Healthy Testosterone Foods: டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை பூஸ்டிங் செய்ய நீங்க சாப்பிட வேண்டியதும், சாப்பிட கூடாததும்!

  • SHARE
  • FOLLOW
Healthy Testosterone Foods: டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை பூஸ்டிங் செய்ய நீங்க சாப்பிட வேண்டியதும், சாப்பிட கூடாததும்!

பெரும்பாலான மக்கள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க வழிகளைத் தேடுகின்றனர். இந்த ஹார்மோன் ஆண்களுக்கு தசை உடலமைப்பு, முடி வளர்ச்சி, ஆழ்ந்த குரல் உள்ளிட்ட ஆண்பால் அம்சங்களை வழங்குகிறது. இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பெண்களிலும் சிறிய அளவில் காணப்படுகிறது.  பாலியல் செயல்பாடு மற்றும் நோய்களின் ஆபத்து உள்ளிட்ட பொது ஆரோக்கியத்திற்கு டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Mint Lemon Water Benefits: தினமும் புதினா எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் மற்றும் பாதிக்கும் உணவுகள்

சில உணவுகள் இயற்கையாகவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கலாம் மற்றும் இன்னும் சில உணவுகள் எதிர்மறையாக பாதிக்கலாம்.

முட்டை மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கரு வைட்டமின் டி நிறைந்த ஆதாரமாகும். இதில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்குத் தேவையான கொலஸ்ட்ராலைக் கொண்டுள்ளது. அதிக கொலஸ்ட்ரால் அளவை ஆபத்தில் கொண்டு வராமல் பலன்களைப் பெறுவதற்கு மிதமானதாகவும், முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.

பீன்ஸ்

பீன்ஸ் உட்கொள்வது டெஸ்டோஸ்டிரோன் அளவை ஆதரிக்க உதவுகிறது. இதில் குறிப்பாக கருப்பு பீன்ஸ் மற்றும் கிட்னி பீன்ஸ் வைட்டமின் டி மற்றும் துத்தநாகம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இது தாவர அடிப்படையிலான மாற்றாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் டெஸ்ரோஸ்டிரோன் அளவை ஆதரிக்கிறது.

மாதுளை

மாதுளை சாறு அருந்துவது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவும், இரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக விளங்குகிறது. மேலும் இது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகவும், ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Blueberries Benefits: உடல் எடை குறைப்பு முதல் இரத்த சர்க்கரை வரை! ப்ளூபெர்ரி தரும் அதிசய நன்மைகள்

பசலைக் கீரை

பசலைக் கீரையில் மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது, இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் வைட்டமின் பி6 மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இவையிரண்டுமே ஹார்மோன் உற்பத்திக்கு உகந்ததாகும்.

அவகேடோ

அவகேடோ அல்லது வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே ஹார்மோன் உற்பத்தியில் பங்களிக்கிறது. மேலும் வெண்ணெய் பழத்தில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க பெரிதும் உதவுவதாகக் கூறப்படுகிறது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Stomach Bloating: இந்த பழங்களை சாப்பிட்டா வயிறு உப்புசமா இருக்குமாம்! வயிறு வீக்கத்தைத் தடுக்க என்ன செய்வது?

டெஸ்டோஸ்டிரோன் அளவுகளுக்கான மோசமான உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

இந்த உணவுகள் பெரும்பாலும் டிரான்ஸ் கொழுப்புகளையே கொண்டுள்ளது. இவை டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக அமைகிறது. மேலும் வேகவைத்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் துரித உணவுகள் போன்றவற்றைத் தவிர்ப்பது ஆரோக்கியமான ஹார்மோன் அளவைப் பராமரிக்க உதவுகிறது.

சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள்

அதிக சர்க்கரை உட்கொள்ளலின் காரணமாக இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கலாம். இது குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகளுடன் தொடர்புடையதாக அமைகிறது. சர்க்கரை பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளைத் தவிர்ப்பது ஆரோக்கியமான ஹார்மோன் அளவை பராமரிக்க உதவும்.

புதினா

புதினா புத்துணர்ச்சியூட்டும் பானமாக இருப்பினும், இது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. மிளகுக்கீரை டீ போன்றவற்றை எடுத்துக் கொள்வது குறிப்பாக, டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே இதன் நுகர்வு மிதமாக இருக்க வேண்டும்.

சோயா தயாரிப்பு

சோயாவில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் நிறைந்துள்ளது. இது உடலில் ஈஸ்ட்ரோஜனைப் பிரதிபலிப்பதுடன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கிறது. இது அவ்வப்போது உட்கொள்வது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தாது எனினும், வழக்கமான உட்கொள்ளலைக் கண்காணிக்கப்பட வேண்டும்.

டெஸ்டோஸ்டீரோன் அளவைப் பாதுகாக்கும் வகையில் இதில் கொடுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், சில உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Betel Leaf Rice: அதென்ன வெற்றிலை சாதம்? இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கா?

Image Source: Freepik

Read Next

நரம்புகளை வலுவாக்க வேண்டுமா.? இதை சாப்பிடவும்…

Disclaimer