Sat Sep 12, 2026 | 12:21 AM IST

Doctor Verified

ஆண்களின் கருத்தரிப்புத் திறனை அமைதியாக பாதிக்கும் 3 பழக்கங்கள் – நிபுணர் எச்சரிக்கை

உலகளவில் 50% தம்பதிகளின் கருத்தரிப்பு பிரச்சினைக்கு ஆண்களின் காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன என ஆய்வு கூறுகிறது. Dr. சௌரப் சேதி மூன்று பழக்கங்கள் ஆண்களின் கருத்தரிப்பை பாதிக்கக்கூடும் என எச்சரிக்கிறார். அவை என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

உலகளவில் கருத்தரிப்பு பிரச்சினை (Infertility) அதிகரித்து வரும் நிலையில், அதில் ஆண்களின் பங்கு சுமார் 50% என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 2021ஆம் ஆண்டு லான்செட் (Lancet) அறிக்கையில், உலகளவில் 8 முதல் 12 சதவீத தம்பதிகள் கருத்தரிப்பு சிக்கல்களால் பாதிக்கப்படுவதாகவும், அதில் ஆண்களின் கருத்தரிப்பு குறைபாடு முக்கிய பங்காற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், AIIMS, ஹார்வார்டு, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்ட்ராலஜிஸ்ட் Dr. சௌரப் சேதி, தனது Instagram பதிவில் ஆண்களின் கருத்தரிப்பு திறனை அமைதியாக பாதிக்கும் 3 பழக்கங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆண்களின் கருத்தரிப்பை பாதிக்கும் 3 பழக்கங்கள்

உயர் வெப்பநிலை

உயர் வெப்பநிலையில் நீண்ட நேரம் உட்கார்வது, ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் குறைக்கும். விந்தணு உற்பத்திக்கு, Testicles உடல் வெப்பத்தைக் காட்டிலும் சற்றுக் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

ஆனால், ஹாட் டப் போன்ற பழக்கங்கள், ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியை தடுக்கிறது. மருத்துவரின் கூற்றுப்படி, ஒரே முறை நீண்ட நேரம் ஹாட் டப் வெப்பத்திற்கு உட்பட்டால்கூட, அதற்கான தாக்கம் 3 மாதங்கள் வரை நீடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கருப்பை சுத்தம் செய்தால் கர்ப்பம் தாமதம் குறையுமா.? உண்மையை மருத்துவர் விளக்கம்..

இறுக்கமான உள்ளாடைகள்

நாம் அடிக்கடி கவனிக்காத இன்னொரு பழக்கம், இறுக்கமான உள்ளாடை அணிதல். இது Testicles சுற்றுவட்டாரத்தில் அதிகப்படியான வெப்பத்தை உண்டாக்குகிறது. நீண்ட காலமாக இந்த பழக்கத்தைத் தொடர்வதால், விந்தணு எண்ணிக்கை குறைவதும், தரம் பாதிக்கப்படுவதும் ஏற்படும். மருத்தவர்கள் பரிந்துரிப்பது: விடுபட்ட உள்ளாடைகள் அணிவது சிறந்தது.

புகைபிடித்தல் மற்றும் வேப்பிங்

புகைபிடித்தல், வேப்பிங் இரண்டும் உடலின் பொது ஆரோக்கியத்தையே பாதிப்பதோடு, கருத்தரிப்பையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது.

* புகையிலையிலும், வேப்பிங் லிக்விட்ஸிலும் உள்ள ரசாயனங்கள் நேரடியாக விந்தணுக்களின் தரத்தையும் இயக்கத்தையும் (Motility) குறைக்கும்.

* நீண்டகால புகைபிடித்தல், விந்தணுக்கள் ஆரோக்கியமாக கருவூட்டும் திறனை கடுமையாக குறைக்கும்.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

இறுதியாக..

ஆண்களின் கருத்தரிப்பு குறைபாடு என்பது மருத்துவ ரீதியாக சிகிச்சை பெறக்கூடிய ஒரு நிலை. ஆனால், அன்றாடம் நாம் செய்யும் சில பழக்கங்கள் கூட அதை மோசமாக்கக்கூடும். ஹாட் டப், இறுக்கமான உள்ளாடைகள், புகைபிடித்தல், வேப்பிங் ஆகியவற்றைத் தவிர்ப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சத்தான உணவு பழக்கம் ஆகியவற்றை பின்பற்றுவது, ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Disclaimer: இந்த கட்டுரை மருத்துவர் Dr. சௌரப் சேதி வழங்கிய தகவலின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. தனிப்பட்ட சிகிச்சை மற்றும் ஆலோசனைக்காக தகுந்த மருத்துவ நிபுணரை அணுகவும்.

Read Next

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவை இயற்கையாகவே அதிகரிக்க சக்திவாய்ந்த வழிகள்.. நிபுணரின் கருத்து

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 03, 2025 17:10 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content