Fri Sep 11, 2026 | 11:43 PM IST

Expert

குடல் ஆரோக்கியத்திற்கு இந்த உணவுக்கு பதில் நீங்க மாற்ற வேண்டிய உணவுகள்.. நிபுணர் விளக்கம்

நல்ல ஆரோக்கியமான குடலுக்கு சில உணவு பரிமாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகும். இதில் எந்தெந்த உணவுகளுக்குப் பதில் எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்பது குறித்து நிபுணர் கூறியதைக் காண்போம்.

நல்ல குடல் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியம் ஆகும். ஏனெனில், மோசமான குடல் ஆரோக்கியத்தின் காரணமாக இதய பாதிப்பு, மூளை பாதிப்பு மற்றும் சருமத்தில் பாதிப்பு போன்ற பல்வேறு உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் பதட்டம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக வயிறு உப்புசம், வாயு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

இந்நிலையில் நல்ல குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கும், நல்ல செரிமானத்தை மேம்படுத்தவும் சில உணவு முறைகளைக் கையாள்வது அவசியமாகும். ஏனெனில், குடல் ஆரோக்கியத்தை பாதிப்பதில் ஆரோக்கியமற்ற உணவுமுறையே முக்கிய காரணமாக அமைகிறது. எனினும், நல்ல குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அன்றாட உணவில் சில மாற்றங்களை மேற்கொள்ளலாம். இதில் குடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு எந்தெந்த உணவுகளுக்குப் பதில் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து உணவு சிகிச்சை உணவியல் நிபுணர் ஸ்வேதா ஜே பஞ்சால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஹெல்த்தியா இருக்க உங்க டயட்ல சேர்க்க வேண்டிய 3 பவர்ஃபுல் விதைகள் இங்கே

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு மாற்றங்கள்

மோசமான குடல் ஆரோக்கியம் உடலை பல வழிகளில் பாதிக்கக்கூடும். இந்நிலையில், குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாம் சில உணவு மாற்றங்களைக் கையாள வேண்டும்.

நிபுணர் ஸ்வேதா அவர்கள் தனது பதிவில் கூறியதாவது, “சிறந்த குடல் ஆரோக்கியம் என்பது எப்போதும் குறைவாக சாப்பிடுவதைக் குறிக்காது - அதாவது புத்திசாலித்தனமாக சாப்பிடுவதைக் குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

குடல் ஆரோக்கியத்திற்கான சில எளிய மாற்றங்கள்

அடர் பச்சை மிளகாய் → வெளிர் பச்சை மிளகாய்

அடர் பச்சை மிளகாயை வெளிர் பச்சை மிளகாய்க்கு மாற்ற நிபுணர் பரிந்துரைக்கிறார். இவை செரிமானத்திற்கு மென்மையானதாக அமைவதாகக் கூறுகிறார். எனவே, குடல் ஆரோக்கியத்திற்கு வெளிர் பச்சை மிளகாயை எடுத்துக் கொள்ள நிபுணர் பரிந்துரைக்கிறார்.

சியா விதைகள் → சப்ஜா விதைகள்

சியா விதைகளுக்குப் பதிலாக சப்ஜா விதைகளை நிபுணர் பரிந்துரை செய்கிறார். சப்ஜா விதைகள் குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்டதாகும். மேலும் இது இலகுவான தன்மை கொண்டதாகும். இதில் சப்ஜா விதைகள் தண்ணீரை விரைவில் உறிஞ்சி கூழ்மமாக மாறுகிறது. இது அசிடிட்டி மற்றும் செரிமானப் பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும்.

கோதுமை → அரிசி

ஊட்டச்சத்து நிபுணர் கோதுமைக்கு மாற்றாக, அரிசியைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறார். அவர் மென்மையான தேர்வாகவும், குடல் புறணியில் எளிதானது என்றும் குறிப்பிடுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: Gut Health + Liver Care: ஹார்வர்ட் டாக்டர் பகிரும் 10 இரவு உணவுகள்..

கடலை பருப்பு → பாசிப்பருப்பு

கடலைப் பருப்புக்கு பதிலாக, பாசிப்பருப்பை ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை செய்கிறார். அவர் வீடியோவில் கூறியதாவது, பாசிப்பருப்பு ஆனது இலகுவான புரதம் மற்றும் குறைவான வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.

பேரிக்காய் → அன்னாசி

பேரிக்காய்க்கு மாற்றாக, அன்னாச்சிப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அவரின் கூற்றுப்படி, அன்னாச்சி சாறு அதிகம் நிறைந்ததாகும். இது குடல் நொதிகளை ஆதரிக்கவும் உதவுகிறது.

View this post on Instagram

A post shared by Dietitian Shweta J Panchal | The Diet Therapy (@dt.shwetashahpanchal)

நிபுணர் கூறியதாவது, “சிறிய மாற்றங்களின் மூலம் பெரிய நிவாரணத்தைப் பெறலாம். மேலும் குடலுக்கு உச்சநிலை தேவையில்லை. மாற்றாக, அதற்கு சமநிலை தேவை. எனவே, நல்ல குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு இந்த உணவு பரிமாற்றங்களைக் கையாளலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: வயிறு உப்புசத்தை உடனே குறைக்கும் உணவுகள்.! மருத்துவர் பரிந்துரை..

Image Source: Freepik

Read Next

மனதளவில் அதிகமாகத் தூண்டப்படும்போது நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 07, 2025 14:00 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content