Fri Sep 11, 2026 | 11:13 PM IST

Expert

ப்ரீ-டயாபடீஸை ரிவர்ஸ் செய்ய இந்த 4 பழக்கங்களை உடனே மாற்றுங்க

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆனது உடலில் இன்சுலின் செயல்படுவதையும், ஆனால் திறம்பட செயல்படவில்லை என்பதையும் குறிக்கிறது. இதனால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், இதை மாற்றுவதற்கு சில குறிப்புகளைப் பின்பற்றலாம்.

இன்றைய காலகட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவற்றால் உடலின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், நீரிழிவு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை மக்களிடையே மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நீரிழிவுக்கு முந்தைய நிலை மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்றவை உடல்நலம் தொடர்பான அறிகுறிகளாகும். இதை சரியான நேரத்தில் சரிசெய்வதன் மூலம் வகை 2 நீரிழிவு நோயைத் தடுக்கலாம்.

இதில் நீரிழிவுக்கு முந்தைய நிலையானது உடலில் இன்சுலின் செயல்படுவதைக் காட்டுகிறது. ஆனால், இவை அவ்வளவு திறம்பட செயல்படாது. இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நீரிழிவுக்கு முந்தைய நிலையை மாற்றியமைப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. இதில் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஜே பஞ்சால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையைத் தவிர்க்கும் பழக்கங்கள்

ஊட்டச்சத்து நிபுணர் தனது பதிவில் கூறியதாவது, நீரிழிவு நோய்க்கு முந்தைய காலமா? நீரிழிவு நோய் வருவதற்கு காத்திருக்க வேண்டாம் - இப்போதே பொறுப்பேற்கவும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர், நீரிழிவு நோய்க்கு முந்தைய காலமா என்பது உங்கள் இரத்த சர்க்கரை இயல்பை விட அதிகமாக இருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாகும், ஆனால் சரியான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இது இன்னும் மீளக்கூடியது. அதை திறம்பட நிர்வகிக்க 4 நடைமுறை படிகள் குறித்து இங்கே பகிர்ந்துள்ளார்.

மன அழுத்தம் மற்றும் தூக்கத்தை நிர்வகிப்பது

ஊட்டச்சத்து நிபுணர் கூறியதாவது,”நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் மோசமான தூக்கம் கார்டிசோலை அதிகரிக்கிறது, இது இரத்த சர்க்கரையை அதிகரிக்கிறது. 7–8 மணிநேர தரமான தூக்கம் மற்றும் தியானம் அல்லது குறுகிய நடைப்பயிற்சி போன்ற மன அழுத்தத்தைத் தணிக்கும் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்” எனக் கூறுகிறார்.

இவை இரண்டுமே நீரிழிவுக்கு முந்தைய நிலையை நிர்வகிப்பதற்கு அவசியமானதாகும். இதில் சிறிய, நிலையான மாற்றங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் குளுக்கோஸை ஒழுங்குபடுத்தலாம். இவை உடலின் இயற்கையான திறனை ஆதரிக்கும் மற்றும் வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: ப்ரீ டயாபடீஸை ரிவர்ஸ் செய்ய நீங்க தினமும் செய்ய வேண்டிய பழக்க வழக்கங்கள் இங்கே

உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது

நிபுணரின் கூற்றுப்படி, வழக்கமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது தசைகள் குளுக்கோஸை சிறப்பாகப் பயன்படுத்த உதவுகிறது. அதன்படி, தினசரி 30 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது வீட்டு உடற்பயிற்சிகள் கூட மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என நிபுணர் பகிர்ந்துள்ளார்.

உண்மையில் விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது ஜாகிங் போன்ற ஏரோபிக் செயல்பாடுகளை வாரத்திற்கு இரண்டு முறையாவது செய்வது போன்றவை உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உதவுவதுடன், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

எளிய கார்போஹைட்ரேட்டுகளைக் குறைப்பது

வெள்ளை ரொட்டி, சர்க்கரை மற்றும் இனிப்புகள் போன்ற உணவுகள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கின்றன. ஓட்ஸ், பருப்பு, காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த, குறைந்த GI மாற்றுகளுடன் அவற்றை மாற்றவும் என ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்தார்.

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையை மாற்றுவதற்கு அன்றாட உணவில் கார்போஹைட்ரேட்டுகளைச் சேர்ப்பதைக் குறைத்து, நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

View this post on Instagram

A post shared by Dietitian Shweta J Panchal | The Diet Therapy (@dt.shwetashahpanchal)

தாமதமாக இரவு உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது

இரவு உணவுகளை மிகவும் தாமதமாக எடுத்துக் கொள்வது இன்சுலின் ஒழுங்குமுறை மற்றும் செரிமானம் சீர்குலைக்கப்படுகிறது. இந்நிலையில், இரவு உணவை படுக்கைக்கு குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன்பே முடிக்க இலக்கு வைக்க வேண்டும்.

ஏனெனில் தாமதமான இரவு உணவுகளை சாப்பிடுவது செரிமானத்தை சீர்குலைக்கக்கூடும். எனவே நீரிழிவு நோய் முந்தைய நிலையைத் தவிர்க்க தாமதமான உணவு உட்கொள்ளலைத் தவிர்க்க வேண்டும்.

நிபுணரின் கருத்துப்படி, இன்றைய சிறிய, நிலையான மாற்றங்களின் மூலம் நாளை முழு அளவிலான நீரிழிவு நோயைத் தடுக்கலாம். நீரிழிவுக்கு முந்தைய நிலை நிரந்தரமானது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பகிர்ந்துள்ளார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: ப்ரீ டயாபெடிஸை மாற்றவும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் நீங்க பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள் இதோ

Image Source: Freepik

Read Next

சுகர் லெவலை குறைக்கிறது மட்டுமல்ல.. டயபடீஸை மாற்றியமைக்கும் 6 வைட்டமின்கள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 28, 2025 12:31 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content