Fri Sep 11, 2026 | 10:44 PM IST

எதிர்பார்க்காத அளவுக்கு எடை குறைய ஆப்பிள் சைடர் வினிகரை இப்படி குடிங்க!

Right way to consume apple cider vinegar for weight loss: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இவ்வாறு உடல் எடையைக் குறைக்கவும், கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர் என்பது வினிகரின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. இந்த ஆப்பிள் சைடர் வினிகர் ஆனது ஆப்பிள்களின் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் பானமாகும். இது ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாவைக் கொண்டு புளிக்க வைக்கப்படுகிறது. நொதித்தல் செயல்முறைக்கு பின்பு, வினிகராக மாற்றுவதற்கு அசிட்டிக் அமிலம் திரவத்தில் சேர்க்கப்படுகிறது. இதில் உடல் எடையைக் குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் எவ்வாறு உதவுகிறது என்பதையும், உடல் எடை குறைய ACV-யை எப்படி உட்கொள்ளலாம் என்பது குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Green coffee for Weight loss: கிரீன் டீ இல்ல கிரீன் காபி குடிங்க! எடை மடமடனு குறையும்

உடல் எடை குறைய ஆப்பிள் சைடர் வினிகர் எவ்வாறு உதவுகிறது?

ஆப்பிள் பழத்திலிருந்து தயார் செய்யப்படும் ஆப்பிள் சைடர் வினிகர் குறைந்த கலோரி நிறைந்த பானமாகும். இவை உடலுக்கு திருப்தி உணர்வை அளித்து, ஆரோக்கியமற்ற பசியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது பசியைக் கட்டுப்படுத்தும் விளைவுகளுக்காக நன்கு அறியப்படுகிறது. இதன் மூலம் கூடுதல் கலோரி உட்கொள்ளலைத் தடுக்கிறது. ஆய்வு ஒன்றில், வினிகரில் நிறைந்த அசிட்டிக் அமிலம் கொழுப்பு திரட்சியை அடக்குவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு ஆரோக்கியமற்ற பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையிழப்பை ஊக்குவிக்கிறது.

ஆப்பிள் சைடர் வினிகர் தரும் நன்மைகள்

  • பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் ஆப்பிள் சைடர் வினிகரில் நிறைந்துள்ளது. மேலும் இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் சில வகையான செல் சேதத்தைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவுகிறது.
  • குறிப்பாக உணவுக்குப் பிறகு ஆப்பிள் சைடர் வினிகர் உட்கொள்வது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இவை ஹெச்டிஎல் என்ற நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், உடலில் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
  • இது தவிர, நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் இன்னும் பிற செரிமான பிரச்சனைகளுக்கு ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தொப்பைக் கொழுப்பை எளிதில் கரைக்கும் வெண்பூசணி ஜூஸ்! எப்படி தெரியுமா?

எப்போது உட்கொள்ளலாம்?

ஆப்பிள் சைடர் வினிகர் பல்வேறு நன்மைகளைத் தந்தாலும், இதை சரியான அளவில் உட்கொள்வது அவசியமாகும். அதன் படி, ஒரு ஆரோக்கியமான நபர் ஆரோக்கிய நலன்களைப் பெற 15 மில்லிலிட்டர்கள் அல்லது 1 டேபிள் ஸ்பூன் அசிட்டிக் அமிலத்தை தினமும் குடிப்பது போதுமானதாகும். எனினும், இதை சரியான அளவில் எடுக்கப்படாவிட்டால் பற்களின் பற்சிப்பி அரிப்பு, சரும எரிச்சல் மற்றும் வேறு சில பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.

மேலும் ஆரோக்கிய நன்மைகளைப் பெற ஆப்பிள் சைடர் வினிகரின் அமிலத்தன்மையை நடுநிலையாக்குவது அவசியமாகிறது. ஹெல்த்லைன் படி, 1-2 டீஸ்பூன் அளவிலான ஆப்பிள் சைடர் வினிகரை உணவுக்கு முன் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதன் நுகர்வு ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாக இருப்பினும், இதை மிதமானதாக உட்கொள்ள வேண்டும். எனினும் இது விரிவாக ஆய்வு செய்யப்படவில்லை.

இந்த பதிவும் உதவலாம்: Grapes for Weight Loss: என்ன செய்தாலும் தொப்பை குறையவில்லையா? கருப்பு திராட்சை ஜூஸ் குடிங்க!

Image Source: Freepik

Read Next

எடையை மாஸ் வேகத்தில் குறைக்கும் அதிசய பழம்! இப்படி சாப்பிட்டு பாருங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content