Expert

சுகர் லெவலை குறைக்கிறது மட்டுமல்ல.. டயபடீஸை மாற்றியமைக்கும் 6 வைட்டமின்கள்!

Vitamins that control blood sugar: நீரிழிவு நோய் மாற்றியமைக்கவும் மற்றும் உடலில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் அன்றாட உணவில் சில வைட்டமின்களைச் சேர்க்கலாம். இதில் இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவும் வைட்டமின்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சுகர் லெவலை குறைக்கிறது மட்டுமல்ல.. டயபடீஸை மாற்றியமைக்கும் 6 வைட்டமின்கள்!

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த காலநிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக நீரிழிவு நோய் அமைகிறது. இது டைப் 1, டைப் 2 நீரிழிவு நோய் என வகைப்படுத்தப்படுகிறது.


முக்கியமான குறிப்புகள்:-


எனினும், அன்றாட வாழ்வில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க முடியும். அவ்வாறு உணவில் சேர்க்கக்கூடிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இன்னும் பல்வேறு ஊட்டச்சத்துக்களின் மூலம் நீரிழிவு நோயை நிர்வகிக்கலாம். அதன் படி, இதில் இரத்த சர்க்கரை அளவை அமைதியாகக் கட்டுப்படுத்தும் மற்றும் நீரிழிவு நோயை இயற்கையாகவே மாற்றியமைக்கும் வைட்டமின்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும் வைட்டமின்கள்

ஊட்டச்சத்து நிபுணர் தனது பதிவில், “உங்கள் இரத்த சர்க்கரையை அமைதியாகக் கட்டுப்படுத்தும் மற்றும் நீரிழிவு நோயை இயற்கையாகவே மாற்றியமைக்கும் 6 வைட்டமின்கள்!” என்ற தலைப்பில் ஆரம்பித்தார்.

இதில் உங்கள் இரத்த சர்க்கரை நீங்கள் சாப்பிடுவதால் மட்டும் அதிகரிப்பதில்லை - இது உடலில் இல்லாத முக்கிய வைட்டமின்களாலும் பாதிக்கப்படுகிறது. இந்த ஆறு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் அமைதியாக ஆனால் திறம்பட செயல்படுகின்றன என்று பகிர்ந்தார்.

1- வைட்டமின் டி - இன்சுலின் உற்பத்தி மற்றும் உணர்திறனை ஆதரிக்கிறது

2- வைட்டமின் பி1 (தியாமின்) - குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது

3- வைட்டமின் பி6 (பைரிடாக்சின்) - இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது

4- வைட்டமின் பி7 (பயோட்டின்) - இரத்த சர்க்கரையை இயற்கையாகவே சீராக்க உதவுகிறது

5- வைட்டமின் சி - கணைய செல்களைப் பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றி

6- வைட்டமின் கே - குளுக்கோஸ் கையாளுதலை மேம்படுத்துகிறது மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயாளிகளே! காலையில் இந்த தவறுகளை மட்டும் மறந்தும் செய்யாதீங்க.. மருத்துவர் தரும் விளக்கம்

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதற்கு வைட்டமின் டி, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் பி7, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்றவை ஏன் முக்கியம் என்பது குறித்து காணலாம்.

வைட்டமின் பி1 (தியாமின்)

ஏன் முக்கியம்

குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது மற்றும் பலவீனம் மற்றும் சோம்பலுக்கு எதிராக பாதுகாக்கிறது.

சிறந்த ஆதாரங்கள்: முழு தானியங்கள், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் பழுப்பு அரிசி.

வைட்டமின் பி6 (பைரிடாக்சின்)

ஏன் முக்கியம்

நரம்பியக்கடத்தி சமநிலை மற்றும் நீரிழிவு நரம்பியல் நோயைத் தடுப்பதற்கு அவசியம். (நரம்புகள் ஆரோக்கியத்திற்கு)

சிறந்த ஆதாரங்கள்: கொண்டைக்கடலை, வாழைப்பழங்கள், கீரை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு

வைட்டமின் சி

ஏன் முக்கியம்

வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது, இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைப் பாதுகாக்கிறது.

சிறந்த ஆதாரங்கள்: ஆரஞ்சு, கிவி, மஞ்சள் மற்றும் சிவப்பு குடைமிளகாய்.

View this post on Instagram

A post shared by Nutritionist Anjali (@nutritionistanjali_official)

வைட்டமின் டி

ஏன் முக்கியம்

வைட்டமின் டி செல்கள் சரியாக செயல்படவும், இன்சுலின் வெளியீட்டை சீராக ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.

சிறந்த ஆதாரங்கள்: சால்மன், முட்டை, பால், காளான்கள்

வைட்டமின் கே

ஏன் முக்கியம்

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைக்கிறது.

சிறந்த ஆதாரங்கள்: கீரை, காலே, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ்

அட்டவணையில் நிபுணர் பகிர்ந்துள்ள வைட்டமின்களும், அதை ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

வைட்டமின்கள் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியவை
வைட்டமின் பி1

ஆண்கள்: 1.4 மி.கி/நாள்;

பெண்கள்: 1.4 மி.கி/நாள்

வைட்டமின் பி6

ஆண்கள்: 2.0 மி.கி/நாள்;

பெண்கள்: 1.9 மி.கி/நாள்

வைட்டமின் சி ஆண்கள்: 80 மி.கி/நாள்

பெண்கள்: 65 மி.கி/நாள்

வைட்டமின் டி 

600 IU/நாள்

(≈15 µg/நாள்)

வைட்டமின் கே  பெரியவர்கள்: 55 µg/நாள்

உண்மை: இவற்றில் ஒன்றைக் கூட தவறவிடுவது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது கடினமாக்கலாம் - ஆனால் அவற்றை மூலோபாய ரீதியாகச் சேர்ப்பது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என நிபுணர் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன? அதை எவ்வாறு சோதிப்பது?

Image Source: Freepik

Read Next

இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன? அதை எவ்வாறு சோதிப்பது?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 26, 2025 21:44 IST

    Published By : கௌதமி சுப்ரமணி