தசை விறைப்பை ஏற்படுத்துமா?

ஆம். அது முற்றிலும் உண்மை. கால்சியம் குறைபாடு காரணமாக, தசை விறைப்பு ஏற்படக்கூடும். தசைச் சுருக்கத்தை நீக்கவும், தளர்வுக்கும் கால்சியம் அயனிகள் அவசியமாகிறது. இதன் காரணமாக, உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படும்போது, தசைகள் தன்னிச்சையாக சுருங்கக்கூடும். இதன் காரணமாக, விறைப்பு மற்றும் அதிகரித்த அசௌகரியம் ஏற்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உடலில் கால்சியம் குறைபாட்டை போக்க.. இந்த உணவுகளை சாப்பிடவும்..

இதன் விளைவாக, தசை விறைப்பு ஏற்படுகிறது. மேலும், இது கால் வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கால்சியம் குறைபாடு முதுகுவலியை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, கால்சியம் குறைபாட்டை புறக்கணிக்கக்கூடாது. அதே சமயம், நீண்ட காலமாக கால்சியம் குறைபாட்டை புறக்கணித்தால், அது நினைவாற்றல் இழப்பு, வலிப்புத்தாக்கங்கள் மற்றும் இதய பிரச்சினைகள் உள்ளிட்ட பல கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

தசை பிடிப்பு இருந்தால் என்ன செய்வது?

நீட்சி செய்வது

தசை விறைப்புக்கான காரணத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். இந்நிலையில், உடல் செயல்பாடு இல்லாததன் காரணமாக, தசை விறைப்பு அதிகரிக்கக்கூடும். நீட்சிப்பயிற்சி செய்வதன் மூலம் இந்த விறைப்பை போக்கலாம்.

சூடான அல்லது குளிர் அழுத்தங்களைப் பயன்படுத்துவது

தசை விறைப்பு ஏற்படும் போது, உடலை சூடாக்குவது முக்கியமாகும் அல்லது குளிர் அழுத்தியைப் பயன்படுத்தலாம். உடலை சூடாக்குவதற்கு ஒரு சூடான குளியல் மேற்கொள்ளலாம். இவை தசைகளைத் தளர்த்த உதவுகிறது. மேலும் இது தசை வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. அதே சமயம், குளிர் அழுத்தங்களும் தசை பிடிப்புகளைப் போக்க உதவுகிறது.

மசாஜ் செய்வது

உடலை மசாஜ் செய்வதன் மூலம் தசை விறைப்பிலிருந்து நிவாரணம் பெறலாம். உண்மையில், மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் வலியைக் குறைக்கிறது. ஆம், ஒரு தொழில்முறை நிபுணரால் உடல் மசாஜ் செய்வதன் மூலம் இன்னும் அதிக நன்மைகளைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உங்கள் வயதுக்கு ஏற்ப தினமும் உடலுக்கு எவ்வளவு கால்சியம் தேவைப்படும்? - முழு விவரம் இங்கே!

கால்சியம் குறைபாட்டை சமாளிப்பது எப்படி?

உணவுமுறை மாற்றங்களைச் செய்வது

கால்சியம் குறைபாட்டைச் சமாளிக்க, கால்சியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில், பால், பால் பொருள்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றைச் சேர்க்கலாம். இது தவிர, பாதாம் மற்றும் பழங்களும் கால்சியம் நிறைந்த நல்ல ஆதாரங்களாகும்.

சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது

கால்சியம் குறைபாடு கடுமையாக இருக்கும் சூழலில் அதைப் புறக்கணிப்பது ஆபத்தை விளைவிக்கலாம். எனவே மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதன் அளவைக் கவனிப்பதும் அவசியமாகும். எனவே அவரவர்களுக்குத் தேவையான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

பல ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். எனவே, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, எடைப் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது எலும்பு அடர்த்தியை மேம்படுத்தி எலும்புகளை பலப்படுத்துகிறது.

மருத்துவ சிகிச்சையை நாடுவது

அடிப்படை மருத்துவ நிலை காரணமாக, கால்சியம் குறைபாடு இருந்தால், மருத்துவ சிகிச்சையைப் பெறுவது நல்லது. உங்கள் மருத்துவர் உங்கள் நிலையை மதிப்பிட்டு உங்கள் சிகிச்சையை தீர்மானிப்பார். சில நேரங்களில், ஹைப்போ தைராய்டிசம் மற்றும்சிறுநீரக நோய்க்கான காரணங்கள்வைட்டமின் டி குறைபாடு உள்ளது

முடிவுரை

வைட்டமின் டி மற்றும் தசைப்பிடிப்புக்கு இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது. எனவே, சரியான உடல் செயல்பாட்டிற்கு வழக்கமான வைட்டமின் டி உட்கொள்ளலைப் பராமரிப்பது மிகவும் முக்கியமாகும். இதை அடைய, உணவுமுறை மாற்றங்கள் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளைக் கையாள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நன்மை பயக்கும். எனவே, வைட்டமின் டி குறைபாடு ஒரு மருத்துவ நிலை காரணமாக இருந்தால், மருத்துவ சிகிச்சை பெறுவதை தாமதப்படுத்தக் கூடாது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த வைட்டமின் குறைபாட்டால் உங்களுக்கு இதய நோய் வரலாம்.. மருத்துவர் தரும் அறிவுரை

Image Source: Freepik

Read Next

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் – பலருக்கும் தெரியாத பால் பிரச்சனை!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 07, 2025 09:30 IST

    Modified By : கௌதமி சுப்ரமணி
  • Oct 07, 2025 09:30 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content