$
Seeds That Help In Boosting Immunity: இன்று பலரும் ஆரோக்கியமற்ற உணவு முறை, அதிகமான பணிச்சுமை, சரியான ஓய்வின்மை போன்றவற்றால் சோர்வடைகின்றனர். இதனால் நாள்தோறும் சோர்வடைந்து மற்ற செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு இல்லாமல் காணப்படுவர். இந்த சூழ்நிலையில் இவர்கள் தங்களது உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, உடல் பலத்தைத் தூண்டவும், அதிக ஆற்றலுடன் இருக்கவும் சரியான மற்றும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடல் ஆற்றலை அதிகரிக்க விதைகளுக்கும் பங்கு உள்ளது. இதில் உடல் ஆற்றலை மேம்படுத்த உதவும் விதைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Body Heat Reduce Foods: சுட்டெரிக்கும் வெயிலில் ஜில்லுனு இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க
உடல் ஆற்றலை அதிகரிக்க உதவும் விதைகள்
சியா விதைகள்
உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான விதைகளில் சியா விதைகளும் ஒன்றாகும். சியா விதைகளில் நார்ச்சத்துக்கள், புரதம், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் போன்ற செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது. இவை சிறந்த ஆற்றல் ஊக்கிகளாக செயல்படுகிறது. இதன் நார்ச்சத்து உள்ளடக்கம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நிலையான ஆற்றலை வெளியிடுவதில் பங்களிக்கிறது. கூடுதலாக, சியா விதைகளை உட்கொள்வது இதய ஆரோக்கியம், செரிமான மேம்பாடு மற்றும் எலும்பு வலிமைக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகள் தியாமின் என்ற வைட்டமின் பி1 கொண்ட நல்ல மூலமாகும். தியாமின் என்பது நமது உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்பு போன்றவற்றை ஆற்றலாக உடைக்க உதவுகிறது. இவை தசைகளை வளர்க்க உதவுகிறது. இந்த விதைகளில் அதிகளவு தாமிரம் உள்ளது. இது உடலில் உண்ணும் கொழுப்பை ஆற்றலுக்காக பயன்படுத்த உதவுகிறது.
எள் விதைகள்
இந்த விதைகள் புரதச்சத்து நிறைந்த விதைகள் ஆகும். குறிப்பாக, சராசரி உடல் எடை அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் தினந்தோறும் சிறிதளவு எள் விதைகளை சாப்பிட்டு வருவது உடலில் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மெல்லிய உடல் எடை கொண்டவர்கள் ஆற்றலை அதிகரிக்க எள் விதைகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இந்த விதைகளை உட்கொள்வது உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் தன்மையை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: கோடையில் வெறும் வயிற்றில் அஜ்வைன் டீ குடிப்பதால் என்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் இரும்பு, கால்சியம், வைட்டமின் பி2, பீட்டா கரோட்டீன் மற்றும் ஃபோலேட் போன்ற மற்ற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. இது உடலில் கொழுப்பின் அளவை பராமரித்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இந்த விதைகளில் உள்ள இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய கூறுகள் ஆற்றல் உற்பத்தி மற்றும் ஆரோக்கியமான உயிரியல் செயல்முறைகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆளி விதைகள்
ஆளி விதைகள் நார்ச்சத்துக்கள், புரதம், தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்றவற்றின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. இது உடலில் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. இதில் உள்ள புரதச்சத்து உடல் சோர்வை நீக்குகிறது. மேலும், இந்த விதைகளில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் போன்றவை மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்து மூளையை கூர்மையாக வைக்கிறது.
சணல் விதைகள்
சணல் விதைகளின் ஓட்டில் பெரும்பாலும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த விதைகள் குளோபுலின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்த வளமான மூலமாகும். சணல் விதைகளில் இம்யூனோகுளோபுலின்கள் நிறைந்துள்ளது. இவை நோயை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இவை உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
உடல் ஆற்றலை அதிகரிக்க இந்த ஊட்டச்சத்து மிக்க விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடுபவர்களா நீங்க? அப்ப முதலில் இத கவனியுங்க
Image Source: Freepik