Sat Sep 12, 2026 | 02:16 AM IST

Doctor Verified

காலை எழுந்தவுடன் செய்யும் இந்த 10 பழக்கங்கள் உங்கள் குடலை மற்றும் சக்தியை பாதிக்கும்.!

காலை பழக்கங்களில் சில தவறுகள் உங்கள் குடல் ஆரோக்கியத்தையும் உடல் சக்தியையும் பாதிக்கக் கூடும் என்று நிபுணர் எச்சரிக்கிறார். காலையிலேயே தவிர்க்க வேண்டிய 10 பழக்கங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

நம்முடைய உடலின் சக்தி, நோய் எதிர்ப்பு திறன், தினசரி உற்சாகம் – இவை அனைத்தும் அதிகமாகக் குடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை. ஆனால், பலருக்குத் தெரியாமலேயே காலை எழுந்தவுடன் செய்யும் சில தவறான பழக்கங்கள் குடலைக் கெடுத்து, சக்தியை குறைத்து விடுகின்றன என்று பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சௌரப் சேதி எச்சரித்துள்ளார்.

காலை தவிர்க்க வேண்டிய 10 பழக்கங்கள்

1. சர்க்கரை நிறைந்த சீரியல் சாப்பிடுதல்

சீரியல் என்றாலே ஆரோக்கியம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், பெரும்பாலான பாக்கெட் சீரியல்கள் சர்க்கரை நிறைந்தவை. இது குடலில் நல்ல பாக்டீரியாக்களை குறைத்து, எடை அதிகரிப்பு மற்றும் சோர்வை ஏற்படுத்துகிறது.

2. படுக்கையிலேயே மொபைல் பார்க்கும் பழக்கம்

எழுந்தவுடன் உடனே ஃபோனைத் திறந்து மெயில்கள், மெசேஜ்கள், சமூக வலைத்தளம் பார்க்கும் பழக்கம் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது நாளைய தொடக்கத்தைத் தவறாக பாதிக்கிறது.

3. வெறும் வயிற்றில் காபி குடித்தல்

பலரின் காலை காபியோடு தான் துவங்குகிறது. ஆனால், வெறும் வயிற்றில் காபி குடித்தால், ஆசிடிட்டி, குடல் எரிச்சல், குடல் நலம் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

4. தண்ணீர் குடிப்பதை தவிர்த்தல்

காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது குடலைச் சுத்தம் செய்து, மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது. இதை தவிர்ப்பது உடல் சோர்வுக்கும், மலச்சிக்கலுக்கும் காரணமாகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த அறிகுறிகள் இருந்தால்.. நீங்கள் தவறான முறையில் மலம் கழிக்கிறீர்கள் என்று அர்த்தம்..

5. கழிவறைக்கு போக நேரம் எடுக்காமல் விரைவில் ஓடிவிடுதல்

உடல் இயல்பாகவே காலை நேரத்தில் குடலை சுத்தம் செய்யத் தயாராக இருக்கும். அதற்கு நேரமளிக்காமல் பிஸியாக ஓடிவிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை உருவாகும்.

6. கழிவறையில் போன் ஸ்க்ரோல் செய்தல்

பலர் கழிவறைக்கு போகும் போதும் போனை எடுத்து ஸ்க்ரோல் செய்வது வழக்கமாக்கியுள்ளனர். இது நேரத்தை வீணாக்குவதோடு, உடல் இயல்பான குடல் இயக்கத்தைக் குறைத்து, பயில்ஸ் போன்ற பிரச்சனைகளுக்குக் காரணமாகலாம்.

7. முதல் உணவில் புரோட்டீன் தவிர்த்தல்

பலர் காலை உணவில் புரோட்டீனை தவிர்த்து, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை மட்டுமே உட்கொள்கிறார்கள். இது சக்தி குறைவாக உணர செய்வதோடு, குடல் நலத்தையும் பாதிக்கிறது.

8. காலை சூரிய ஒளி புறக்கணித்தல்

காலை நேர சூரிய ஒளி உடலுக்குத் தேவையான Vitamin D-ஐ தருகிறது. இதை தவிர்த்தால் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படும்.

9. அடிக்கடி அலாரம் 'ஸ்நூஸ்' அடித்தல்

அலாரம் அடித்தவுடன் மீண்டும் மீண்டும் தூங்கிப் போவது, உடலின் 'பயாலஜிக்கல் கிளாக்கை' கெடுத்து, சோர்வையும், குடல் செயல்பாட்டையும் பாதிக்கும்.

10. காலை உணவில் புரோட்டீன், ப்ரீபயாட்டிக்ஸ், ப்ரோபயாட்டிக்ஸ் தவிர்த்தல்

குடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன், ப்ரீபயாட்டிக்ஸ், ப்ரோபயாட்டிக்ஸ், பாலிஃபெனால்ஸ் ஆகியவை முக்கியம். காலை உணவில் இவைகள் இல்லாததால், குடல் நலம் பாதிக்கப்படும்.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

மருத்துவர் கருத்து

இந்த சிறிய தவறுகள் காலப்போக்கில் பெரிய குடல் பிரச்சனைகளுக்கும், சக்தி இழப்புக்கும் காரணமாகலாம். ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக்கொண்டால் மட்டுமே நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று டாக்டர் சௌரப் சேதி கூறுகிறார்.

இறுதியாக..

உடல் நலனும், குடல் ஆரோக்கியமும் நல்ல வாழ்வின் அடிப்படைகள். காலையிலேயே செய்யும் சில சிறிய மாற்றங்கள் நமக்கு நீண்டகால ஆரோக்கியத்தையும் சக்தியையும் தரக்கூடியவை. காபி, போன், சர்க்கரை சீரியல் ஆகியவற்றைத் தவிர்த்து, தண்ணீர், சூரிய ஒளி, ஆரோக்கியமான காலை உணவு ஆகியவற்றை முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. தனிப்பட்ட உடல் நல பிரச்சனைகளுக்கு, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

 

Read Next

இந்த அறிகுறிகள் இருந்தால்.. நீங்கள் தவறான முறையில் மலம் கழிக்கிறீர்கள் என்று அர்த்தம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 23, 2025 10:38 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content