Best way to consume desi ghee: நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தப்படும் விஷயங்களில் ஒன்று பசு நெய். பலவிதமான உணவுகளை தயாரிப்பது முதல் அதை உட்கொள்வது வரை பல வழிகளில் நெய்யை உட்கொள்கிறோம். இது நம் உணவுக்கு சிறந்த நறுமணத்தை தருவதுடன், அதன் சுவையையும் அதிகரிக்கிறது. நெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆயுர்வேதத்தில், நெய் அமிர்தத்துக்குக் குறையாததாகக் கருதப்படுகிறது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடலை உள்ளிருந்து வலுப்படுத்தவும் உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் நெய்யை தவறாமல் சாப்பிடு வந்தால் தோல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்கும். மேலும், இது நம்மை பல நோய்களில் இருந்து பாதுக்காக்கும். ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் வரலக்ஷ்மி யனமந்த்ராவின் தகவல்படி, ஆயுர்வேதத்தில் நெய் இனிப்பு, குளிர்ச்சியான மற்றும் கனமான பண்புகளைக் கொண்டதாக கூறப்படுகிறது.
முக்கிய கட்டுரைகள்

ஒருவர் தினமும் உண்ணக்கூடிய சத்தான உணவுகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் அதை சரியான வழியில் உட்கொள்ள வேண்டும். இதனை சரியான முறையில் உட்கொண்டால் மட்டுமே நெய்யின் முழுப் பலனையும் உங்களால் பெற முடியும். நெய் உட்கொள்ளும் போது, சில முக்கியமான விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். அந்த விஷயங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Tips: சட்டுனு உடல் எடையை குறைக்க பசு நெய்யை இப்படி சாப்பிடுங்க!!
நெய் சாப்பிடுவதற்கான விதிகள் மற்றும் சரியான முறை என்ன?

சூடான உணவுகளுடன் நெய் சாப்பிடுங்கள்
நீங்கள் எப்போதும் நெய்யை சூடான பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதை சூடான சப்பாத்தி மற்றும் காய்கறிகளுடன் சாப்பிடலாம். தினமும் காலை வெந்நீரை சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு உட்கொள்வதால், நெய் தொண்டையில் தேங்காது. மேலும், நெய் ஜீரணமாகி உடலால் உறிஞ்சப்படும்.
இந்த பதிவும் உதவலாம் : Ghee Benefits: வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
தேனுடன் ஒருபோதும் நெய் சேர்க்க வேண்டாம்

ஒரே நேரத்தில் தேன் மற்றும் நெய் கலக்கக்கூடாது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஆயுர்வேதத்தில், நெய் மற்றும் தேன் கலவையானது தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரான பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே, எப்போதும் தேன் மற்றும் நெய் ஆகிய இரண்டும் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். சிலர் வெந்நீரில் தேன் மற்றும் நெய் கலந்து சாப்பிடுவார்கள். அப்படி செய்வதை தவிர்க்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Skin Care Tips : உங்க முகம் எப்பவும் பளபளன்னு இளமையா இருக்கணுமா? பசும் நெய்யை இப்படி யூஸ் பண்ணுங்க!
நெய் சாப்பிட சரியான நேரம் எது?

ஆயுர்வேதத்தின் படி, காலை நேரம் மற்றும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஆனால், பித்த காலத்தில் இதை உட்கொள்ளும் போது, அதாவது மதியம் முக்கிய உணவோடு உட்கொள்ளும் போது, அல்லது உணவுக்கு சற்று முன் ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிட்டால், பித்த தோஷத்தை சமன் செய்யப்படும். செரிமான அமைப்பு மற்றும் சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.
Pic Courtesy: Freepik