Doctor Verified

இந்த வைட்டமின் குறைபாட்டால் உங்களுக்கு இதய நோய் வரலாம்.. மருத்துவர் தரும் அறிவுரை

Effects of calcium deficiency on heart function and cardiovascular health: உடல் ஆரோக்கியமாக இருக்க போதுமான ஊட்டச்சத்துக்கள் அவசியமாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டினால் உடல் உறுப்புகளில் மோசமான விளைவு ஏற்படலாம். இதில் கால்சியம் குறைபாட்டால் இதயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இந்த வைட்டமின் குறைபாட்டால் உங்களுக்கு இதய நோய் வரலாம்.. மருத்துவர் தரும் அறிவுரை


Why calcium is essential for heart health and what happens when it’s deficient: நம் அன்றாட உணவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். உடலில் உள்ள பல்வேறு முக்கிய உறுப்புகளுக்கு ஆற்றலை வழங்குவதற்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உதவுகின்றன. மேலும், ஒரு நபர் இந்த ஊட்டச்சத்துக்களை உணவு மூலம் பெறுகின்றனர். இந்த வரிசையில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலின் எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளுக்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்தாக நிபுணர் கூறுகிறார்கள்.

இந்நிலையில், ஒரு நபரின் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால், உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படக்கூடும். ஆனால், கால்சியம் குறைபாடு இதய ஆரோக்கியத்தையும் பாதிக்குமா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. பொதுவாக, இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கொழுப்பு, இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் போன்றவை அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மை என்னவெனில் கால்சியம் குறைபாடு இதயத்தையும் பாதிக்கக்கூடும். இதில் கட்டமைப்பு இதய நோய் நிபுணர் AHNM, தலையீட்டு இருதயவியல், மூத்த ஆலோசகர் டாக்டர் பிரஜேஷ் குன்வர் அவர்கள் கால்சியம் குறைபாட்டிற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: பாலை விட அதிக கால்சியம் உள்ள உணவுகள் இங்கே..

கால்சியம் குறைபாடு இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது?

கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நமது உடலின் ஒரு அத்தியாவசிய கனிமமாகும். இது எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தசை சுருக்கம், நரம்பு மண்டலம் மற்றும் இரத்த உறைவு போன்ற பல முக்கிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது. மேலும் நமது இதயம் ஒரு தசை ஆகும். இவை சரியாக செயல்பட போதுமான கால்சியம் தேவைப்படுகிறது. இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் கால்சியத்தின் உதவியுடன் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஒருவருக்கு கால்சியம் குறைபாடு இருந்தால், அது இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதில் கால்சியம் குறைபாடு இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை காணலாம்.

இதய தசையில் பலவீனம்

உடலில் கால்சியம் குறைபாடு இதய தசைகளை பலவீனமடைகிறது. இது இதயம் இரத்தத்தை பம்ப் செய்வதை கடினமாக்குகிறது மற்றும் இதயத்தின் செயல்திறனைக் குறைக்கிறது.

இரத்த அழுத்தத்தில் விளைவு

இரத்த நாளங்களின் தசைகளை தளர்த்த கால்சியம் உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. கால்சியம் குறைபாட்டின் காரணமாக இரத்த நாளங்கள் சுருங்கி உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்குகிறது. இது இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இதய செயலிழப்பு ஆபத்து

உடலில் நீண்டகால கால்சியம் குறைபாடு ஏற்படும் போது இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும். இது இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (அரித்மியா)

உடலில் கால்சியம் அளவு குறைவாக இருக்கும்போது, இதயத்தின் மின் அமைப்பு தொந்தரவு செய்யப்படக்கூடும். இது ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளுக்கு வழிவகுக்குகிறது. இவை சில நேரங்களில் மெதுவாகவும், சில நேரங்களில் வேகமாகவும், சில நேரங்களில் சீரற்றதாகவும் காணப்படலாம். இந்த பிரச்சனை நீண்ட நேரம் தொடர்ந்தால், அது கடுமையான இதய நோய்களுக்கு வழிவகுக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உங்கள் வயதுக்கு ஏற்ப தினமும் உடலுக்கு எவ்வளவு கால்சியம் தேவைப்படும்? - முழு விவரம் இங்கே!

கால்சியம் குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள்

  • சுவாசிப்பதில் சிரமம்
  • மார்பு வலி அல்லது பதட்டம்
  • தசைப்பிடிப்புமற்றும் வலி
  • தூக்கப் பிரச்சினைகள் மற்றும் எரிச்சல்
  • கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு
  • வேகமான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
  • சோர்வு மற்றும் பலவீனம்

இந்த அறிகுறிகள் அனைத்தும் கால்சியம் குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். எனினும், இரத்தப் பரிசோதனையில் கால்சியம் அளவு குறைவாக இருந்தால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கால்சியம் குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது?

  • பால், தயிர், சீஸ், பச்சை காய்கறிகள் (கீரை, பாதுவா), சோயா, டோஃபு, பாதாம் மற்றும் எள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.
  • தேவைப்பட்டால் சூரிய ஒளியில் நேரத்தை செலவிட வேண்டும். மேலும் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துவதற்கு வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ளலாம்.
  • கால்சியம் குறைபாட்டை சரி செய்ய, மருத்துவர் சப்ளிமெண்ட்களை பரிந்துரை செய்திருந்தால், அதை தவறாமல் எடுத்துக் கொள்ளலாம்.
  • கால்சியம், வைட்டமின் டி மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் அளவை சரிபார்ப்பதற்கு ஆண்டுதோறும் இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக, இதய நோய் ஏற்படும் அபாயம் இருந்தால் இந்த ஊட்டச்சத்துக்களின் அளவை சரிபார்க்க வேண்டும்.

எனவே, கால்சியம் எலும்புகளுக்கு மட்டுமல்லாமல், இதயத்திற்கும் முக்கியமானதாகும். இதன் குறைபாடு இதயத் துடிப்பைப் பாதிக்கிறது. இவை இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இதய தசைகள் பலவீனமடையக்கூடும். எனவே, கால்சியம் நிறைந்த உணவை உட்கொள்வது, வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

இந்த பதிவும் உதவலாம்: 30 நாட்களில் எலும்பு இரும்பு போல் ஸ்ட்ராங்க் ஆகனுமா? - இந்த உணவுகள கட்டாயம் சாப்பிடுங்க...! 

Image Source: Freepik

Read Next

தேங்காய் இதயத்தை காக்குமா.? நிபுணர்கள் சொல்வது என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 28, 2025 22:18 IST

    Published By : கௌதமி சுப்ரமணி