Sat Sep 12, 2026 | 12:03 AM IST

Doctor Verified

குளிர்காலத்தில் எடை குறைக்க வேண்டுமா? காலையில் எழுந்தவுடன் இந்த 3 பழக்கங்கள் போதும்!

குளிர்காலத்தில் எடை குறைக்க முடியவில்லையா? காலையில் எழுந்தவுடன் பின்பற்ற வேண்டிய 3 எளிய பழக்கங்களை ஊட்டச்சத்து நிபுணர் விளக்குகிறார். கொழுப்பு எரிப்பு வேகமாக நடக்க உதவும் வழிகள்.

இன்றைய வாழ்க்கை முறையில், உடல் எடை அதிகரிப்பு பலருக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதன் விளைவாக சர்க்கரை, இரத்த அழுத்தம், மூட்டு வலி போன்ற பல உடல்நல சிக்கல்கள் உருவாகின்றன. எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பலர், குளிர்காலத்தில் தான் அதிகமாக தோல்வி அடைகிறார்கள். குளிர், சோர்வு, உடற்பயிற்சி செய்ய மனமின்மை – இதெல்லாம் காரணம்.

ஆனால் உண்மை என்னவென்றால், குளிர்காலமே எடை குறைக்க சிறந்த காலம் என்கிறார் ஜெய்ப்பூரில் உள்ள Angelcare-A Nutrition & Wellness Centre இயக்குநர், டயட்டீஷியன் & ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா ஜெயின். அவர் பரிந்துரைக்கும் 3 முக்கிய காலை பழக்கங்கள் இதோ.

குளிர்காலத்தில் எடை குறைக்க உதவும் 3 காலை பழக்கங்கள்

1. காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கவும்

காலையில் முதலில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது உடலை மீண்டும் நீரேற்றம் செய்யும், செரிமானத்தை தூண்டும், உடலின் உள் வெப்பநிலையை மெதுவாக உயர்த்தும், கொழுப்பு எரிப்பை தொடங்கும். இது இரவு முழுவதும் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைத்து, செரிமான அமைப்பை நாளுக்குத் தயார்படுத்துகிறது. பலர் இதில் எலுமிச்சை, இஞ்சி, சிறிதளவு தேன் சேர்த்து குடிப்பார்கள்.

இஞ்சி – வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் Thermogenic தன்மை கொண்டது. எலுமிச்சை – வைட்டமின் C நிறைந்தது; நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும். இந்த பழக்கம் சில நிமிடங்களே எடுத்தாலும், நாள் முழுவதும் உடலுக்கு நல்ல தொடக்கத்தை தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தூங்கிக் கொண்டே உடல் எடையைக் குறைக்க குளிர்காலத்தில் இந்த 5 உணவுகள் சாப்பிடுங்க..

2. காலையில் சிறிது நேரம் சூரிய ஒளி பெறுங்கள்

குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால், உடல் கடிகாரம் (Circadian Rhythm) பாதிக்கப்படும், சோர்வு, மனச்சோர்வு அதிகரிக்கும், பசி அதிகமாகும். இதனைத் தவிர்க்க, காலை 10–15 நிமிடங்கள் சூரிய ஒளி பெறுவது மிகவும் முக்கியம். மேலும் ஹார்மோன்கள் சீராகும், உடல் விழிப்படையும், பசியைக் கட்டுப்படுத்த உதவும், வைட்டமின் D உற்பத்தி அதிகரிக்கும்.

வைட்டமின் D குறைவாக இருந்தால் அதிக பசி, சோர்வு, எடை அதிகரிப்பு ஏற்படும் என ஆய்வுகள் சொல்கின்றன. வெளியில் நடக்க முடியாவிட்டால் திரைச்சீலைகளை திறந்து வைக்கவும். பிரகாசமான ஒளியுடன் வீட்டில் இருக்கவும்.

3. லேசான நீட்சி அல்லது யோகா – கட்டாயம் செய்யுங்கள்

காலையில் எழுந்தவுடன் கடுமையான உடற்பயிற்சி தேவையில்லை. இதற்கு பதிலாக லேசான நீட்சி, குறுகிய யோகா பயிற்சி. ஆழமான சுவாசம் செய்வதே போதுமானது.

இவ்வாறு செய்வதால் தசைகள் சூடாகும், இரத்த ஓட்டம் மேம்படும், உடல் இயக்கத்திற்கு தயாராகும், காலை விறைப்பு குறையும். சூரிய நமஸ்காரம், மென்மையான முதுகெலும்பு நீட்சி போன்றவை சிறந்தவை.

யோகா மன அழுத்தத்தையும் குறைக்கும். மன அழுத்தம் குறைந்தால், உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடும் பழக்கம் (Emotional Eating) குறையும் – இது எடை குறைக்க மிக முக்கியம்.

இறுதியாக..

குளிர்காலத்தில் எடை குறைப்பது கடினம் அல்ல. ஆனால் அதற்கு சரியான காலை பழக்கம், உடலுடன் ஒத்திசைவு, தொடர்ச்சியான முயற்சி அவசியம். காலையில் செய்யும் இந்த 3 எளிய மாற்றங்கள், உங்கள் கொழுப்பு எரிப்பை வேகப்படுத்தும், எடை குறைப்பை இயற்கையாக எளிதாக்கும். இன்றே தொடங்குங்கள் – நாளை மாற்றம் தெரியும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான உடல்நல விழிப்புணர்வுக்காக மட்டுமே. உங்களுக்கு தைராய்டு, ஹார்மோன் கோளாறு, இதய நோய் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், எடை குறைப்பு முயற்சிகளை தொடங்குவதற்கு முன் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெறவும்.

Read Next

தூங்கிக் கொண்டே உடல் எடையைக் குறைக்க குளிர்காலத்தில் இந்த 5 உணவுகள் சாப்பிடுங்க..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 15, 2025 19:58 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content