Sat Sep 12, 2026 | 12:58 AM IST

Expert

Weight Loss: சட்டுனு உடல் எடை குறைய டின்னருக்கு இந்த சூப்களை குடியுங்க!

Which soup is good to reduce belly fat: குளிர்காலத்தில் உடல் எடையை குறைப்பது பெரும்பாலும் கடினமாகிவிடும். ஆனால், சூப் உங்கள் உடலை சூடாக வைத்திருக்கவும், உங்கள் எடையைக் கட்டுப்படுத்தவும் ஒரு ஆரோக்கியமான விருப்பமாக இருக்கும். உடல் எடையை குறைக்க அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்க, உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த சூப் நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

ஊட்டச்சத்து நிபுணர் பூஜா போஹ்ரா, உடல் எடையை குறைக்க இரவு உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய 7 சூப்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss: 15 நாளில் உடல் எடையை குறைக்க தினமும் காலையில் இந்த ஜூஸ் குடியுங்க!

உடல் எடையை குறைக்க உதவும் 7 சூப்கள் - 7 Soups For Weight Loss

பூசணி சூப்

பூசணி சூப்பில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது, இது ஒரு சத்தான மற்றும் நிறைவான விருப்பமாக அமைகிறது. உடல் எடையை குறைக்க, இந்த சூப்பை உங்கள் இரவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம், இது இரவில் தாமதமாக பசி எடுப்பது போன்ற பிரச்சனையையும் குறைக்கும்.

எலுமிச்சை கொத்தமல்லி சூப்

எலுமிச்சையின் புளிப்புச் சுவை அதிக கலோரிகளைச் சேர்க்காமல் உங்கள் சூப்பின் சுவையை அதிகரிக்க உதவுகிறது. கொத்தமல்லியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், உடல் எடையைக் குறைக்கவும், உடல் வீக்கம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Drinks: தீபாவளிக்கு கன்னாபின்னான்னு சாப்பிட்டு உடல் எடை அதிகரித்துவிட்டதா? இந்த 7 பானங்களை குடியுங்க!

சுரைக்காய் சூப்

சுரைக்காய் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் கொண்டது, இது நீரேற்றம் மற்றும் எடையைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.

ராகி வெஜ் பனீர் சூப்

ராகி ஊட்டச்சத்து அதிகம் கொண்டது, மேலும் பனீர் புரதத்தால் நிறைந்துள்ளது. இது இந்த சூப்பை ஒரு முழுமையான மற்றும் திருப்திகரமான விருப்பமாக மாற்றுகிறது மற்றும் உங்கள் எடை இழப்பு உணவில் சேர்க்க சிறந்த செய்முறையாகும்.

காய்கறி சூப்

காய்கறி சூப் எடை இழப்புக்கு ஒரு நன்மை பயக்கும் விருப்பமாகும், இது குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து மற்றும் பல்வேறு காய்கறிகளிலிருந்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம் : Weight loss: தொங்கும் தொப்பையை 7 நாளில் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் இதை குடியுங்க!

முருங்கை சூப்

முருங்கை சூப் உடல் எடையை குறைக்கும் உணவிற்கான ஒரு சத்தான விருப்பமாகும். முருங்கை இலையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

காளான் சூப்

காளான் சூப் குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் எடை இழப்புக்கு ஒரு நல்ல வழி என்பதை நிரூபிக்க முடியும். காளானில் உள்ள நார்ச்சத்து உங்கள் வயிறு நிறைந்ததாக உணர உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Weight Gain: நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? ஒரே வாரத்தில் வெயிட் போட இதை செய்யுங்க!

உடல் எடையை குறைக்க, இரவு உணவின் போது இந்த சூப்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், உங்களுக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமை இருந்தால், இந்த சூப்களை அருந்துவதற்கு முன், நிச்சயமாக உங்கள் சுகாதார நிபுணரை அணுகவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Winter Weight Loss: குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க இந்த டிப்ஸ்-ஐ பின்பற்றுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content