Fri Sep 11, 2026 | 11:12 PM IST

Egg for Cholesterol: முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா?

How does eating eggs raise cholesterol levels: முட்டைகள் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகும். இதை பெரும்பாலும் காலை உணவு மற்றும் சிற்றுண்டிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. தசை அதிகரிப்பு, எடையிழப்பு போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு முட்டை உதவுகிறது. எனினும், சிலர் முட்டையில் உள்ள மஞ்சள் கரு ஆனது கொலஸ்ட்ரால் உள்ளடக்கம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தும் திறன் என்பதால் அதை சாப்பிடுவதற்கு தயக்கமடைகின்றனர்.

முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் நிறைந்துள்ளது என்பது உண்மை என்றாலும், எத்தனை முட்டை உட்கொள்கிறோம், அதை எவ்வாறு உணவுடன் இணைக்கிறோம் என்பது குறித்து கருத்தில் கொள்ள வேண்டும். இதில் முட்டை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு இடையே உள்ள முழுமையான தொடர்பு குறித்தும், அவை இதய ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோல் செய்யும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் இதோ!

கொலஸ்ட்ரால் பற்றி தெரியுமா?

உடல் மற்றும் இரத்தத்தின் செல்களில் காணப்படக்கூடிய கொழுப்பு போன்ற மெழுகுப் பொருளே கொலஸ்ட்ரால் எனப்படுகிறது. உடலில் வைட்டமின் டி, உணவை செரிமானம் அடையச் செய்ய உதவும் பித்த அமிலங்கள் மற்றும் ஹார்மோன்கள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்ய கொழுப்பு முக்கியமாக தேவைப்படும் ஒன்றாகும். உடல் கல்லீரலில் கொழுப்பை உருவாக்கும் போது, சில உணவுகளின் மூலம் கொலஸ்ட்ராலைப் பெறுகிறது. கொலஸ்ட்ரல் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை கெட்ட மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் ஆகும்.

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள்

உடலில் அதிக கொழுப்பு இருப்பது பொதுவாக குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்தாது. எனவே இதைக் கண்டறிய வழக்கமான இரத்தப் பரிசோதனைகள் அவசியமாகும். எனினும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அதிக கொலஸ்ட்ரால் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். இது தாமதமாகும் வரையே இது ஒரு மறைக்கப்பட்ட ஆபத்து காரணியாக அறியப்படுகிறது. இதன் அறிகுறிகளை பலர் அனுபவிக்கவில்லை என்றாலும், அதிக கொழுப்பு உள்ளவர்கள் மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, பலவீனம், சோர்வு, முழங்கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகளைக் கவனிக்கலாம். வழக்கமான பரிசோதனைகளின் மூலம் அதிக கொலஸ்ட்ராலைக் கண்டறிந்து உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் முன் நிர்வகிக்க உதவுகிறது.

முட்டை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா?

முட்டையில் உள்ள மஞ்சள் கரு கொலஸ்ட்ராலைக் கொண்டுள்ளது. இரத்தத்தில் உள்ள அதிகளவு கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய்க்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்பதால், முட்டைகளில் உள்ள கொலஸ்ட்ராலைத் தவிர்ப்பது சரியானதாகக் கருதப்படுகிறது. ஆய்வு ஒன்றில் ஒவ்வொரு அரை முட்டைக்கு இதய நோய் அபாயத்திற்கான வாய்ப்பு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் தண்ணீர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்குமா?

முட்டைக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு

இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் முட்டையும் அடங்கும். மேலும் இதில் மூளையின் செயல்பாட்டை ஆதரிக்கும் கோலின் உள்ளிட்ட புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை அதிகம் உள்ளது. மற்றொரு ஆய்வு ஒன்றில், குறைவாக உண்பவர்களுடன் ஒப்பிடுகையில் தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு அதாவது ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொள்வது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் , கணிசமாக குறைவாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. இந்த புரதச்சத்துக்கள் நிறைந்த உணவில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. எனினும், மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் உள்ளடக்கம் காரணமாக, சிலர் அதிக முட்டைகளை உட்கொள்வதால் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படலாம் என கவலையுறுகின்றனர்.

உடலில் உள்ள பெரும்பாலான கொலஸ்ட்ரால் ஆனது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும் நாம் எடுத்துக் கொள்ளும் அன்றாட உணவுகளில் முட்டையை மிதமான அளவில் உட்கொள்வது அவசியமாகும். அதே சமயம், மற்ற கொழுப்பு சார்ந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்துவது அவசியமாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தாவர அடிப்படையிலான உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்னனு தெரிஞ்சிக்கோங்க

Image Source: Freepik

Read Next

Arteries Clogged Foods: தமனி அடைப்பு நீங்க உதவும் உணவுகள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content