Sat Sep 12, 2026 | 12:55 AM IST

Expert

Sprouts Benefits: எடையை குறைக்க முளைகட்டிய பயறு சாப்பிடுபவரா நீங்க? அப்போ இதை படியுங்க!

What are the instructions to eat sprouts: டயட்டில் இருக்கும் பலர் காலை உணவாக முளைகட்டிய பாசி பயறு மற்றும் முளைகட்டிய சுண்டல் சாப்பிடுவார்கள். குறிப்பாக ஜிம்மிற்கு செல்பவர்கள். ஏனென்றால், அதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் இது, எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உடலைக் கட்டமைக்கவும் தசை வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

அவற்றை உட்கொள்வது பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது. ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு முளைகட்டிய பயறு சாப்பிடுவதற்கான சரியான வழி தெரியாது. ஆயுர்வேதத்தின்படி, முளைகட்டிய பயறை சரியான முறையில் உட்கொண்டால் மட்டுமே அதன் முழுமையான பலனையும் பெற முடியும். நாம் செய்யும் சிறிய தவறுகள், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த பதிவும் உதவலாம் : sleeping tips: உங்களின் தூக்கத்தை கெடுக்கும் 5 கெட்ட பழக்கங்கள்!

முளைகட்டிய பயறு சாப்பிடுவதற்காக சரியான முறை குறித்து ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் சைதாலி ரத்தோர் விளக்கியுள்ளார். ஆயுர்வேதத்தில் முளைகட்டிய பயறு சாப்பிடுவதற்கு 3 விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும். இவை ஆரோக்கியமானது என்றாலும், சில விஷயங்களை மனதில் வைக்க வேண்டியது அவசியம். அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

முளைகட்டிய பயறு சாப்பிடுவதற்காக விதி

ஆயுர்வேதத்தின் படி முளைகட்டிய பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் சுண்டல் போன்றவற்றை எப்போதாவது எடுத்துக்கொள்வது நல்லது. உதாரணமாக, இவற்றை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். சாதாரண பீன்ஸ் மற்றும் தானியங்களை முளைகட்டிய தானியங்களுடன் சேர்த்தால், அவற்றிலிருந்து பெறப்படும் புரதம் மற்றும் கொழுப்பின் அளவுகளில் சில மாற்றங்கள் இருக்கலாம்.

நமது உடல் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இருப்பினும், முளைகட்டிய பயறு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. அதனால், ஜீரணிக்க கடினமாக இருக்கும். உங்கள் உணவில் முளைகட்டிய பயிறை சேர்ப்பதற்கு முன் இந்த விதிகளை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Food Allergies: இந்த மொத்த உணவுகளும் அலர்ஜியை ஏற்படுத்தலாம் தெரியுமா?

  1. உங்கள் தினசரி வழக்கத்தில் முளைகட்டிய பயிறை சேர்க்க வேண்டாம். வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுங்கள். ஏனெனில், இது ஜீரணிக்க கடினமானது மற்றும் மாற்று பண்புகளை கொண்டது.
  2. முளைகட்டிய பயிறை சாப்பிடுவதற்கு முன் வேகவைக்கவும். பச்சையாக சாப்பிட வேண்டாம். வேக வைத்து சாப்பிடுவதால், இது எளிதில் ஜீரணமாகும்.
  3. முளைகட்டிய பயிறை சமைக்கும் போது செரிமான மசாலா, சீரக தூள், கருப்பு மிளகு, கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள் போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும்..

Pic Courtesy: Unsplash

Read Next

Grape Juice: குளிர்காலத்தில் தினமும் வெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content